நேற்றைய வகுப்பில் நடந்த பதிப்பாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட்டவற்றை நாவல் வகுப்பின் மாணவரான மாலதி பதிவாக்கியிருக்கிறார். படித்துப் பாருங்கள்:
நாவல் உலகில் எது வெற்றி தோல்வி என்று பார்த்தால் குறிப்பிட்டு சொல்ல முடியும்.
நான் இதுவரை 400 டைட்டில்ல பண்ணியிருக்கிறேன்.
சிறுகதைகள் என்றால் அதற்கு தனியாக அட்டெண்டஸ் இருக்கும்.
ஆனால் பப்ளிஷ் பண்ணுவதற்கு நாவல்தான் முக்கியம். ஒருவர் எத்தனை நாவல் பதிப்பித்து கையில் வைத்திருக்கிறார்கள் என்றுதான் பார்ப்போம்.
ஒவ்வொரு எழுத்தாளரும் தான் எழுதும் நாவலை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
2019 ல் 9 நாவல்கள் புதிய தலைமுறையை சேர்ந்த நாவல்கள் பதிப்பித்தோம். கிட்டத்தட்ட 6 துறைகளை சேர்ந்த நாவல்கள். துறை சார்ந்த நாவல்கள் என்றால் வாசகர்களிடம் ஒரு ஈர்ப்பு இருப்பதை மறுக்கவே முடிவதில்லை. மினிமம் ஒரு நாவலாவது வணிக ரீதியாக ஜெயிக்கும்.
உதாரணமாக பயர் சர்வீஸ் சம்பந்தப்பட்ட ஒரு கதை. அதில் உள்ள கன்டென்ட் தனிப்பட இருந்தது. கவனத்தை ஈர்த்தது.
கணேஷ் குமாரின் குருநாவல், நோய்மையை அடிப்படையாகக் கொண்டது. டயபட்டிக் அறுவை சிகிச்சையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
இதெல்லாம் துறைகள் சம்பந்தப்பட்ட நாவல்கள்.
திரில்லர் கதைகள் பற்றி பெரிதாக சொல்லமுடியவில்லை.
பாப்புலர் கன்டென்ட் வகையறாவில் சேர்க்கவும் முடியாது.
கொத்தாளி விருதுகள் பெற்ற ஒரு நாவல்.
என்னோட விருப்பம் பற்றி சொல்கிறேன்…
எழுத்தாளராக அவர் முதலில் என்ன எழுதுகிறார்கள்
எப்படி அணுகுகிறார்கள்
எதாவது ஒன்றை மட்டும் செய்ய வேண்டும்
எழுதும் பொழுது மொழியில் கவனமாக இருக்க வேண்டும். படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும்.ஒரு எழுத்தாளருக்கு இதையெல்லாம் அவசியமாக சொல்லுவேன் நான்.
ஒரு சாதாரண கதையில் மொழி விளையாட்டை தாராளமாக செய்யலாம்.
நாவல் மதிப்பீடுகள் வேண்டும்.
ஒருவேளை மதிப்பீடுகள் இல்லையென்றால் நாவலைப் பற்றிய குறிப்புகளை சரியாக கொடுக்க வேண்டும். அவர் தரும் குறிப்பை வைத்தே கதையை படிப்பதற்கு ஆர்வம் வரும் அளவில் இருக்க வேண்டும்.
மற்றபடி எழுத்தாளர் யார், அவர் படிப்பு, ஸ்கூல் இதெல்லாம் அவசியம் இல்லை.
நீங்க எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது.
நான் எப்பொழுதுமே அபிலாஷ்க்கு முக்கியத்துவம் அளிப்பேன். அவரது வகுப்பு மாணவர்களுக்கும் அதே முக்கியத்துவம் தருவேன்.
கேள்வி பதில்கள்
அபிலாஷ்…
ஒரு படைப்பாளி தன் நாவலைப் பதிப்பிக்க பதிப்பாளருக்கு பணம் கொடுப்பது, buy back கொள்கைப்படி பதிப்பிப்பது சரியா?
நேரடியாக பதிப்பாளரிடம் தன் படைப்பை கொடுத்து பப்ளிஷ் பண்ணுவது
பதிப்பிற்கான பணத்தை நானே தருகிறேன். எனக்கு புத்தகம் இருந்தால் போதும்
இதன் சாதகம பாதகம் சொல்ல முடியுமா?
