Skip to main content

Posts

Showing posts from August, 2025

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

மொண்டெய்ன் - ஒழுங்கின் கொடுங்கோன்மை

  மொண்டெய்ன் தனது On Experience எனும் கட்டுரையில் வழக்கறிஞர்கள் பிரச்சினைகளை உருவாக்கி அவற்றுக்கு மத்தியஸ்தம் பண்ணிவைத்து சம்பாதிப்பவர்கள், அதனாலே காலனிகளைத் தேடிச் செல்லும் குழுவினரிடம் மன்னர் பெர்டினெண்ட் வழக்கறிஞர்களை மட்டும் அழைத்துச் செல்லக்கூடாது எனச் சொன்னதாகக் குறிப்பிடுகிறார். அது இந்த காலத்துக்கு வெகுப்பொருத்தமாக உள்ளது. இன்று ஒரே வித்தியாசம் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்கு இணையாக தேர்தல் ஆணையமும் தவறு செய்யாத மக்களை பிரஜைகள் அல்லரென்றும், ஆவணங்கள் இல்லாதவர்கள் என்றும் தம் இஷ்டத்துக்கு பாவித்து அவர்களை "நீங்களே உங்களை அப்பழுக்கற்றவர்கள் என ஆவணங்களைத் தாக்கல் செய்து நிரூபியுங்கள்" என்கிறது. அரசு கண்ணை மூடித்திறக்கும் முன் ஒரு சட்டத்திருத்தம் பண்ணி பெருங்குழப்பத்தில் மக்களை ஆழ்த்துகிறது; மக்கள் இடையே சச்சரசவும் குழப்பமும் தோன்ற அதைத் தீர்ப்பதாகச் சொல்லி தன்னை தலைமையாக நிறுவுகிறது. தானே ஏற்படுத்திய வரிகளைத் தானே குறைத்து தன்னைப் பாராட்டிக் கொள்கிறது. தான் திணித்த எதேச்சதிகாரச் சட்டத்தை தானே மட்டுப்படுத்தியோ தற்காலிகமாக நிறுத்திவைத்தோ அதை மனிதநேயமும் என்றும் பண்பென்றும்...

வாய் மட்டும் இல்லாவிட்டால்...

  நேற்று பிரதமர் உரையாற்றும்போது ஜி.எஸ்.டியில் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாகவும், அதனால் விலைவாசி குறைந்து மக்களால் அதிகமாகச் செலவழிக்க முடிந்து, பொருளாதாரம் வளரப் போகிறது (அதாவது, பொருளாதார வீக்கம் குறையப்போகிறது) என்றார். அதைக் கேட்கையில் அடடா என்றிருந்தாலும் ஐயய்யோ என்றும் இருந்தது. இவர்கள் என்ன சொன்னாலும் செய்வது இன்னொன்றாக இருக்குமென்பதே நம் அனுபவம். இன்று செய்தியில் ஜி.எஸ்.டி மாறுதலால் எந்த பொருட்களுக்கெல்லாம் விலை குறையும் என்று போட்டிருந்தார்கள். டி.வி. ஏஸி போன்ற மின்னணு சாதனங்கள், சைக்கிள், பேக்கரி ஐட்டங்கள், சேவ் போன்ற நொறுக்குத்தீனிகள், கண்ணாடி, மருந்துகள், நோட்டுப் புத்தகங்கள், பேனா போன்ற கல்விக்கான பயன்பாட்டுப் பொருட்கள். இதை அவர் இந்திய மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்று அறிவித்திருக்கிறார். ஆனால் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு அவர் வரியைக் குறைக்கவில்லை. அதாவது அன்றாட உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கும் முயற்சியை எடுக்கவில்லை. முக்கியமாக பெட்ரோல், டீஸல் மீதான ஜி.எஸ்.டியை வெகுவாக குறைத்து அதன்வழியாக அதன் விலையைக் குறைக்கவில்லை. சும்மா ஏ.ஸி, டி...

