Skip to main content

Posts

Showing posts from May, 2025

"நவீன காதல்" - “உன்னை நேசிக்கிறேன்” என சொல்ல மாட்டார்களா எனும் ஏக்கம்

  மனிதர்கள் மிகுதியாக அன்பு காட்டுகிற, சிறிது கூட அன்பை நம்பாத ஒரு காலத்தில் வாழ்கிறோம். இந்த மாற்றங்களுடன் காதலைப் பற்றின குழப்பங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வளவு ‘முற்போக்கான’, தாராளமயமான சூழலில் தான் பரஸ்பர ஐயங்களும் பயங்களும் அதிகமாக உள்ளன; யாருக்கும் யார் மீதும் வெகுசீக்கிரமாக நம்பிக்கை வருகிறது, ஆனால் வெகுசீக்கிரமாக அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. இரண்டுக்கும் இடையே யாரை எப்படி நம்புவது என அஞ்சிக்கொண்டிருக்கிறோம். நம்மைப் பற்றி சொல்லப்படும் இதயபூர்வமாகத் தோன்றும் சொற்களுக்குள் ஒரு இதயம் துடிக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் ஹார்ட்டின்கள் இருக்கின்றன. “லவ்” என்று சொல்லைக் கேட்டு முன்பு மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும். இன்று அதே மனதுக்குள் சருகிலைகள் உதிர்கின்றன. லவ் என்பது டிஷ்யு பேப்பரைப் போலாகிவிட்டதால் வாழ்தலே எடையற்றதாக இருக்கிறது; சதா ஒரு பதற்றம், யாராவது “உன்னை நேசிக்கிறேன்” என சொல்ல மாட்டார்களா எனும் ஏக்கம். நேசிக்கிறேன் எனும் சொல்லுக்கு “உன்னுடன் இருக்கிறேன்” எனும் பொருள் வந்துவிட்டது. இந்த சிக்கல்களைப் பற்றியே இந்நூல் பேசுகிறது. https://www.amazon.in/dp/B0FB65SPQ9

உணர்வுவயப்பட்ட உண்மை

  தான் பிரின்ஸ்டனில் படைப்பிலக்கியம் சொல்லித் தந்தபோது மாணவர்களிடம் சொல்லியதாக முக்கியமான அறிவுரையை சிமமண்டா அடிச்சி குறிப்பிடுவார்: எழுத்தை அற்புதமாக மாற்றுவது அறிவோ தொழில்நுட்மோ அல்ல, உணர்வுவயப்பட்ட உண்மை. அது என்ன உணர்வுவயப்பட்ட உண்மை? நம் பண்பாட்டில் அது சத்தியம், அறம் என்று அழைக்கிறார்கள். பாரதி அக்னிச் சுடர் என்றார். அந்த உண்மையை ஒருவர் புத்தகங்களில் இருந்தோ அனுபவத்தில் இருந்தோ ஒருவேளை கற்றுக்கொள்ள முடியாது போகும். ஏனென்றால் அது நம் மொழிக்குள், நம் உணர்வுக் குழப்பங்களுக்குள் புதைந்திருக்கும். அதை வெளிக்கொணர ஒரு படைப்பிலியக்கிய ஆசிரியர் தேவை. நீங்கள் எழுத முயலும் படைப்பாளியாக இருக்கும்பட்சத்தில் என் "நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" வகுப்பில் இணையுங்கள். விருப்பமுள்ளோர் ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் நடக்கிற ஆன்லைன் வகுப்பில் சேருங்கள். கூடுதல் விபரங்களுக்கு 9790929153 எண்ணிலோ மெஸெஞ்சரிலோ தொடர்புகொள்ளுங்கள். abilashchandran70@gmail.comக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

நன்றாக எழுதுவது எப்படி?

