மக்களின் அடிப்படைப் பிரச்சினை பணமும் ஏற்றத்தாழ்வும் பொருண்மை உலகில் போதாமைகளுமே. ஆனால் அதைக் குறித்து விசனிக்க, கோபிக்க, கொந்தளிக்க, கலவரம் செய்யாமல் மனிதனை ஒரு பக்கம் கடவுள், பணம், பொழுதுபோக்கு தடுக்கிறது எனில் இன்னொரு பக்கம் நாக்பூர் மாதிரியான கலவரங்களும் கோபத்தை வெறுப்புக்கு திசைதிருப்பும், வடிகாலாகின்றன; ஆட்சியாளர்கள் அரியணையில் நீடிக்க உதவுகின்றன. மதம் சார்ந்த மற்றமை (இஸ்லாமியர்) இங்கு ஒரு பொருட்டு மட்டுமே. இஸ்லாமியர் இல்லாவிடில் வேறொரு மற்றமை. இங்கும் எங்கும் எப்போதும் மதவாதம் கலவரத்தை தூண்டாது - அதிருப்தியும் போதாமையுமே கலவரத்தின் எரிபொருள்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share