Skip to main content

Posts

Showing posts from June, 2024

"ரசிகன்" - பிரவீணாவின் காதல் - பாலு

அபிலாஷ் எழுதிய ‘ரசிகன்’ நாவலின் 3வது பகுதியின் 6ஆம் அத்தியாயத்தை மட்டுமே ஒரு குறும்படமாக எடுக்கலாம். கதாநாயகனான சாதிக்கின் முன்னாள் காதலியான பிரவீணாவின் வீட்டில் கதைசொல்லியான சங்கர் சில நாட்கள் தங்க நேர்கிறது. பிரவீணாவும் சங்கரும் மொட்டை மாடியில் மது அருந்துகின்றனர். மாடிச்சுவரின் விளிம்பில் பிரவீணாவின் பாதி பிருஷ்டம் பாதி பிதுங்கி இருந்தது. அவள் மதுக்கோப்பையைத் தன் தொடைகளுக்கு இடையே வைத்து வெல்லத் தேய்க்கத் தொடங்குகிறாள். இதைக் கண்டு சாதிக் அவளைக் கண்டிக்கிறான். தன் செயலியை எண்ணி அவமானத்தில் கூசிப் போய் சங்கரிடம் மன்னிப்பு கேட்கிறாள் பிரவீணா. “விடு இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே ரெண்டு பேரும் மறந்திடுவோம்” எனக் கடந்துபோகிறான் சங்கர்.  “என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு. என்னை யாருக்கும் பிடிக்காது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் இல்லை. சாதிக்கும் என்னைவிட்டுப் போய்ட்டான்” என அவனிடம் புலம்பினாள். “எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்” எனச் சொல்லி பிரவீணாவை ஆறுதல் படுத்துகிறான். பிறகு அந்தப் பேச்சிலிருந்து திசைதிருப்புவதற்காக அவளின் குடும்பம் பற்றிக் கேட்கிறான். அதற்குப் பிரவீணா, “சின்ன வயசுல என்ன...

"ரசிகனில்" சில சிறந்த உரையாடல்கள் - பாலு

”இந்த செக்ஸ் சொறி மாதிரி. சொறிய சொறிய சொகமா இருக்கும். ஆனா புண்ணான பெறவு வலிக்கும், ரத்தம் வரும். லவ் பன்ணும்போது செக்ஸுக்கு கொஞ்சமாவது நியாயம் இருக்கும். ஒரு கட்டுப்பாடு வரும். ஆனா கண்ட பொண்ணுங்க பின்னாடி போய் உரசுறது ஒரு வியாதி. ஒரு புண்” * “புண்ணுக்கு ஏன் மருந்து போடணும்? சொறிஞ்சு சொறிஞ்சு சுகம் காணலாமே? ஏன்னா சொறிஞ்சா சொகமாத்தான் இருக்கும், ஆனா கடைசியில வலிக்குமில்லா, அதுக்குத்தான், நிரந்தரமா ஒரு திருப்தியோட நிம்மதியோட இருக்கணுனா செக்ஸை பிழிந்து வெளியே போடணும்” * “செக்ஸை கடந்து போறது ஈஸி” “அதெப்படி ஈஸி?” “நிறைய பேரு பண்ணிக் காட்டி இருக்காங்க. காந்தி ஒரு எக்ஸாம்பிள். அவரு தொடர்ந்து கையடிக்காமலே பொண்ணுங்ககிட்ட போகாமலே இருந்திருக்காரு.” “அதெப்படி? உடம்பே வெடிக்கிற மாதிரி இருக்குமே” “இருக்கும். ஆனா அந்த எனர்ஜிதான் பெரிய எனர்ஜி. செக்ஸில் நாம வீணடிக்காத எனர்ஜியை சரியான வேற விசயங்களில பயன்படுத்தலாம். இல்லாட்டி சும்மாவே இருக்கலாம். மனசு சுத்தமா இருக்கும்.” “அதெப்படி இருக்கும்?” “செக்ஸ் அழுத்தம் இல்லாடி நீ எதையும் சாதிக்க வேண்டியதில்ல. உன் தோற்றம், அந்தஸ்து பத்தி கவலை இல்ல. உன் இஷ்டத்துக்கு...