  "முதல் விதி - நீங்கள் எழுத வேண்டும். எழுதாவிடில் ஒன்றுமே நடக்காது." எழுத்தாளர் நீல் கெய்மென் நீங்கள் எழுதும் கனவு கொண்டவர், ஆனால் இதுவரை எழுத சந்தர்ப்பம் அமையவில்லையா, எப்படி எங்கே துவங்குவது எனத் தெரியவில்லையா? "நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்" ஆன்லைன் வகுப்பில் இணையுங்கள். ஆர்வமுள்ள படைப்பாளிகள் என்னை 9790929153 எண்ணிலோ மெஸெஞ்சரிலோ தொடர்புகொள்ளலாம். அதே எண்ணில் வாட்ஸாப்பும் பண்ணலாம்.

"நவீன காதல்" - கிண்டில் பதிப்பு வெளியிடப்பட்டது

காதல் இன்று வெகுவாக மாறிவிட்டது. காதல் மீதான எதிர்பார்ப்புகள், காதலின் சிக்கல்கள், குழப்பங்கள் வன்முறை முன்பை விட அதிகரித்து விட்டன. காதலுக்கும் நட்புக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய கோடு அழிந்ததில் பாய் பெஸ்டிகள் எனும் புதிய வகைமை, செக்ஸுடன் கூடிய நட்பு எனும் வினோத உறவு தோன்றியிருக்கிறது. முன்பு காதல் கல்யாணத்தில் கைகூடுவது லட்சியம், இன்று அது ஒரு கனவு. “காதலித்துக் கட்டிக்கிட்டோம்” என்பது விரைவில் ஒரு பூமர் வாக்கியம் ஆகிவிடும். மின்சாரம் பாயும் சொல்லாடலாக இருந்த “ஐ லவ் யூ” இன்று முகமனைப் போல அன்றாடம் சொல்லப்படுகிறது. மிகுதியாக அன்பு காட்டி, சிறிது கூட அதை நம்பத் தயங்குகிறோம். காதல் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் இந்த யுகத்தில் காதல் செய்வது எப்படி, வாழ்வின் தத்துவத்துடன் காதலின் தத்துவம் எப்படி பின்னிப்பிணைந்திருக்கிறது எனப் பேசும் நூல் இது. கிண்டில் பதிப்பு  

"நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" 2025 வகுப்புகள்

  "நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" ஆன்லைன் வகுப்புகளை கடந்த இரண்டாண்டுகளாக நடத்தி வருகிறேன். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கவுள்ளது. ஜூலை-ஆகஸ்டில் வார இறுதி வகுப்புகள். இடுபணிகள், விளையாட்டுகள் என சற்று வித்தியாசமாக இம்முறை வகுப்பை நடத்தலாம் என இருக்கிறேன். ஆர்வமுள்ள இளம் படைப்பாளிகள் (வயதைச் சொல்லவில்லை) என்னை 9790929153 எண்ணிலோ மெஸெஞ்சரிலோ தொடர்புகொள்ளலாம். அதே எண்ணில் வாட்ஸாப்பும் பண்ணலாம். இந்த ஆண்டு கட்டணத்தை சற்று அதிகரித்திருக்கிறேன். ஆனால் வகுப்பில் இணையும் முதல் 20 மாணவர்களுக்கு கட்டணக் கழிவு உண்டு.

