இவர்கள் பெயர் ஸெயின் மற்றும் ஸோயா. 12 வயதான இரட்டைக் குழந்தைகள். ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று பாகிஸ்தான் நடத்திய ஷெல்லிங்கின்போது தம் வீட்டில் இருந்து வெளியேறி தப்பிப் போக முயன்றிருக்கிறார்கள். அவர்கள் தெருவில் கால்வைத்ததும் ஒரு குண்டு வந்து விழுந்திருக்கிறது. சிதறிப் போய்விட்டார்கள். "ஒரேசமயத்தில் பூமிக்கு வந்து ஒரே சமயத்தில் உலகைவிட்டுப் போய்விட்டார்கள்" என்று அவர்களின் மாமா அதில் பத்தான் கூறியிருக்கிறார். அப்பா ரமிஸ் கான் காயமடைந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். "எங்களுக்குப் போர் வேண்டாம். ... நாங்கள் எங்கள் ரத்தத்தால் இப்போருக்கு விலைகொடுக்கிறோம்." என்று அதில் பத்தான் கூறுகிறார்.
இந்தக் குழந்தைகளின் உயிருக்கு யார் பொறுப்பு?
பி.கு: Independent.co.uk இணைய்தளத்தில் இச்செய்தி வந்திருக்கிறது.