"ரசிகன்" பற்றி பாலு

ஹாய் அபிலாஷ், ‘ரசிகன்’ நாவலை வாசித்தேன்.  உங்களுடைய அ-புனைவு நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். அவற்றையும் தங்களின் கட்டுரைகளையும் வைத்துச் சொல்வதானால் நீங்கள் எனது அபிமான எழுத்தாளர். ஆனால் உங்களின் சிறுகதைத் தொகுப்பான ‘தேவி’ என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. அதனாலேயே உங்களின் புனைவெழுத்து பக்கம் வர தாமதாகிவிட்டது. ’தேவி’ படித்துவிட்டு நான் வந்த ஒரு முன்முடிவு ‘அபிலாஷுக்கு புனைவு கைகூடவில்லை’ என்பது. அ-புனைவு எழுத்தாளராக இருக்கும்போது ஏற்படும் தர்க்க நோக்கம் புனைவழகியலை நெருங்கவிடாமல் செய்கிறதோ என்ற சந்தேகமும் இருந்தது. ‘ரசிகன்’ என் முன்முடிவுகளையெல்லாம் தகர்த்துவிட்டது. இந்நூலைப் பற்றி எனக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம், இது முழுக்க முழுக்க இலக்கியத்தைப் பற்றிய Spoof நாவல். தமிழ் சினிமாவுக்கு மிர்சி சிவாவின் ‘தமிழ்ப்படம்’ போல ‘ரசிகன்’ தமிழிலக்கியத்தைப் பகடி செய்வதாகவே நினைக்கிறேன். நாவலின் முதலிரு பகுதிகளில் பல இடங்களில் சிரித்துக்கொண்டே படித்தேன். ஆனால் இறுதி அத்தியாயம் முற்றிலும் மாறுபட்ட உணர்வை அளித்தது. சாதிக் தன் நாவலை எரிக்கும் அத்தியாயம் உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது. அறிவ...

ஒரு சர்வாதிகாரியின் தனிமை

ஹிட்லருக்கு ஒரு வழக்கம் உண்டு. அவர் ஒருபோதும் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதில்லை. பின்னடைவின் செய்திகளைக் கேட்டால் கடுமையாக கோபப்பட்டு பொருட்களை தூக்கி விசிறியடிப்பது, தன்னை மறந்து திட்டுவது, எச்சரிப்பது, மிரட்டுவது என ஆவி புகுந்த பாவியைப் போல நடந்துகொள்வார். அதன் பிறகு அவரது பிரச்சார அமைச்சர் கோபெல்ஸை அழைத்து தோல்வி குறித்த கதைகளை மறைப்பதற்காக மக்களிடம் தான் வென்றதாக ஒரு நம்பிக்கை ஏற்படுத்த சொல்வார். 1941இல் ரஷ்யாவில் ஜெர்மனிய படை மரண அடிவாங்கி பின்னோடியது. பனிக்காலத்தில் உறைந்து போய் சரியான உணவோ பாதுகாப்போ இல்லாமல் வீரர்கள் மடிந்தனர். ஆனால் அவர்கள் திரும்ப வந்துவிடவோ பின்வாங்கவோ கூடாது என ஹிட்லர் ஆணையிட்டதால் அவர்கள் வேறுவழியின்றி சண்டையிட்டனர். இறந்த குதிரைகளின் தசையை அவர்கள் தின்னும் போது பக்கத்தில் ஒருவர் கக்கா போய்க்கொண்டிருப்பார். அந்தளவுக்கு சிறிய இடங்களில் பதுங்கி வாழ்ந்துகொண்டிருந்தனர். கொஞ்சம் வெளியே போனால் ரஷ்ய படை சுட்டுவிடும். கோபெல்ஸ் ராணுவத்தினர் வெற்றிகொள்வதாக, எதிரிகளை சுட்டுவீழ்த்துவதாக படமெடுத்து அதை திரைப்படமாக வெளியிட்டார்; எல்லா திரைப்படங்களிலும் இந்த திரைத்துணுககுக...