ஒப்பந்தத் தொழிலாளர்கள் - அயோத்தி ராமி ரெட்டியின் மோசடி வரலாற்றில் மற்றொரு மைல் கல்

  ராம்கி நிறுவனத்தின் தலைவர் 'அல்ல அயோத்திய ராமி ரெட்டி' மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை வழக்குகள் மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவரது நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2021இல் உலக வங்கிக் குழுமமே அமெரிக்காவில் இவர்களை ஒரு முறைகேட்டின் பெயரில் தடைபண்ணி விட்டார்கள் (பெரிய சம்பவக்காரர்கள்). ஏற்கனவே சென்னையில் 2012இல் பணிகளைச் சரிவரச் செய்யாததற்காக சென்னை மாநகராட்சி இவர்களுடனான ஒப்பந்தத்தைத் தடைபண்ணியுள்ளது. இவர்களுடைய முறைகேடுகளின் பட்டியலை பதிப்பித்தால் அது ஜெயமோகனின் வெண்முரசு அளவுக்கு நீண்டுவிடும் என்பதால் அதை இங்கே செய்ய முடியாது. ஆனால் இவரது நிறுவனங்களுக்குத் தொடர்ந்து இந்தியா முழுக்க ஒப்பந்தங்களை ஏன் வழங்குகிறார்கள்? இவர் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்பி. ஜெகன் மோகன் ரெட்டியின் வலதுகை என அறியப்பட்டவர். அண்மையில் இவர் பாஜக பக்கம் சாய்ந்து விட்டாரோ என ஐயம் நிலவியது. இல்லை நான் ரெட்டிகாரு பக்கம்தான் என ஒரு கையை ஜெகன் மோகன் பக்கமும் நீட்டினார். துப்புரவுப் பணியாளர் சம்பளப் பிரச்சினைக்குப் பின்னால் முறைகேடுகளின் மலைத்தொடரே ஓடுகிறது. ராமி ரெட...

எலிவளைகளின் கதை

  அரசு தரவேண்டிய சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்கும்போது பணியாளர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை. அரசு தன் செலவைக் குறைக்கும் நோக்கத்தில் மட்டும் இதைச் செய்வதில்லை. இதன்பின்னர் அதிகாரிகளில் இருந்து அரசியல் தலைவர்கள் வரை பெரும் தொகையைப் கையூட்டமாகப் பெற முடியும். சொல்லப்போனால் ஊழல் என்பதே ஆளுங்கட்சி ஒப்பந்தப் பணிகளை தனியாருக்குக் கொடுக்கும்போது அரசின் நிதியில் இருந்து பெரும் தொகையொன்றை உருவி தமக்குள் பங்கிட்டுக் கொள்ள முடியும் எனும் நடைமுறைதான். தனியாரும் அரசும் இணையும்போதே ஊழல் பிறக்கிறது (லெஸ்லி ஹோ ம்ஸ் தனது "ஊழல்: மிகச்சுருக்கமான அறிமுகம்" நூலில் நிறுவுகிறார்.). அரசு அதிகாரிகள் மக்களிடம் பெறும் கையூட்டையே நாம் பிரதானப்படுத்துகிறோம். அது மிகச்சிறு தொகை. உண்மையான ஊழலென்பது அதற்கு வெளியே நிகழ்வதே. அரசுகள் பொதுவாக டெண்டர் விடுவது, ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிப்பது என ஆவணமாக்கலில் மட்டுமே கவனமாக இருப்பார்கள், பணப்பரிவர்த்தனையை அதற்கு வெளியே வைத்துக் கொள்வார்கள். இதன் விளைவை நாம் ஒப்பந்தத்துக்குள் வரும் தனியாரின் தரமற்ற சேவையிலும் அங்கு வேலை பார்ப்போருக்குக் கிடைக்கும் மோசமான ஊத...

எடை குறைப்பு மருந்தின் ஆபத்து

  மௌஞ்சாரோ, வெகோவி ஆகிய மருந்துகள் இந்தியாவுக்குள் பிரவேசித்திருக்கின்றன. வாரம் ஒருமுறை இதை ஊசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஊசியைப் போட்டுக்கொண்டதும் பயனருக்குப் பசி குறைந்து அவர் தன் உணவைக் குறைவாக உண்படுவதால் எடை குறைகிறது. அமெரிக்காவில் இதைப் பயன்படுத்தியோர் சொல்லும் முக்கிய புகார் ஊசியை நிறுத்தியதும் திரும்ப எடை வந்துவிடும் என்பது. அதாவது இச்சிகிச்சை உங்களை மருந்துக்கு அடிமையாக்கும் - எடையைத் தக்கவைக்க ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்து, எடை அதனளவில் ஒரு பிரச்சினை அல்ல. எடை என்பது 'பசித்த உடலின் அறிகுறி'. அதாவது உடல் நல்ல சத்தான உணவின்றி குப்பையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஹார்மோன் கோளாறுகள், கைகால், முட்டி, முதுகுவலி, மனப்பிரச்சினை, தூக்கமின்மை, அசதி, இதய தமனியில் அடைப்பில் இருந்து புற்றுநோய் வரை. சிலருக்கு கொழுப்பு செல்கள் பெருகி உடல் கனக்கிறது. ஒருவிதத்தில் இது நல்லதே - இதைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து உடலை அவர் சீராக்க முடியும். சிலருக்கு உடல் ஒல்லியாக இருக்கும், ஆனால் உள்ளுறுப்பைச் சுற்றி கொழுப்பு ...