தலையற்றுப் போகும் மனிதன்

  நான் அவளை உணவகத்தில் சந்திக்கும்போது ஒவ்வொரு முறையும் முன்கூட்டியே சென்று காத்திருப்பேன். இது அவளாக சொல்லிச் செய்ததல்ல. நானாக செய்தேன். அவள் வந்ததும் கால் மேல் காலை இட்டபடி தன் பார்வையைத் தாழ்த்தி என்னை இனி எனக்கு உயர்வதற்கு இடமே, வானையும் கடந்து வளர்ந்து சென்றுவிட்ட அடிமுடி அறியா பிறவி நான் என்பதாகப் பார்ப்பாள். அடுத்து உடனே இயல்பாகி புன்னகைப்பாள். நான் உடனே உடைந்து விடுவேன். அவள் இப்படி செய்யும்போதெல்லாம் என் கண்களில் நீர் துளிர்த்துவிடும். இப்படி அவளிடம் ஓராயிரம் பாவனைகள் உண்டு. அவள் வந்து அமர்ந்ததும் நான் அவளது காலை என் கையால் தொட்டு விரலில் முத்தமிடுவது வழக்கம். பப்களில் நான் மண்டியிட்டு அவளது கால் பெருவிரலைச் சப்புவதும் உண்டு, அவள் மெல்ல உதைக்கும்போது என் தலை மேஜையின் விளிம்பில் படும், உச்சம் பெற்றதைப்போல சிரிப்பாள், அது அவ்வளவு அற்புதமான ஒரு தருணம். நாங்கள் முதன்முதலாக உணவகத்தில் சந்தித்தது ஒரு மகத்தான நிகழ்வு. என்னால் அந்த நாளை ஒருபோதும் மறக்க முடியாது. அவள் நகரத்துக்கு வந்ததும் தன் தோழியின் விடுதி அறையில் தன் பொருட்களை வைத்து உடைமாற்றிவிட்டு, புர்காவின் விளிம்புக்கு மேலா...

கனவு வாழ்க்கை, 'கனவு' வாழ்க்கை

  இன்று ஒரு நண்பர் என்னிடம் பாலிஷ் போட்ட யானைக் குட்டியைப் போன்ற காரைக் காட்டி "இந்த கார் ஒரு கோடி ரூபாய். பகத் பாஸில் வைத்திருக்கிறார். இதில் பயணிக்க அவ்வளவு சொகுசாக இருக்கும்." என்றார். இப்படி விலைமதிப்பான பொருட்கள், மின்னணு சாதனங்கள், வீடுகள் குறித்து யாராவது தொடர்ந்து தகவல்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் மற்றவர்களைவிட ரொம்ப கேவலமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனும் உணர்வு சட்டெனத் தோன்றிவிடுகிறது. நான் முன்பு மூவாயிரம் ரூ சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோது பணம் ஒரு பிரச்சினையாக, பணமின்மை போதாமையாகத் தோன்றியதில்லை. கடன் அதிகமானதால் ஒரு குடும்பத்தில் ஏழு பேர்கள் விடமருந்தி தற்கொலை பண்ணி ஒரு காருக்குள் அமர்ந்திருந்ததாக செய்தி படித்தேன். இப்படியான செய்திகளை நான் அதிகமாக முன்பு கேள்விப்பட்டதில்லை. மிக ஏழ்மையான நிலையில் சகித்துக்கொண்டு கௌரவமாக வாழ்ந்த குடும்பங்களை அறிவேன். இன்று அப்படியான வாழ்க்கை மிகவும் கடுமையாகிவிட்டது. ஏழ்மையும் கடனும் கைகோர்த்துவிட்டன. அனேகமாக எல்லாரிடமும் வீட்டு வசதிப் பொருட்கள், வாகனங்கள் இருக்கின்றன, அனேகமாக எல்லாரும் வீடு வாங்கவோ வாங்க முய...