கைவிடப்பட்ட திரளும் அதற்கான அரசியலும்

திமுக கூட்டணி 40 தொகுதிகளை அடித்திருப்பது பாராட்டத்தக்கது. தெளிவான அரசியல் இலக்கு, கூட்டணி ஒற்றுமை, உழைப்பு, ஸ்டாலினின் தலைமை, ஊடகங்கள், தொண்டர்கள் என பல காரணிகள் இதன் பின்னால் உள்ளனர். இருந்தாலும் திமுகவின் வாக்கு சதவீதம் சற்றே குறைந்துள்ளது (5-6%). முற்போக்காளர்கள் என்னதான கேலி பேசினாலும், மறுத்தாலும் நாம் தமிழர்கள் 4% மேல் முன்னேறி உள்ளனர். நாம் தமிழர் கட்சி முன்பு பலமுறை அதிமுகவுக்கும், அதற்கு முன்பும் பின்பும் ஒன்றியத்தில் ஆளும் அரசுகளுக்கும் விலை போய் உள்ளது அல்லது அவர்களிடம் இருந்து நிதியும், உளவுத்துறையின் வழிகாட்டுதலையும் பெற்றது. அண்மையில் அண்ணாமலையின் நிதி நல்கைத் திட்டத்தின் கீழும் இருந்தார்கள். ஒருவிதத்தில் இம்மாதிரியான நிதியுதவியையும் பெரிய அண்ணன்களின் ஆதரவையும் கொண்டே எந்த இடத்தையும் வெல்லாத ஒரு கட்சியாக அவர்கள் இப்படித்தான் தம் அரசியல் இடத்தை தக்க வைத்தும் கொண்டார்கள். ஆனால் அதையும் மீறி அவர்களுடைய ஆர்ப்பாட்டமான பேச்சுக்கு ஒரு இடம் இளைஞர்கள் மத்தியில் உள்ளது. எனக்குத் தெரிந்த சில இளம் நண்பர்களே நா.த.கவில் உறுப்பினர்களாகவோ சிறு பொறுப்புகளிலோ இருக்கிறார்கள். அங்கு அவர்கள்...

பாராளுமன்ற தேர்தல்: சாதி, மத வாக்குப் பங்கீடும் அதன் அரசியலும்

  2024 பாராளுமன்ற தேர்தலில் சாதி-மதம் அடிப்படையிலான வாக்கு சதவீதத்தைப் பற்றி ஒப்பீனியன் தமிழ் அலைவரிசையில் ஒரு தரவை முன்வைத்தார்கள் - அதிகமாக தலித் வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு வந்துள்ளது. இங்குள்ள தலித்துகளை பாஜக தன் வசம் இழுக்க ஒரு புறம் முயன்று வருகிறது, தலித் அறிவுசமூகம் (intelligensia) மறைமுகமாகவும், சில உதிரி கட்சிகள் நேரடியாகவும் பாஜகவை ஆதரிக்கின்றனர் என்றாலும் கணிசமானோர் இன்னமும் திராவிட கட்சிகளின் ஆதரவாளர்களே. வேறு சில மாநிலங்க்ளிலோ பாஜக வந்து இட ஒதுக்கீட்டைப் பறித்து விடுமோ எனும் பயம் தலித் சமூகங்களுக்கு இருந்தது. தமழ்நாட்டில் அப்பயம் இல்லாவிடினும் திராவிட கட்சிகளின் பகுதியாக தம்மைக் காண்கின்றனர் என நினைக்கிறேன். அதற்குரிய சமூகப்பொருளாதார காரணங்கள் இங்கு உள்ளன. அதே நேரம் பழங்குடிகளின் வாக்குகள் கணிசமாக பாஜக கூட்டணிக்குப் போயுள்ளது. அதற்கான முயற்சிகளை சில மாநிலங்களில் பாஜக செய்தது, முர்முவை ஜனாதிபதி ஆக்கியது ஆகியவற்றை வைத்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இன்னொரு பக்கம், ஆதிக்க சாதியினரின் வாக்குகள் நியாயமக பாஜகவுக்கே போயிருக்க வேண்டும். அதுவும் பிற்படுத்தப்பட்டோர...

