ஈதினா தேர்தல் கணிப்பு நிறுவனத்தின் டாக்டர் வாசு நியூஸ்மினிட் யுடியூப் அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் பாஜக-ஜெ.டி.எஸ் கூட்டணி பற்றி ஒரு சுவாரஸ்யமான கருத்தைப் பகிர்கிறார். வொக்கலிகா சமூகத்தை கவர்ந்து தென்கர்நாடகாவை வெல்வது பாஜகவின் நோக்கம். அதற்காக அவர்கள் கடந்த சில வருடங்களாகவே அச்சமூகத்தை கவரும் நோக்கில் நிறைய முயற்சிகளை எடுக்கிறார்கள்; கெம்பேகௌடா சிலை அமைப்பது,அச்சமூகத்திற்காக நிறைய நிதியை செலவிடுவது, அச்சமூகத்தை சேர்ந்தவரை கடந்த ஆட்சியின் போது துணைமுதல்வர் ஆக்கியது என. தென்கர்நாடகாவில் வலுவாக உள்ள ஆர்.டி.எஸ்ஸை பாஜக வீழித்தி அங்கு வளரத் தேவையில்லை, கூடவிருந்தே அக்கட்சியின் வாங்கு வங்கியை அவர்கள் கவர்ந்து கட்சியை செரிக்க முடியும் என டாக்டர் வாசு சொல்கிறார். குறிப்பாக, பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் பலாத்கார வழக்குக்குப் பின்னர் ஹசனில் அவர் தோற்பது சாத்தியமாகும் எனில் அதை பயன்படுத்தி ஹசனில் ஜெ.டி.எஸ்ஸை பாஜக முழுங்கிவிட்டு அதனிடத்தில் ஒரு பெரிய கட்சியாக மலரும் என்கிறார்.
ரேவண்ணாவின் பலாத்கார காணொளிகளை பென் டிரைவில் மக்களிடம் பரப்பியவர்கள் காங்கிரஸ் அல்ல, பாஜகவினரே என ஒரு பேச்சு ஓடியது. ரேவண்ணாவின் ஓட்டுநரும் அந்த பென் டிரைவை தான் பாஜக தலைவர் ஒருவரிடம் அளித்ததாக சொன்னார். தன் கூட்டணி கட்சியின் முக்கிய வாரிசை ஏன் பாஜக வீழ்த்தி, தேர்தலில் ஒரு இடத்தை இழக்க வேண்டும்? இது ஒருவேளை பாஜகவின் உள்முரணின் விளைவோ, ஹசன் தொகுதியைப் பெற முடியாத ஆத்திரத்தில் பாஜக தலைவர் செய்த சூழ்ச்சியோ இது என பலரும் கருதினார்கள். ஆனால் இப்போது அது முழுக்க பாஜக தலைமையின் திட்டமிடலே என அம்பலமாகியுள்ளது.
ஏப்ரல் மாதம் தன் கட்சி பாஜகவுடன் இணையுமா எனக் கேட்ட போது வாய்ப்பே இல்லை, கூட்டணி மட்டும் தான் என குமாரசாமி சொன்னார். ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போது இப்படி ஒரு ஆப்பு தன் கட்சிக்கு தயாராகிறது, ரேவண்ணாவை வைத்தே அடித்து காலி பண்ணப் போகிறார்கள் என அவர் கற்பனை செய்திருக்க மட்டார். அவருக்கு ரேவண்ணாவை ஒரேயடியாக நீக்கவும் முடியவில்லை, பாஜகவை கண்டிக்கவும் இயலவில்லை, முழுங்கவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை. ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த அரபியின் நிலையே தான்.