சப்பைக்கட்டுக்காக சொல்லவில்லை - பிரான்ஸைப் போல இந்தியா முழுமையான மதசார்பற்ற நாடு அல்ல. இந்தியாவில் அரசியல்வாதிகள், பிரதமர்கள், முதல்வர்கள் எல்லாருமே வெளிப்படையாக மதச்சின்னங்களை பாவிப்பார்கள், நிகழ்வுகளில் பங்கு கொள்வதை பிரச்சாரம் ஆக்குவார்கள், அவர்களுடன் ஒட்டுறவில் இருக்கும் அதிகாரிகளும் இவ்வாறே இருப்பார்கள். சிறுபான்மை மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்களிலும் மதத்தை / மதக்கருத்துக்களை போதிப்பதில் சட்டரீதியாக தடையில்லை (ஆனால் துபாய் போன்ற நாடுகள் அனுமதிக்காததால் அங்கு இதைவிட நிபந்தனைக்குட்பட்ட மதசார்பின்மை உள்ளது.) நாம் ஏன் மதவாத மதசார்பின்மை தேசமாக இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள 18-19ஆம் நூற்றாண்டுக்குப் போக வேண்டும் - இந்தியாவின் சமூக சீர்திருத்த, அரசியல் எழுச்சி அமைப்புகள், நிகழ்வுகள் மதத்தின் அடிப்படையில் தோன்றியவையே. நமது சுதந்திரப் போராட்டமும் அதன் நீட்சியே. நம்மை ஆண்ட பிரிட்டீஷ் அரசும் இதை ஊக்குவித்தது. அவர்கள் காலத்தில்தான் -1870இல் - கும்பமேளா மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. பிரிட்டீஷார் இதை வருமான வ...