Monday, August 20, 2018

மனுஷ்யபுத்திரன் ஏன் எப்போதும் மதவாதிகளுக்கு இலக்காகிறார்?


Image result for h rajaImage result for manushya puthiran


தனது “ஊழியின் நடனம்” கவிதைக்காக தற்போது எச். ராஜா உள்ளிட்ட தமிழக இந்துத்துவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் மனுஷ்யபுத்திரன். அது சற்றே சிக்கலான கவிதை; அதை எச். ராஜா படித்து புரிந்து கண்டித்து மனுஷை கைது செய்ய வேண்டுமென கோரியிருக்கிறார் என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை எத்தனையோ முறை மனுஷ் மோடியையும் பாஜகவினரையும் கடுமையாய் தாக்கி எழுதியிருக்கிறார். ஏன் அப்போதெல்லாம் கொதிக்காத ராஜா இப்போது கொந்தளிக்கிறார்? ஏன் மனுஷின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து, அவரைத் தாக்கும்படி தன் கட்சியினரை தூண்டி விட்டு, மனுஷை நிலைகுலைய வைக்க முயல்கிறார்?

Sunday, August 19, 2018

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்: நாள் இரண்டுஇந்த டெஸ்ட் தொடரில் என் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பது ஆடுதளங்கள் தாம். அவை இங்கிலாந்தில் உள்ள வறட்சி காரணமாய் காய்ந்து தளர்ந்து போயுள்ளன.

கிழக்கு பதிப்பக சிறுகதைப் போட்டி


கிழக்கு பதிப்பகம் நடத்தும் சென்னை நாள் சிறுகதைப் போட்டிக்கான நடுவர்களில் ஒருவராய் 44 கதைகளைப் (நானூற்று சொச்சம் பக்கங்கள்) படித்து மதிப்பெண் இட்டு இப்போது தான் அனுப்பி விட்டேன். கதைகள் பற்றின என் கருத்துக்களை இப்போதைக்கு கூறப் போவதில்லை. ஆனால் பொதுவாக ஆர்வமூட்டும் சற்றே ஆச்சரியப்படுத்தும் ஒரு  நல்ல வாசிப்பு அனுபவமாய் இது அமைந்தது எனபதை நிச்சயம் குறிப்பிட வேண்டும்.

Saturday, August 18, 2018

இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்


Image result for india england test
மூன்றாவது டெஸ்டில் இந்தியா முதலில் மட்டையாடி 307 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் இழந்துள்ளது. இதுவரையிலும் இந்தியா தடுமாறி ரொம்ப கேவலமாய் சொதப்பி வந்துள்ளதைப் பார்த்தவர்கள் இந்த ஸ்கோரைக் கண்டு சபாஷ் என சொல்லலாம். ஆனால், இந்த ஆடுதளம் சற்றே மெத்தனமானது. இதில் முன்னூற்று சொச்சம் நல்ல ஸ்கோர் அல்ல. நாளைக் காலை இந்தியா மளமளவென விக்கெட்டுகளை தியாகம் செய்து ஆல் அவுட் ஆனால் ஆட்டத்தில் தோற்பது உறுதி. 
இந்தியா எந்தெந்த விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

“முலைகள்” கடந்து வந்த பாதைபண்டைய தமிழர் நம்மைப் போல பெண்ணுடலை பொத்திப் பாதுகாக்க வேண்டிய “செல்வமாக”, ஆண் சமூகத்தின் “உடைமையாக” கருதினார்களா அல்லது அது மிக இயல்பான ஒன்றாக கருதப்பட்டதா? இன்று இந்நிலை எப்படி உள்ளது? இலக்கியத்தில் இதற்கு கிடைக்கும் பதில்கள் என்ன?
கம்பராமாயணம் போன்ற காப்பியங்களோ, திருக்குறள் போன்ற நீதி இலக்கியமோ, சங்க இலக்கியமோ பெண் உடல் வர்ணனைகள் மலிந்து கிடக்கின்றன. கொசலை நாட்டு தெருக்களில் எதிர்படும் மகளிர், அந்தரப்புர அழகியர் என யாரைக் குறித்தென்றாலும் கம்பன் தடமுலைகளைக் குறிப்பிடாமல் நகர்வதில்லை. ஏன்?

Thursday, August 16, 2018

நானும் கலைஞருக்காக கண்ணீர் விடுகிறேன்!