தாமரைக் கன்னங்கள்

பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்யும்போது வெள்ளப்பெருக்கு வருவது புதிதல்ல. முன்பு திட்டமிடப்பட்ட அழகான நகரம் என அறியப்பட்ட, பூங்கா நகரம் எனக் கொண்டாடப்பட்ட பெங்களூர் மென்பொருள் சொர்க்கமாக வளர்ந்து விரிந்தபோது சரியான திட்டமிடலோ கட்டமைப்பு வளர்ச்சியோ இல்லாமல் கொடூரமாக உருமாறிவிட்டது. துணை முதல்வர் டி.கெ சிவகுமார் பெங்களூர் "திட்டமிட்டு உருவான நகரம் அல்ல" எனச் சொல்லும் நிலை வந்துவிட்டது. இப்போதும் பெங்களூரின் சீதோஷ்ண நிலை, நவீனக் கலாச்சாரம் ரசனைக்குரியதே. ஆனால் உலகின் ஆக மட்டமான சாலைகளை பெங்களூரிலே பார்க்க முடியும் - புதிதாக சாலையை அமைத்துவிட்டுப் போவார்கள், ரெண்டு நாள் அரைமணி நேரம் தூறல் போட்டால் அந்த சாலை பிஸ்கட்டில் உள்ள கிரீமை குழந்தை நக்கியெடுத்ததைப் போல மறைந்துவிடும். இங்கு சாலையா இருந்தது என மக்கள் மூக்கில் விரலை வைக்க முடியாது, பின்னால் பெரிய டிராபிக் ஜாம் ஆகிவிடும். இந்த சாலைகளில் வாகனம் ஓட்டியும், ஆட்டோவில் பிரயாணம் செய்தும் தனக்கு கடும் முதுகுவலி ஏற்பட்டதாகவும், எவ்வளவு சிகிச்சைகள் எடுத்தும் செலவு அதிகமானதே ஒழிய வலி தீரவில்லை என்று, அதனால் பி.பி.எம்.பி தனக்கு 50 லட்சம் ...

இனிவரும் காலம் இருளின் காலம்

  அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான அலி கான் முகமதாபாத் மீதான வேடிக்கையான குற்றச்சாட்டுகளைப் பற்றி இன்று ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் ஒரு விரிவான கட்டுரையைப் படித்தேன். அலி கான் ஒன்றும் சாதாரண பேராசிரியர் அல்ல - அவர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர். அவரது தாத்தா ஜின்னாவுடன் சேர்ந்து முஸ்லீம் லீக்கை நடத்தினார், அதன் பொருளாளராகவும், நிதியாளராகவும் இருந்தார், அதன்பின் பாகிஸ்தான் அரசுக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு லண்டனில் வாழ்ந்து இறந்து போனார். இந்திய அரசு அதன்பிறகு இஸ்லாமிய ராஜ குடும்பங்களின் சொத்துக்களை அரசு உடைமையாக்க எதிரிச் சொத்து சட்டத்தைக் கொண்டு வந்தது. (சயிப் அலிகான் இது சம்மந்தமான வழக்கை தள்ளிவைப்பதற்காக தன் மீது கொலை முயற்சி நடந்ததாக பெரிய டிராமாவே போட்டார்.) அலி கானின் அப்பா இம்முயற்சிக்கு எதிராக நாற்பது ஆண்டுகளாகப் போராடி உச்சநீதிமன்றம் போய் வென்றார். அலி கானின் மனைவி முன்னாள் ஜம்மு காஷ்மீர் அமைச்சரின் மகள். அலி கானும் சமஜ்வாதி கட்சியில் இருக்கிறார். அலி கான் தன் பேஸ்புக்கில் எழுதிய பதிவு ரொம்ப கண்ணியமாக அரசை விமர்சிக்கிற குறிப்பு - அதில் அவர் கர்னல் ...