இருமுனைக் கத்தி அரியணை ஆகுமா?

காங்கிரஸ் கட்சியின் ஊடக சந்திப்பில் தேர்தல் கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளின் ஆதரவை ஆட்சி அமைக்கத் தேடுவீர்களா என நிதீஷையும் சந்திரபாபு காருவையும் மனத்தில் வைத்து ஒரு பத்திரிகையாளர் கேட்க ராகுலும் கார்க்கேவும் நாளை கூட்டணிக் கட்சிகளுடன் விவாதித்து முடிவெடுப்போம் என்றார்கள். சமயோஜிதமான முடிவு. ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கும். கூட்டணிக்கு வெளியே இருந்து வந்தவர்களுக்கு கேட்டதைக் கொடுத்தால் உள்ளே இருக்கும் கட்சியினர் கோபித்துக் கொண்டு போய் விட்டால் பஞ்சாயத்தாகி விடும். ஏற்கனவே மம்தாவும், ஸ்டாலினும் தில்லிக்குப் போகவில்லை. ஆக அவர்களிடமும் கேட்டுவிட்டு பகிர்ந்து முடிவெடுப்பதே ஆதாயம். இது காங்கிரஸை விட மோடி-ஷா தலைக்கட்டுகளுக்கே பெரிய குடைச்சலாக இருக்கும். நிதீஷைப் போன்றவர்கள் சும்மாவே ஆனையைக் கொடு, பூனையைக் கொடு எனக் கேட்பார்கள். காங்கிரஸ் எதையும் இழக்கப் போவதில்லை. அவர்கள் பரிசீலிக்கலாம். ஆனால் நம் தலைக்கட்டுகளுக்கு அது ஆபத்தானது. பொம்மை அமைச்சரவையை ஆட்டி வைத்துக்கொண்டு விமானத்தில் பறந்து, பாராளுமன்றத்தில் தலைகாட்டாமலும், மொத்த வருமானத்தையும் தானும் கூட்டாளியுமாக ஆட்டைய...

அரபியும் ஒட்டகமும்

ஈதினா தேர்தல் கணிப்பு நிறுவனத்தின் டாக்டர் வாசு நியூஸ்மினிட் யுடியூப் அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் பாஜக-ஜெ.டி.எஸ் கூட்டணி பற்றி ஒரு சுவாரஸ்யமான கருத்தைப் பகிர்கிறார். வொக்கலிகா சமூகத்தை கவர்ந்து தென்கர்நாடகாவை வெல்வது பாஜகவின் நோக்கம். அதற்காக அவர்கள் கடந்த சில வருடங்களாகவே அச்சமூகத்தை கவரும் நோக்கில் நிறைய முயற்சிகளை எடுக்கிறார்கள்; கெம்பேகௌடா சிலை அமைப்பது,அச்சமூகத்திற்காக நிறைய நிதியை செலவிடுவது, அச்சமூகத்தை சேர்ந்தவரை கடந்த ஆட்சியின் போது துணைமுதல்வர் ஆக்கியது என. தென்கர்நாடகாவில் வலுவாக உள்ள ஆர்.டி.எஸ்ஸை பாஜக வீழித்தி அங்கு வளரத் தேவையில்லை, கூடவிருந்தே அக்கட்சியின் வாங்கு வங்கியை அவர்கள் கவர்ந்து கட்சியை செரிக்க முடியும் என டாக்டர் வாசு சொல்கிறார். குறிப்பாக, பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் பலாத்கார வழக்குக்குப் பின்னர் ஹசனில் அவர் தோற்பது சாத்தியமாகும் எனில் அதை பயன்படுத்தி ஹசனில் ஜெ.டி.எஸ்ஸை பாஜக முழுங்கிவிட்டு அதனிடத்தில் ஒரு பெரிய கட்சியாக மலரும் என்கிறார். ரேவண்ணாவின் பலாத்கார காணொளிகளை பென் டிரைவில் மக்களிடம் பரப்பியவர்கள் காங்கிரஸ் அல்ல, பாஜகவினரே என ஒரு பேச்சு ஓடியது. ரே...

