![]() |
| ஜூலியன் பார்ன்ஸ் |
“சோகமான செக்ஸ் என்றால்
- அவளது வாயின் டூத் பேஸ்ட் அவள் சற்று முன் அருந்தியிருந்த ஷெர்ரி வைனின் வீச்சத்தை
மறைக்க முடியாது தோற்றிட, அவள் “கிறுக்கா என் பௌல், என்னை உற்சாகப்படுத்துடா” என முணுமுணுக்கையில்,
நீங்கள் அவ்வாறே செய்வீர்களே அது. அவ்வாறு அவளை குதூகலப்படுத்துவது உங்கள் குதூகலத்தை குறைப்பது
எனப் பொருள்பட்டாலும்.
சோகமான செக்ஸ் என்பது மன அழுத்த மாத்திரையின் மென்மையான மயக்கத்தில்
அவள் இருக்கையில் நிகழ்வது. அப்படி செய்தால் அவளை சற்று மகிழ்ச்சிப்படுத்தலாம் என நினைத்து
நீங்கள் புணர்ச்சியில் ஈடுபடுவது.
சோகமான செக்ஸ் என்பது – நீங்களே நிர்கதியில் இருக்கிறீர்கள்,
உங்கள் நிலை மீட்க முடியாத ஒன்றாய் இருக்கிறது, உங்கள் முன்கதை அவ்வளவு கசப்பானது,
நாளுக்கு நாள் நொடிக்கு நொடி உங்கள் ஆத்மாவின் சமநிலை ஆட்டம் கண்டு வருகிறது, அப்போது
சில நிமிடங்கள், ஒரு அரைமணிநேரம் உங்களை செக்ஸில் தொலைக்கலாமே என நினைத்து நீங்கள் ஈடுபடுவது.
ஆனால் ஒரு நானோ செகண்ட் கூட உங்களையோ உங்கள் ஆன்மாவின் கதியையோ நீங்கள் மறக்க இயலாது போவது.
சோகமான செக்ஸ் என்பது அவளுடனான எல்லா தொடர்புகளை நீங்களும்,
உங்களுடனானதை அவளும் இழப்பதாய் நீங்கள் உணர்வது, ஆனால் இதன் மூலம் அவளும் நீங்களும்
ஒன்றாய் இன்னமும் உணர்வதாய் எப்படியோ தோன்ற செய்யலாம் என நம்புவது; நீங்கள் இந்த உறவை
இன்னமும் கைவிட தயாராக இல்லை என தெரிவிப்பது, உங்களது ஒரு பகுதி அதற்கு அவசியமில்லை
என உணர்த்தினாலும் கூட. பிறகு நீங்கள் உணர்வீர்கள் – பிணைப்பை தக்க வைக்கும் ஒன்று
வலியை நீட்டிப்பதுமே என்று.
(…)
சோகமான செக்ஸ் என்பது அவள் நிதானமாய் இருக்கையில், இருவரும்
பரஸ்பரம் இச்சையுடன் இருக்கையில், என்ன ஆனாலும் நீங்கள் அவளை நேசிப்பீர்கள் என நீங்கள்
உணர்கையில், அவளும் அவ்வாறே அறிகையில் நிகழ்வது, ஆனால் அதேவேளை – இருவருமே ஒருவேளை - பரஸ்பரம்
நேசிப்பது அவசியமாய் மகிழ்ச்சியில் போய் முடிய வேண்டியதில்லை என புரிதல் கொள்கையில்
நடப்பது. ஆக, உங்கள் முயக்கம் என்பது இப்போது ஆறுதலுக்கான தேடல் என்றல்லாமல் பரஸ்பரம்
மகிழ்ச்சியின்மையை மறுப்பதற்கான ஒரு முட்டாள் முயற்சியாய் மாறி விட்டது.” (126-127)
- ஜூலியன் பார்ன்ஸின் The Only Story நாவலில் இருந்து.
