உ . பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் மாநிலத்தில் இருந்து வேறு ஊர்களுக்குப் பிழைப்பு தேடிப் போகும் தொழிலாளர்களுக்கு என ஒரு தனி கமிஷன் ஆரம்பித்திருப்பதாக ஒரு செய்தி படித்ததும் இந்த ஆள் ஒரு கின்னரன் , அடுத்த மோடி மஸ்தான் இவர்தான் எனும் முந்தையை எண்ணம் உறுதிப்பட்டது . உ . பியின் மக்கள் தொகை இருபதரை கோடி . அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ இருபத்தாறு லட்சம் . அந்த மாநிலத்தில் எந்தளவுக்கு வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் இருந்தால் இப்படி ஜனத்தொகையில் சுமார் பத்து சதவீதம் பேர் புலம்பெயரும் நிலை ஏற்படும் என யோசியுங்கள் . கொரோனா நாடடங்கின் போது உ . பி . யின் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் . ஒரு பக்கம் அவர்களால் தமது புகுந்த வீடான புலம்பெயர்ந்த மாநிலங்களில் பட்டினியும் பாதுகாப்பின்மையையும் தாங்கி சமாளிக்க முடியவில்லை . அந்த மாநிலங்கள் வேலையில்லாத போது இவர்களை விலங்குகளை விட கீழாக நடத்திட பிறந்த வீடான உ . பியோ தம் வீட்டுக்குள் அவர...