ஜெரார்ட் ஜெனெட் - குறிப்பு 1

  ஜெனெட் (1930 – 2018) கதையியலில் பெயர்பெற்றவர். ஆய்வாளர். பிரஞ்சுக்காரர். ஜெனெட்டின் முக்கியமான நூல் Narrative Discourse: An Essay in Method. இது புனைவின் மொழியை வலுப்படுத்த, சொற்களின் தேர்வு, வாக்கிய அமைப்பின் வழியாக நுட்பமான தாக்கத்தை வாசகரிடம் ஏற்படுத்த நமக்குக் கற்றுத் தருகிறது. குறிப்பாக, நாமொரு கதையை எழுதி முடித்தபின்னர் அதைத் தொழில்நுட்பரீதியாகப் புரிந்துகொண்டு திருத்தவும், அதை சரியாக அமைந்துள்ளவற்றை செறிவாக்கவும், சரியாக வராதவற்றைத் திருத்தவும், மீளெழுதவும் நமக்கு இந்நூலில் உள்ள கருத்தமைவுகள் உதவுகின்றன. ஜெனெட் ஒரு அமைப்பியல்வாதி. அதாவது அவர் அர்த்தம் எப்படித் தோற்றுவிக்கப்படுகிறது எனக் கேட்டு அர்த்தத்தை ஒரு அமைப்பே உண்டு பண்ணுகிறது என விடையை அடைகிறவர். குடும்பம் எனும் அர்த்தம் எப்படித் தோன்றுகிறது? இரண்டு பேர் சேர்ந்து சில செயல்களில் ஈடுபடும்போது குடும்பம் எனும் அர்த்தம் தோன்றுகிறது. அச்செயல்களில் ஒவ்வொன்றும் ஒரு அமைப்பு. ஒரு வீட்டுக்குள் அவர்கள் சேர்ந்து வாழ்வது என்பதும் குடும்பத்தை அர்த்தப்படுவதே. பாலுறவு கொள்வது, சமைத்து சாப்பிடுவது, குழந்தை பெற்றுக்கொள்வது இப்படி ஒவ்...

3 BHK

இப்படத்தில் வரும் பல்வேறு கருத்துக்கள், தருணங்கள் எனக்குப் பிடித்திருந்தன. இந்தக் காலத்தின் மத்திய வர்க்கச் சிக்கல்கள் இரண்டை எடுத்திருக்கிறார்கள்: பிடிக்காத வேலை, அதில் அவமானம், தோல்வியிலே நீடித்திருப்பது, எதிர்காலத்துக்காக வாழ்வது, வீடு போன்ற ஒற்றை அபத்தக் கனவுக்காக வாழ்க்கையைத் தியாகம் பண்ணுவது. மக்களின் உணர்வுகளை நேரடியாகத் தொடும் நோக்கில் படத்தைத் திட்டமிட்டிருக்கிறார்கள். சரத்குமாரின் பாத்திரமான வாசுதேவன் நன்றாக எழுதப்பட்ட பாத்திரம் - அவர் தன் குழந்தைகள் நல்ல வீட்டுக்குப் போய் வாழவேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தியே முடிவுகளை எடுக்கிறார். அதை நோக்கி ஒவ்வொருவரையாக நகர்த்துகிறார். பிடிக்காத குடும்பத்தில் மகளை வாழ வைப்பது, அதற்காக மகனைக் கடன் வாங்க வைப்பது, பிடிக்காத படிப்பில் மகனைத் தள்ளுவது, அதற்காக தியாகம், குடும்பம், முயற்சி போன்ற செண்டிமெண்டுகளைப் பயன்படுத்துவது - அவரது இந்த தந்திரத்தை அவரது பிள்ளைகள் கடைசியில் புரிந்துகொள்வது, அவரது மனைவியே அதை ஓரிடத்தில் சுட்டிக் காட்டுவது படத்தின் நல்ல பகுதிகள். ஆனால் இப்படத்தைப் பார்க்கையில் ஏதோ ஒன்று சரியாக வரவில்லை எனத் தோன்றிக்கொண்டே இருந...