என் TEFL வகுப்பு அனுபவம்

கடந்த ஆண்டு இறுதியில் ஏஷியன் காலேஜ் ஆப் டீச்சர்ஸ் நிறுவனத்தில் 120 Hour InternationalTESOL/TEFL In-Class Certification Programஇல் சேர்ந்து அயல் மொழியாளர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் முறைகளைக் கற்றேன். இது ஒரு பட்டயப் படிப்பு. வகுப்பிலேயே நிறைய இடுபணிகள், நேரடி வகுப்பெடுக்கும் சவால்களை முடித்துவிட்டு கடைசியில் கனடிய நிறுவனமான TCBE நடத்தும் டெஸோல் கேனெடா போர்ட் தேர்வையும் எழுதினேன். என் வாழ்வின் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இந்த வகுப்பும் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அமைந்தன. நான் பள்ளிக்கல்வி அளவில் பயிற்றுவித்ததில்லை என்றாலும் முன்பு ஒரு நண்பரின் தூண்டுதலால் இளங்கலை கல்வியல் பயின்று பட்டம் பெற்றேன். பயிற்றுவித்தல் குறித்த கோட்பாடுகள், மாணவர்களின் உளவியல், பயிற்சி என அமைக்கப்பட்ட அந்த வகுப்பில் "இதெல்லாம் தெரிஞ்சதுதானே" எனும் அனுபவம் பெற்ற ஆசிரியரின் அலட்சியம் எனக்கு இருந்தது. ஏனென்றால் என்னுடன் இருந்த மாணவர்கள் இளங்கலை முடித்துவிட்டோ பள்ளிக்கல்வி முடித்தோ நேரடியாகப் பயில வந்தவர்கள். அவர்களைப் பயிற்சி வகுப்பெடுக்கச் சொன்னால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தைப் போல ததிங்கிணத்தோம் பண்ண...

நாவலில் பத்திகளை எழுதுவது - மெக்-இவன்

  இந்த நேர்முகத்தில் இயன் மெக்-இவன் புனைவில் வரும் ஒரு பத்திகளை கவிதையின் வரிகளுடன் ஒப்பிடுகிறார். கவிதையில் வரிகள் இடையே ஓசையளவிலும் கருத்து, தொனி, அர்த்தங்களின் அளவிலும் மாற்றங்களும், முரண்களும் அவசியம், இவை ஒரு சீராக வரும்போது தாளமாகிறது. அது வாழ்க்கையின் பாய்ச்சலுக்கு, நமது பிரக்ஞையின் உள்ளோட்டத்துக்கு நெருக்கமாக கவிதையைக் கொண்டு வருகிறது. ஆனால் கவிதையின் தீவிரத்தை, மிக நுட்பமான விவரிப்பை புனைவில் நம்மால் கொண்டு வர முடியாது. செய்தாலும் அது வாசகருக்குத் திகட்டும். கதை ஒழுங்குக்கு வராமல் அலைவதாகத் தோன்றும். கவிதையின் தீவிரத்தையும் அழகையும் புனைவுக்கு கொண்டு வந்து அதேநேரம் அது ரொம்பவே கவிதைத்தனமாக ஆகாமல் இருக்க மெக்-இவன் ஒரு உத்தியைச் சொல்கிறார் - இது ஏற்கனவே ஸ்டைலிஸ்டுகள் பலமுறைச் சொன்னதுதான்: ஒவ்வொரு பத்தியையும் தன்னளவில் முழுமையான ஒரு வாக்கியமாகக் கருதி உருவாக்குவது. ஒரு அத்தியாயத்தில் பத்து பத்திகள் இருந்தால் ஒவ்வொன்றும் கதையின் வளர்ச்சியில், போக்கில் ஒருவிதமான மாற்றத்தின் ஒழுங்குவரிசையை உருவாக்குவதில் பங்களிக்கும். அவை ஒருங்கே ஒருவித தாளத்தை, மனநிலையைக் கட்டமைக்கும். தனித்தனி...