"நாவல் எழுதும் கலை" நூலை மலேசியாவில் வாங்க

  ஆர்.அபிலாஷின், 'நாவல் எழுதும் கலை' நீங்கள் இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். ஒரு நாவலை எழுதி விட வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள். ஆனால் எங்கிருந்து துவங்குவது, எப்படி ஒரு கதையை நாவலாக விரிவாக்குவது, ஒரு கட்டத்தில் கதை நகரவில்லை, கதையின் ஜீவனில்லை என்று பட்டால் எப்படி தீர்வு காண்பது, எழுதிய பின் அது நாவலாக வந்திருக்கிறதா என எப்படி அறிவது, புத்தகமாக்கி பதிப்பிக்க யாரிடம் போவது? இக்கேள்விகள் உங்களுக்கு உண்டெனில் உங்களிடம் இருக்க வேண்டிய கையேடு இது. மேலும், நாவல் எனும் கலை வடிவத்தின் அமைப்பு, மொழிநடை, தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்கள், எதிர்கால எழுத்தாளர்களும் படிக்க வேண்டிய நூல் இது. புத்தகம் வாங்க http://www.wasap.my/60164.../BSB_BOOKSHOP_MALAYSIA_Novel_Abi அன்புடன் #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

புதிய டிரெண்ட்

இதை எத்தனை பேர்கள் உணர்கிறீர்கள் எனத் தெரியவில்லை. எனக்கு ரஹ்மானின் அண்மைக்கால பாடல்கள் (கடந்த சில ஆண்டுகளாக) ஏதோ ராணுவ அணிவகுப்பு மெட்டைப் போல தோன்றுகின்றன. ஒரு எளிய மெட்டு, அதையே அடுத்தடுத்து சரணத்திலும் மீளப்பாடும்படியும் சில வாத்திய கருவிகளை அதே போல தட்டையாக ஒலிக்கவிட்டு முடித்துவிடுகிறார். (இதைப் பற்றி தன் பதிவு ஒன்றில் குறிப்பிட்ட பிரபாகர் வேதமாணிக்கம் ஒரு புதிய முறையை கொண்டு வர முயல்கிறார் ரஹ்மான் என்று சொல்லியிருந்தார்.) ஆண்டுக்கு சராசரியாக பல பாடல்களை இப்படி உருவாக்கி கலர் கோழிக்குஞ்சுகளை போல வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். ரஹ்மான் பாட்டு என்றாலே ஒரு வெறுப்பு தோன்றுகிறது. யார் பாராட்டினாலும் இப்போது நான் கேட்க தயாராவதில்லை. டங் டங் டடன் டங் டங் டங் டடண் டங் இப்படியே எல்லா பாடல்களும் போகின்றன. ஐந்தாண்டுகள் முன்வரை அவரது பாடல்களில் நிறைய சிக்கலான அமைப்புகள், படிவம் படிவமான மாறுபாடுகள், ஸ்வரங்கள் வரும் (அது அவராக உருவாக்கியதோ இல்லையோ). இப்போது அவரது நாட்டுப்புற மெட்டுடன் வரும் ஹிந்துஸ்தானி ஸ்வரம் கூட டங் டடங் என்.ஸி.ஸி, ராணுவ அணிவகுப்பு மாதிரியே ஒலிக்கிறது. சரி ரஹ்மானிடம் தான் ...

தேநீர்க் கடைக்குள் ஒரு காவலர்

  ஒரு கான்ஸ்டபிள் தேநீர்க் கடைக்குள் அவசரமாக நுழைந்து டீ மாஸ்டரிடம் தோளைத் தொட்டு பிரியமாக சிரிக்க சிரிக்க எதையோ கேட்கிறார். உடல்மொழியில் ஒரு குழைவு. அப்படியே ஒரு கையால் அன்றைய கலக்‌ஷனை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மற்றொரு கையால் துடைத்துக் கொண்டு பைக்கில் ஏறி சிரித்தபடி கிளம்புகிறார். அங்கு அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களைப் பற்றி கவலையில்லை. அவரது மனிதநேயமும் பண்பும் என்னை வெகுவாக ஈர்த்தது. ஊழல் என்றவுடன், ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவுடன் வருகிற குற்றவுணர்வுடன் ஒரு சகோதரத்துவம், அன்பு, சமத்துவமும் கூடவே வந்துவிடுகிறது. தான் அந்த மிகப்பெரிய அரசு எந்திரத்தின் பகுதியெனினும் தானும் பணத்தின் தேவையுள்ள ஒரு சாதாரண மனிதன் எனும் உணர்வு. ஊழல் அதிகார வர்க்கத்தை சாமானியன் ஆக்குகிறது.