 Image result for karunanidhi
கலைஞருக்காக இரங்கல் தெரிவித்தவர்களில் பலவகையினரும் இருந்தார்கள்; அவர்களுக்கும் கலைஞருக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா, உண்மையிலே மனதில் இருந்து தான் சொல்கிறார்களா எனும் குழப்பம் பலருக்கும் உண்டாகியிருக்கும்.

Wednesday, August 15, 2018

பொறாமையை எதிர்கொள்வது


நான் எழுத வந்த இந்த பத்து வருடங்களில் இலக்கிய உலகில் பல பூசல்களைக் கண்டிருக்கிறேன். பெரும்பாலும் காரணம் பொறாமை தான். பெருமாள் முருகன் “மாதொரு பாகன்” சர்ச்சையில் மாட்டிக் கொண்டு துச்சாதனர்களால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, அந்த அவலச்சூழலிலும் அவரைக் கண்டு கண்ணீர் உகுக்காமல் “என்ன இவருக்கு மட்டும் ஓவராய் கவனம் கிடைக்கிறது?” என மூக்கில் விரல் வைத்தவர்கள், அந்த பொறாமையினாலே அவரைக் கடுமையாய் வைதவர்களைத் தெரியும். நான் இதுவரையில் அடுத்தவர்களுக்குக் கிடைக்கும் புகழ், கவனம் கண்டு வயிறெரிந்ததில்லை. நான் நல்லவன் என்பதால் அல்ல. நான் இதையெல்லாம் கவனித்ததே இல்லை. அடுத்தவர்களின் பணம், வசதி, அழகிய காதலிகள் கூட என்னை உறுத்தியதில்லை. மண்ணில் முகம் புதைத்த நெருப்புக் கோழி போன்றே இத்தனைக் காலமும் இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த ஆறுமாதங்களில் என் மனம் சட்டென மாறி விட்டது. எதற்கும் யாரைப் பார்த்தாலும் பொறாமை எனும் நிலைமை! சும்மா சாலையில் பஞ்சுமிட்டாய் விற்கிறவரைப் பார்த்தால் கூட என் கண்ணில் பொறாமை எட்டிப் பார்க்கிறது.

Sunday, August 12, 2018

பிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)


Image result for bigg boss tamil

வீட்டுக்குள் நாம் சண்டை போடும் போது கோபத்தை நேரடியாக காட்ட மாட்டோம். மாறாக, ஒரு பெரிய கோபத்தை ஒரு அற்ப கோபமாய் காட்டுவோம். நேற்று நீ என்னை அழ வைத்தாய் என்பதை நேரடியாய் சொல்லி சண்டை போட மாட்டோம். பதிலுக்கு, இன்று நீ என்னை வெங்காயம் நறுக்க செய்து அழ வைத்தாய் பாதகி / பாதகா என கூப்பாடு போடுவோம்.

Saturday, August 11, 2018

பிச்சைக்காரன்: மகாபாரத டெம்பிளேட்


 Image result for pichaikaran movieImage result for badshah rajinikanth
வெளியான சந்தர்பத்தில் வெகுவாக பாராட்டப்பட்ட படம் “பிச்சைக்காரன்”. நான் இப்படத்தை அப்போது பார்த்த போது ஒரு தெளிவான நேர்த்தியான திரைக்கதை அமைப்பு (சண்டைக்காட்சிகளைத் தவிர) கொண்ட படம், அம்மா செண்டிமெண்டை மெலோடிராமா இன்றி பயன்படுத்திக் கொண்ட படம் என்கிற அளவிலே ரசித்தேன்.

கண்ணுக்குத் தெரியாமல் பேட்டரியை கொல்லும் ஆப்கள்

Image result for phone charge draining fastநான் ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவன் அல்ல. பேஸ்புக் எட்டிப் பார்க்கவும் பாட்டுக் கேட்கவும் மட்டுமே போனை பயன்படுத்துவேன். போன் பேட்டரி இரவில் சார்ஜ் போடும் வரை தாங்கும். சமீபத்தில் என் போன் திரை நொறுங்கியது. அதோடு பேட்டரியும் நீரிழிவு நோயாளி போல் அடிக்கடி பசித்து சோர்ந்து கொண்டே வந்தது. ரெண்டு மணி நேரம் இணையத்தில் புழங்கினாலே 60%க்கு குறைந்து விடும். அதோடு பாட்டும் கேட்டால் மதியத்துக்குள் 20% வந்து விடும். பகல் முழுக்க தாங்க வேண்டும் என்றால் இரண்டு முறை சார்ஜ் செய்ய வேண்டும்.