“ரசிகன்” நாவலுக்கு வந்துள்ள ஒரு எதிர்வினை: வணக்கம் எழுத்தாளரே .. நலம். நலம் வேண்டுகிறேன். ஐந்து நாட்களாக சாதிக்குடன் பயணித்துக்கொண்டிருந்தேன் ( என் பெயர்தான் கதைசொல்லிக்கும்! ). தீவிர இலக்கியத்தில் நான் வாசித்து முடித்த இரண்டாவது நாவல் " ரசிகன் " . பல வகைகளிலும் என்னைப் பாதித்த கதாப்பாத்திரங்கள் நாவல் முழுவதுமே இருக்கிறார்கள்.