இந்தியா இஸ்ரேலாகுமா?

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்தியா பெரும்பான்மை யூதர்களின் வாக்குகளை மட்டும் கொண்டு ஸியோனிஸ்ட் கட்சிகளை மட்டும் ஆட்சியில் வர அனுமதிக்கும் இஸ்ரேலைப் போல ஆகும் என மாலன் அந்திமழை பேட்டியில் கூறுவதைக் கேட்டேன். இதெல்லாம் என்ன மாதிரி ஒப்பீடு? இஸ்ரேலின் வரலாறு, பண்பாடு, பொருளாதாரம், இனக்குழு அடையாளம், மதங்கள் வேறு இந்தியா வேறு. இஸ்ரேல் செயற்கையாக மேற்கத்திய சக்திகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறிய நாடு. இந்தியாவோ மிக மிக சிக்கலான பரந்துபட்ட தேசம். காலனியவாதிகள் வருமுன்பே இந்து அடையாளம் அற்று பல்வேறு தொகுப்புகளாக வாழ்ந்து வந்த மக்கள் இந்தியர். எத்தனையோ நம்பிக்கைகள், பண்பாடுகள், தத்துவங்கள், மொழிகள், சாதிகள், மதங்களைக் கொண்ட தேசம் இது. இங்கு ராமர் பெயரிலான அரசியல் பிரச்சாரம் மகாராஷ்டிர தலித்துகளை பதற்றமாக்குகிறது. தென்னிந்தியர்களை அந்நியமாக்குகிறது. வைணவ தலைமையை சைவர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் சிவனுடன் விஷ்ணுவையும் வழிபட தயங்க மாட்டார்கள். கேரள சி.எம்.ஐ சபையினர் தம் ஏசுவின் பக்கத்தில் சங்கரரை வைத்திருக்கிறார்கள். பல பௌத்த கோயில்களை இந்துக்கோயில்களாக்கி எந்த பிரச்சினையும் இன்றி...

மர்ம தேசம்

ஜூன் 4க்குப் பிறகு பாஜக எப்படி நடந்துகொள்ளும் என்பதைப் பற்றின கணிப்புகள் எனக்கு எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா-சஞ்சய் அணி காங்கிரஸ் கட்சியையும் ஊடஙகளையும் ஒரேயடியாக கட்டுப்படுத்தி எந்த உண்மை செய்திகளும் மக்களுக்கு போய் சேர விடாமல் தடுத்து ஒரு பூடகமான, மர்மமான சூழலை உருவாக்கியதை நினைவுபடுத்துகிறது. இந்திரா சட்டம் மூலமாக கடும் ஊடக தணிக்கையை கொண்டு வந்தார் எனில் மோடி-ஷா ஊடகங்களின் பங்குகளை விலைக்கு வாங்கி, அமலாக்கத் துறையை ஏவிய அச்சுறுத்தியும், ஓசி விளம்பரங்களைக் கொடுத்தும் அனேகமாக எல்லா ஊடகவியலாளர்களையும் ஊடக முதலாளிகளையும் மறைமுக தணிக்கை செய்துவிட்டார்கள். ஒட்டுமொத்த தேசமும் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனும் கையறு நிலையில் இருக்கிறது. வாக்களிப்பதுடன் மக்களின் பங்கு முடிவதில்லை, ஜனநாயக விழுமியங்கள் பேணப்பட்டு அடுத்த அரசு ஒழுங்காக அமைவதையும் உறுதிபடுத்த வேண்டும் என சில சிவில் அமைப்புகள் கோரும் நிலை வந்திருக்கிறது. ராணுவ ஆட்சி, வாக்கு எந்திரங்களை கைப்பற்றுவது போன்ற புரளிகளும் பரவுகின்றன. இந்திராவின் எமெர்ஜென்ஸியின் போது அவர் அமெரிக்க சதியுடன் தன்னைக் கொல்லும் சதித்திட்டம் உள்ளது எனத் தொடர்ந...