பாஜக அரசின் இஸ்லாமிய வெறுப்பரசியல் எப்படி மோசமான போர்த்தந்திரமாகியது

  எதிர்க்கட்சிகள் பாஜகவின் காலாட்படையாகிவிட்ட நிலையில் இப்போது காங்கிரஸின் இடத்தில் இருந்து பாஜகவின் மோசமான போர்த்திட்டம், தவறுகளை அம்பலப்படுத்தி விமர்சிப்பது கரன் தாப்பரின் The Wire தான். அருண் ஷௌரியின் பேட்டியில் வரும் விமர்சனம் அவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது (தொடுவழியை முடிவில் போடுகிறேன்): 1) அருண் ஷௌரி முதலில் சொல்வது மோடி அரசு போர் நிறுத்தம் செய்வதாகச் சொல்லிவிட்டு எப்போது வேண்டுமானாலும் இது நடக்கும் எனக் கூறுவது தவறு என்பது. எப்போதுமே ஒரு தேசத்தால் போர்த் தயார் நிலையில் இருக்க முடியாது. மேலும் நாளையே ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்து அப்போது நம்மால் போர்த் தொடுக்க இயலாவிடில் இந்திய அரசின் மீதான உலகளவிலான நம்பிக்கை குலையும். எப்படிப் பார்த்தாலும் முன்கூறாக ஒன்றை அறிவிப்பது, பஞ்ச் டயலாக் விடுவது அரசின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும். அது நல்லதல்ல. 2) இந்திய அரசு மிதமிஞ்சி அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறது. அமெரிக்கா நம்பத்தகுந்த கூட்டாளி அல்ல. அது பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் நிதியை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இந்தியாவையும் சமாதானப்படுத்தும். வணிக உறவை ரத்து செய்வேன் என மிரட்டிப் பணிவ...

விடா முயற்சி விஸ்வரூபத் தோல்வி (இது முழுக்க முழுக்க ஒரு சினிமா விமர்சனம்)

விக்ரம் மிஸ்ரி யாருக்காக தாக்கப்பட்டார்? ஏன் காங்கிரஸ் மோடிங்கிரஸாக மாறியது? வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்திய-பாகிஸ்தான் யுத்த நேரத்தில் அரசு, ராணுவத்துக்கும் ஊடகத்துக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டார் (அவர் வேறு பணிகளையும் ஆற்றினாலும் அவரது ஊடகச் சந்திப்புகளே கவனம் பெற்றன). பாலத்தின் மீது யார் போனவர்கள் மோடி, பாகிஸ்தான் ராணுவ தளபதி அஸிம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். காஷ்மீரில் நடத்தப்பட்ட பெஹல்காம் தாக்குதல் துவங்கி போர் நிறுத்தம் வரை இவர்களில் சிலருக்குப் பங்குண்டு. இதன்பின் வணிக ஒப்பந்தம், லாபக்கணக்குகளை முடிவு செய்வது, இந்திய எல்லை மீதான ஆதிக்கம், தெற்காசியாவில் இந்தியாவின் ராணுவ ஆகிருதி ஆகிய விசயங்களைத் தீர்மானிப்பது, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான வணிக முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட நோக்கங்கள் இருந்தன. ஆபரேஷன் சிந்தூர் என்பதற்குப் பதில் ஆபரேஷன் பிக்பாஸ் என்று வைத்திருக்கலாம் - யார் இங்கு பிக்பாஸ் அமெரிக்காவா, சீனாவா என இந்தியாவும் பாகிஸ்தானுமாக மோதிப் பார்த்து கடைசியில் மொத்தமாக டிரம்பில் காலில்...

சீன, அமெரிக்க, இந்தியப் பெருமுதலாளிகளின் சதுரங்கம்

  இந்த போர் நிறுத்தம் எத்தனை நாட்கள் நீடிக்கும் எனத் தெரியவில்லை, ஆனால் ஏதோ அஜித்குமாரின் GBU போல கன்னாபின்னாவெனப் போய்க்கொண்டிருந்த யுத்தம் கரெண்ட் போனதைப் போல நின்றுவிட்டது. தாக்குதல், மறுதாக்குதல், நான் தாக்கவில்லை, அவன்தான் முதலில் தாக்கினான், மொத்தமா அழிச்சிட்டு போட்டியை ஆரம்பித்தலில் இருந்தே ஆடுவோம் எனப் போய்க்கொண்டிருந்த கொடுங்கனவை அமெரிக்காவும், பின்னணியில் சீனாவுமாக போதும் விடுங்க புரோ எனச் சொல்லி நிறுத்தியிருக்கிறார்கள். நிம்மதியாக இருக்கிறது. திரும்ப அடிப்போம், பாடம் கற்றுக்கொடுப்போம், ராணுவத்துடன் நிற்போம், பேரணி நடத்துவோம் என்பதெல்லாம் கேட்க நன்றாக இருக்கும், ஆனால் குண்டு விழுந்து சாகும் மக்களுக்கு இப்போர் ஈடுகட்ட முடியாத பெரும் இழப்புகளைக் கொண்டு வந்திருக்கிறது. அடுத்து, இதன்பின்னுள்ள வணிகச் சக்திகளின் நோக்கம். இந்தப் போர் ஆரம்பித்ததும் சீனாவின் ராணுவப் பங்குகள் எழுச்சி கண்டன. அதாவது இப்போரை ஆயுத நிறுவனங்களில் முதலீடு பண்ணுபவர்கள் உற்று கவனிக்கிறார்கள். ஆயுதச் சந்தைக்கு இது உத்வேகம் அளித்திருக்கிறது. சீனா பாகிஸ்தானுக்கு நவீன ஆயுதங்களைக் கொடுப்பதன் ஒரு நோக்கம் இது. அடு...