ஒரு பதிப்பாளர் இளம் நாவலாசிரியருக்குச் சொல்ல விரும்புவதென்ன?

நேற்றைய வகுப்பில் நடந்த பதிப்பாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட்டவற்றை நாவல் வகுப்பின் மாணவரான மாலதி பதிவாக்கியிருக்கிறார். படித்துப் பாருங்கள்: நாவல் உலகில் எது வெற்றி தோல்வி என்று பார்த்தால் குறிப்பிட்டு சொல்ல முடியும். நான் இதுவரை 400 டைட்டில்ல பண்ணியிருக்கிறேன். சிறுகதைகள் என்றால் அதற்கு தனியாக அட்டெண்டஸ் இருக்கும். ஆனால் பப்ளிஷ் பண்ணுவதற்கு நாவல்தான் முக்கியம். ஒருவர் எத்தனை நாவல் பதிப்பித்து கையில் வைத்திருக்கிறார்கள் என்றுதான் பார்ப்போம். ஒவ்வொரு எழுத்தாளரும் தான் எழுதும் நாவலை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். 2019 ல் 9 நாவல்கள் புதிய தலைமுறையை சேர்ந்த நாவல்கள் பதிப்பித்தோம். கிட்டத்தட்ட 6 துறைகளை சேர்ந்த நாவல்கள். துறை சார்ந்த நாவல்கள் என்றால் வாசகர்களிடம் ஒரு ஈர்ப்பு இருப்பதை மறுக்கவே முடிவதில்லை. மினிமம் ஒரு நாவலாவது வணிக ரீதியாக ஜெயிக்கும். உதாரணமாக பயர் சர்வீஸ் சம்பந்தப்பட்ட ஒரு கதை. அதில் உள்ள கன்டென்ட் தனிப்பட இருந்தது. கவனத்தை ஈர்த்தது. கணேஷ் குமாரின் குருநாவல், நோய்மையை அடிப்படையாகக் கொண்டது. டயபட்டிக் அறுவை சிகிச்சையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதெல்லாம் துறைகள் சம்...

தேர்தல் ஆணைய முறைகேடு 2

  ராகுல் காந்தி அம்பலப்படுத்தியுள்ள முறைகேடுகள் வாக்காளர் பட்டியலிலும் வாக்களிப்பிலும் நடக்காமல் இருக்க என்ன வழி? ஒன்றிய அரசின் மிதமிஞ்சிய அதிகாரம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். மக்களே உணர்ந்து போராடி அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொணர வேண்டும். ஒன்றிய அரசு ஆட்சியில் உள்ள ஐந்தாண்டுகளும் அவ்வபோது கருத்துக்கணிப்பின் வழியாக விசாரிக்கப்பட்டு மதிப்பிடப்பட வேண்டும். அரசைத் தொடர்ந்து கண்காணித்து மட்டுப்படுத்தும் நேரடி அதிகாரத்தை பொதுமக்களுக்கும் நீதிமன்றம், என்.ஜி.ஓ போன்ற அமைப்புகளுக்கு கொடுப்பதுதான் சரியான மக்களாட்சிக்கு இடமளிக்கும். தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வழியாக ஆளும் அரசைத் தண்டிக்கும் சட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். ஒருமுறை வென்றால் அடுத்த தேர்தல் வரை யாரும் கையை வைக்க முடியாது எனும் பாதுகாப்பு ஆபத்தானது. இப்போது பாருங்கள் - ஊடக முதலாளிகளை மோடி அரசு தன் கட்டுக்குள் வைத்துள்ளது. யாரும் வாயைத் திறப்பதில்லை. தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் ஆதார் போன்ற சான்றுகளைக் கொண்டு வாக்காளர்களை ஏற்கலாமே எனக் கேட்க அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. தேர்தல் ஆணையம் மோடியின், அமித் ஷாவின் கைப்ப...