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளின் அரசியல்

  தேர்தலின் கடைசி நாள் 6 மணிக்கு முடியவில்லை. தேர்தல் நாளன்று எட்டு மணி வரை மக்கள் தொடர்ந்து வாக்களிக்க வந்துகொண்டிருப்பது இயல்பே. ஆனால் நேற்றைக்கு கோ-டி மீடியா வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளை அவர்கள் நேற்று காலையிலே முடித்து தொகுத்திருக்க வேண்டும். அது அப்படியே பாஜக தேர்தலுக்கு முன்பு கோரியதை பிரதிபலிப்பதைப் பார்க்கும் போது இந்த ஒட்டுமொத்த அபத்தத்தின் நோக்கம் என்ன எனும் கேள்விதான் எழுகிறது. "இது மோடிஜியின் மீடியாவின் மிகு கற்பனை" என ராகுல் காந்தி சொல்வது சரிதான் போல. குறிப்பாக, வடக்கே இடங்கள் குறைந்து தெற்கே அதிகரிக்கும் என சொல்வது, தமிழகத்தில் பாஜக கூட்டணி 16 இடங்களை வரை வெல்லும் என்பதெல்லாம் நடக்குமா? இதெல்லாம் ஓவராக இல்லை? இன்னொரு பிரச்சினை இது ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்கள் இடையே 0.02% மக்களிடம் மட்டும் எடுத்த கணிப்பு என்கிறார்கள். ஆனால் அதிக வாக்காளர்களிடம் கருத்துக் கேட்பது அவசியமல்ல என்று சி.எஸ்.டி.எஸ்ஸின் பேராசிரியர் சஞ்சய் குமார் சொல்கிறார். 1996இல் சி.எஸ்.டி.எஸ்ஸால் 17,604 வாக்காளர்களை கருத்துக்கணிப்பு செய்து கட்சிகளின் தொகுதி-வாரி வாக்குகளின் பங்கீட்ட...

ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?

மோசமான உணவு நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதுடன் பல நோய்களையும் உண்டு பண்ணுகிறது . எது மோசமான உணவு என்றால் எது மலிவானதோ , எளிதாக கிடைக்கிறதோ அதுவே மோசமான உணவு . கடந்த சில ஆண்டுகளில் நான் புரிந்துகொண்ட முக்கியமான உண்மை இது . உடல் நலத்தை நாம் பொருளாதாரத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது . இன்று அரிசி , கோதுமை விலை குறைவு , அதை விட மைதா விலை மலிவு . பலவிதமான காய்கறிகளையும் பனீர் , டோபு , சிக்கன் , சீஸ் உள்ளிட்ட புரதங்களையும் சேர்த்த சாலட்டைப் பண்ணுவதற்கு ஆகும் செலவுக்கு இரண்டு நாளைக்கு சோறு , குழம்பு வைத்து சாப்பிடலாம் ( காய்கறி விலை மிக மிக அதிகமாகி விட்டது ; சிக்கன் கிலோ முன்னூறைத் தாண்டி விட்டது . அரிசி விலை என்றுமே உயராது . இலவசமாகவே கிடைக்கிறது . மைதா விலை ஏறுவதே இல்லை .). ஒருவருக்கு ஒருநாளைக்கான 60-80 கிராம் புரதத்தை அடைய செய்யும் செலவுக்கு பத்து நாட்களுக்கு மாவுச்சத்து உணவுகளை ஜாலியாக சாப்பிடலாம் . மேலும் காய்கறிகளை வாங்கி கழுவி நறுக்கி வாயிலிட்டு மென்று சாப்பிடும் சிரமத்துக்கு ரெ...