யார் பொறுப்பு

இவர்கள் பெயர் ஸெயின் மற்றும் ஸோயா. 12 வயதான இரட்டைக் குழந்தைகள். ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று பாகிஸ்தான் நடத்திய ஷெல்லிங்கின்போது தம் வீட்டில் இருந்து வெளியேறி தப்பிப் போக முயன்றிருக்கிறார்கள். அவர்கள் தெருவில் கால்வைத்ததும் ஒரு குண்டு வந்து விழுந்திருக்கிறது. சிதறிப் போய்விட்டார்கள். "ஒரேசமயத்தில் பூமிக்கு வந்து ஒரே சமயத்தில் உலகைவிட்டுப் போய்விட்டார்கள்" என்று அவர்களின் மாமா அதில் பத்தான் கூறியிருக்கிறார். அப்பா ரமிஸ் கான் காயமடைந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். "எங்களுக்குப் போர் வேண்டாம். ... நாங்கள் எங்கள் ரத்தத்தால் இப்போருக்கு விலைகொடுக்கிறோம்." என்று அதில் பத்தான் கூறுகிறார். இந்தக் குழந்தைகளின் உயிருக்கு யார் பொறுப்பு? பி.கு: Independent.co.uk இணைய்தளத்தில் இச்செய்தி வந்திருக்கிறது.

ஒன்றிய அரசின் பொறுப்பின்மை

    பூஞ்ச் , ஊரி உள்ளிட்ட ஜம்மு மாவட்டங்களில் பாகிஸ்தான் போர் விமானங்கள் ஷெல்லடித்ததில் இறந்த மக்களின் எண்ணிக்கையை பத்திரிகைகளும் , டிவி சேனல்களும் 21, 13, 7 என ஒவ்வொரு எண்ணிக்கையில் சொல்கின்றன . பாஜக சார்பு பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியாவே இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம் என்கிறது . பொதுவாக உலகம் முழுக்க அதிகாரபூர்வ போர்க்காலச் செய்திகளில் வருமை எண்ணிக்கையில் இரட்டிப்பாகவே நிஜமான தரவு இருக்கும் என்பதால் இதுவரைக்கும் இவர்கள் மாறிமாறி குண்டு போட்டதில் இரு நாடுகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தொடும் என நினைக்கிறேன் . தீவிரவாதத் தாக்குதலின் போதும் " குங்குமத்தை இழந்த பெண்களுக்காக " நடத்தப்பட்ட இந்த சிந்தூர் ஆபரேஷனின் விளைவாக இந்தியாவில் கணவர்களையும் சகோதரர்களையும் குழந்தைகளையும் இழந்த பெண்களுக்கு இந்த அரசு எந்த விதத்தில் ஈடு செய்யும் ? உலகின் பெரும் அபத்தம் இந்த சிந்தூர் ஆபரேஷன் .  காஷ்மீரில் வாழும் என் நண்பரிடம் கேட்டபோது நேற்று இரவு முழுக்க போர் விமானங்கள் பறந்தத...