பதில்…
என்னை பொறுத்த வரையில் buy book வேஸ்ட் டைம். எழுத்தாளரே ரிஸ்க் ஏற்கிறேன் என்றாலும் நாங்கள் யோசிப்போம்.
ஒருமுறை ஒரு புத்தகம் பதிப்பிக்க எடிட் பண்ணும் பொழுதுதான் தெரிந்தது அது ஒரு சினிமா காப்பி என்று. எழுத்தாளரிடம் செக் பண்ணி வரும் போது முழுக்க முழுக்க டைம்தான் வேஸ்ட். அப்படியே பதிப்பித்தாலும் அது வெற்றி பெறுவது இல்லை.
மார்க்கெட்டிங் முக்கியம். பதிப்பாளரிடம் நேரம் செலுத்த வேண்டும்.
புக் பிரம்மா கூட இதைப் பற்றி பேசியிருக்கிறார்.
கேள்வி…
நான் தனிப்பட்ட முறையில் எழுத்தாளரின் டெக்ஸ்ட் பார்ப்பேன்.
மனுஷ்ய புத்திரன் எழுத்தாளர் என்பவர் எப்பொழுதுமே இயக்கத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
கதை எழுதுபவர் அதை மட்டும்தான் செய்ய வேண்டுமா?
பதில்…
எழுத்தாளர் தன் எழுத்துடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
உதாரணமாக கவிஞர்கள் சிவப்பிரகாசம், ரஞ்சித், மற்ற மொழி கவிஞர்கள் தினமும் மாடர்ன் ஆர்ட் எழுதுவார்கள். அதுதான் அவர்களை எப்போதுமே எழுத்துடன் தொடர்பில் வைத்திருக்கிறது.
அடுத்தது பிராண்டிங்…
எழுத்தாளர்கள் தங்களை பிராண்ட்டிங்காக மாற்ற வேண்டும்.
உதாரணமாக சரவண கார்த்திகேயன், ஜெயகாந்தன் இவர்கள் தங்களையே பிராண்டிங் பண்ணிட்டு வந்தார்கள்.
அதனால் ஒவ்வொரு படைப்பாளியும் அதில் கவனம் செலுத்தலாம்.
பதிப்பாளருடன் நல்ல இணக்கம் வேண்டும். புத்தகம் பதிப்பில் ஒருவருடன் கவனம் செலுத்த வேண்டும்.
இதையெல்லாமே ஒரு எழுந்தாளர் கவனத்தில் வைத்துக் கொள்ளலாம்.
கேள்வி…
நாவலுக்கான குறைந்தபட்ச, அதிகபட்ச பக்க அளவென்ன?
ஒரு நாவல் 200 பக்கம் அதாவது 27000 முதல் 32000 வரை இருக்கலாம்.
60 to 70 பக்கம் இருந்தால் அவ்வளவாக போவது இல்லை. இருந்தாலும் வணிக ரீதியாக சிக்கல்கள் இருக்கும்.
ஒரு நாவல் என்பது 13000 முதல் 14000 வார்த்தை வரலாம் உச்சமாக 32000 வார்த்தைகள் வரை வரலாம்.
கேள்வி… ஞானசேகரன்
இன்றைய காலத்தில் உங்களை ரீச் பண்ணிய எழுத்தாளர் இருக்கிறார்களா?
பதில்…
70 சதவீதம் நானாக தேடிப் போய்தான் புத்தகங்களை வாங்கினேன். எல்வின் ஜேக்கப் கதையை கூட நான்தான் கேட்டு வாங்கினேன். அவர் கதைக்கு விசிறி ஆகிவிட்டேன் நான்.
கேள்வி ஹபிப்
தத்துவம் சார்ந்த கதைகள் நன்றாக இருக்குமா? வரவேற்பு இருக்குமா?
பதில்
வரவேற்பு பற்றி தெரியாது. அதன் வடிவம் டெக்ஸ்ட் நன்றாக இருந்தால் பதிப்பிப்பேன்.
அபிலாஷ் கேள்வி …
பதிப்பிக்கும் முன் முழுநாவலையும் படிப்பிங்களா?
பதில்…
என்னோட டீம் இருக்கிறார்கள். அவர்களும் படிப்பார்கள். ஒரு கதையில் பத்து சதவீதம் படித்தால் போதும். அதன் தரம் தெரிவதற்கு.
- எழுதித் தொகுத்தவர் மாலதி