உயிர்மை இணையதளத்தில் பிரசுரமாக உள்ள “புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனைக்கான மூன்று தீர்வுகள்” கட்டுரையிலிருந்து:
“இந்த முறைசாரா புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு எனக்கு மூன்று தீர்வுகள் தோன்றுகின்றன. எந்த பாஜக தலைவரும் ஏற்க விரும்பாத தீர்வுகள்:
1) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என ஒவ்வொரு மாநிலத்திலும் (எந்த கட்சியையும் சாராத) ஒரு தொழிற்சங்கம் தொழிலாளிகளைக் கொண்டு தேர்தல் நடத்தி அமைப்பது. தொழிற்சங்கத்தில் இங்கு வரும் ஒவ்வொரு தொழிலாளியும் பதிவு செய்ய வேண்டும் என சட்டமியற்றுவது.
தொழிற்சங்கம் மூலம் மாநில அரசிடம் ஆலோசித்து தொழிலாளிகளுக்கான அடிப்படை ஊதியம், வாழிட உரிமைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவற்றை தீர்மானிப்பது. அடுத்த விசயம் தான் முக்கியம்: எத்தனை தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலான வாக்குகளை, அவர்கள் அதிகமாக உள்ள தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் அவர்கள் சார்பில் இடும் உரிமையை தொழிற்சங்கத்துக்கே அளித்தல்; இந்த வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு எம்.எல்.ஏவை தேர்ந்தெடுத்தல் - வெளிமாநில தொழிலாளிகளுக்கு இங்கு வாக்களிக்க அனுமதிப்பது ஆபத்தானது என்பதால் இந்த தற்காலிக ஏற்பாடு உதவும். அவர்கள் விரும்பினால் சொந்த மாநிலத்துக்கும் சென்றும் கூட வாக்களிக்கலாம் என சட்டமியற்றுவது. இந்த இரட்டை வாக்களிப்பு முறை அவர்களுக்கு புலம்பெயர்ந்த மாநிலத்தில் ஒரு அதிகாரத்தை, நம்பிக்கையை அளிக்கும். அவர்களை யாரும் குப்பை போல நடத்த முடியாமல் ஆகும். அவர்களை முதலாளிகள் பன்றித்தொழுவத்தில் அடைத்து வைக்கிற நிலை ஏற்படாது.”
இதைப் பற்றி உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே! இதை ஏற்பீர்களா அல்லது மறுப்பீர்களா? இதனால் பலன்கள் ஏற்படுமா பிரச்சனை வருமா?