தேர்தல் ஆணைய முறைகேடு 1

  ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரசியலைமைப்புச் சட்டநூலை வைத்து செய்த பிரச்சாரம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இப்போது அதைப் போல தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கடந்த தேர்தலில் பாஜக வென்றது போலி வாக்காளர்களை கோடிக்கணக்கில் உருவாக்கி ஓட்டுக்களைத் திருடியா என்று அவர் எழுப்பும் கேள்வி மக்களிடம் ஏற்கனவே உள்ள சந்தேகத்தை வலுவாக்கி உள்ளது. என்னைச் சுற்றிலும் பலரும் அதை விவாதிப்பதைக் காதால் கேட்கிறேன். ஏதோ ஒரு முறைகேடு நடந்துள்ளது என்பது நிச்சயம். ஆனால் அதன் பரப்பும் வீச்சும் என்ன என்பதை தேர்தல் ஆணையம் தரவுகளை பொதுவில் வைத்தால் மட்டுமே ஆய்வு பண்ணிக் கண்டுபிடிக்க முடியும். ஸ்கேன் செய்ய முடியாத காகிதங்களை பக்கம்பக்கமாக அலசி இந்த தரவுகளை ராகுலின் குழு எடுத்திருப்பதே இமாலய சாதனைதான். நியாயமாக இதை நம் ஊடகங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் பாஜாவின் மசாஜ் பார்லர் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு ஒரே ஒரு விசயத்தில் மட்டுமே மாற்றுக் கருத்து உள்ளது: தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அத...

தாய் சொல்லைத் தட்டாதே

எனக்குப் பதினைந்து வயது இருக்கும்போது, நான் கல்லூரியில் கணிதம் / கணினியியல் / அறிவியல் படிக்க வேண்டும் என என் அம்மா ஆசைப்பட்டார். எனக்கு இலக்கியத்தைத் தவிர எதிலும் நாட்டமில்லை. கல்வி மகிழ்ச்சியானதாக, என் இலக்குடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அம்மா என்னென்னமோ காரணம் சொல்லி என்னை ஏற்க வைக்க முயன்றார். படிக்கவே வைக்க மாட்டேன் என்று மிரட்டினார். வயதுக்கே உரிய பிடிவாதத்தால் நான் ஏற்கவில்லை. கல்லூரியில் இலக்கியம் கற்றேன். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து பங்குபெற்றேன். இளங்கலையிலும், முதுகலையிலும் முதலாவது மதிப்பெண் பெற்றேன். தங்கப்பதக்கம் வென்றேன். அப்போது எனக்கு நான் எடுத்தது மிகச்சிறந்த முடிவு எனத் தோன்றியது. அதன்பிறகு நான் ஆய்வுக் கட்டுரைகளைத் திருத்துவது, தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவது போன்ற பணிகளைச் செய்தபோதும், கல்லூரி ஆசிரியர் ஆனபோதும் என் முடிவு மிகவும் சரியானது என்றே நினைத்தேன் - ஏனென்றால் மொழிசார்ந்த பணிகள் எவையும் சிரமமாக இருக்கவில்லை. நான் ஏற்கனவே கற்றிருந்தவையே போதுமானதாக இருந்தது - புதிதாக மெனெக்கெட்டுக் கற்று என்னை வேலையிடத்தில் நிரூபிக்கத் ...

பறந்த புட்டு

இந்தக் கடைசி டெஸ்டில் இந்தியா வெல்லுமோ தோற்குமோ பிரமாதமாகப் போராடியிருக்கிறார்கள். ரோஹித், கோலி விடைபெற்ற பின்னர் வெளிநாட்டுக்குப் போய் ஆடும் இளம் அணி. இளம் தலைவர். பும்ராவின் உடற்தகுதியின்மையால் அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சு அணி. காம்பிருக்கும் மூத்த வீரர்களுக்குமான மோதலால் உருக்குலைந்த அணி. இந்தத் தொடரில் மீண்டு வந்து ஒருமையான நோக்கத்துடன், லட்சத்துடன் ஆடுகிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் கற்றுக்கொண்டு போராடி மேலே வருகிறார்கள், தோற்கிறார்கள், திரும்ப வருகிறார்கள். கடைசிவரையிலும் ஆட்டத்தில் இருப்போம் என்கிற இந்த ராக்கி ஸ்டைல் இந்த குத்துச்சண்டை அணுகுமுறை பாராட்டத்தக்கது. விமர்சகர்கள் தொடர்ந்து செய்யும் ஒரே அங்கலாய்ப்பு ஏன் அணித்தேர்வு இவ்வளவு சமனற்று இருக்கிறது என்பதே. இந்தக் கடைசிப் போட்டியில் கூட கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை எடுத்திருக்க வேண்டும். அது அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையையும் சமநிலையையும் கொடுத்திருக்கும். ஆனாலும் ஏன் இத்தவறை தொடர் முழுக்கச் செய்திருக்கிறார்கள்? முழுமுதற் காரணமாக எனக்குப் படுவது மட்டையாட்டத்தின் மீதுள்ள அவநம்பிக்கை. ஆனால் இங்கிலாந்தை விட அதிக ரன்க...