Skip to main content

Posts

Showing posts from August, 2018

ஒரு அப்பாவின் பொறாமை - தஸ்தாவஸ்கி

 நட்டாஷா (நாவல் சினிமாவாக்கப்பட்ட போது) “இதோ பாரேன், அப்பாவின் அன்பு என்பது, அதுவும் கூட பொறாமையில் தோன்றுவது தான். அவருக்கு என்ன தெரியுமா வருத்தம் – அலோய்ஷாவுடனான என் காதல் துவங்கியதும், அது பின்னர் நாங்கள் ஓடிச் செல்வதில் போய் முடிந்ததும் அவருக்கு ஆரம்பத்தில் தெரியாது என்பதே அவரை அதிகாமாய் காயப்படுத்தியது.   – அவர் கண்ணுக்கு அது படவில்லை, அவர் அதை தவற விட்டு விட்டார் என்பதைத் தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்துத்துவாவை வளர விட்ட காங்கிரஸ் – இதன் தீர்வு என்ன?

கோட்சேவுக்கு இந்து மகாசபையினர் எழுப்பி உள்ள கோயில் என் முந்தைய பதிவில் மதவாத தடுப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் , அதன் மூலம் இந்துத்துவா தமிழகத்தில் எதிர்காலத்தில் பரவுவதை தடுக்க வேண்டும் என கோரி இருந்தேன் . அதற்கு கருத்து தெரிவித்த நண்பர்களில் சிலர் “ அத்தகைய சட்டம் பாசிசம் ஆகாதா ?” என கேட்டிருந்தார்கள் . ஆம் உண்மை தான் . ஆனால் இந்துத்துவாவை வேரோடு அறுக்க வேறுவழியில்லை . பாசிசத்துக்கு பாசிசம் தான் மருந்து.   ஆர் . எஸ் . எஸ் , பாஜக போன்ற கட்சிகள் மிக மிக ஆபத்தானவை . பாஜக இன்று ஆட்சியை கைப்பற்றி தேசத்தை சீரழித்துக் கொண்டிருப்பதற்கு ஒரு காலத்தில் காங்கிரஸ் காட்டிய அக்கறையின்மையே காரணம் என நான் கூறுவேன் . எப்படி ?

மோடியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது

தலைவர் பதவி ஏற்ற ஸ்டாலினின் உரையில் நான் கவனித்த ஒன்று தடம் பிறழ்ந்து எதையும் கூறி விடக் கூடாதே எனும் அந்த மெல்லிய பதற்றம். இது தேவையற்ற ஒன்று. மக்களின் உணர்வு ஓட்டத்தைப் புரிந்து அதற்கு ஏற்ப பேசுவதே இன்றைய அரசியலின் தேவை. இன்றைய அரசியல் ஒரு பகற்கனவு அரசியல்.

வாரிசு அரசியலும் திமுகவும்

ஒரு புதுத் தலைவர் தோன்றி மக்கள் மனதை வெல்ல, பழைய தலைவர் தனக்கென ஒரு வாரிசைக் கட்டமைத்து, தன் வாரிசுக்கெனக் கட்சியைத் தயார்படுத்தி வைக்காமல் இருக்க வேண்டும். அதாவது, வாரிசுகள் இல்லாத வெற்றிடமே புதுத் தலைமைகள் தோன்ற, கட்சிக்கு உள்ளும் புறமும் ஜனநாயகப் போட்டி நிலவ, உதவும். அதுவே அண்ணாவுக்கும் கலைஞருக்கும் நிகழ்ந்தது. ஆக, இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியில் உள்ள கலகத் தலைமைகளை ஓரங்கட்டிப் பிரதமரானார் என்பதை இப்படியும் புரிந்துகொள்ளலாம்: இந்திரா எனும் வாரிசே இல்லை எனில் ஒருவேளை ஒரு வலுவான தலைமை காங்கிரஸில் தோன்றி இருக்கலாம் (அண்ணாவுக்குப் பின் கலைஞரைப்போல). ஆக, வாரிசு வழியான தலைமை என்பதே ஜனநாயகத் தலைமை தோன்றுவதற்குத் தடையாக அமைகிறது. தமிழகத்தில் எப்போதெல்லாம் வாரிசுத் தலைமை இல்லையோ அப்போதெல்லாம் புதுத் தலைமை தோன்றியிருக்கிறது (உடனடியாய் அல்லாவிட்டாலும்).

திமுக தலைவர் முதல்வரானால்?

திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். ஸ்டாலினின் ஆளுமை குறித்த எனது அவதானிப்பு இது:

திமுக தலைவர் மற்றும் எதிர்கால முதல்வருக்கு சில கோரிக்கைகள்

திமுக தலைவர் எதிர்காலத்தில் தமிழக முதல்வர் ஆகும் போது அவர் செய்ய வேண்டியவை: 1)    நீங்கள் முதல்வரானதும் முதல் பணியாய், மதவாத தடை சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதன் படி யாராவது மதக்கலவரத்தை தூண்டும்படியாகவோ மக்களிடையே பிரிவினையை தூண்டும்படியாகவோ பேசினால் அவருக்கு எந்த விசாரணையும் இன்றி 10 வருடம் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும். பேசுவதோடு அன்றி செயல்படவும் செய்தால் அன்னாரின் வீடு, வங்கி இருப்புத் தொகை உள்ளிட்டவற்றை அரசு உடைமை ஆக்கிக் கொள்ளலாம். அவர் எதிர்காலத்தில் எப்போதுமே தமிழகத்தில் நுழைய முடியாதபடி தடை விதிக்க வேண்டும். அவர் கட்சி நடத்தினால் அக்கட்சி தடை செய்யப்பட வேண்டும்.

தேவி சர்ச்சைக்குள் ஜெ.மோவின் சர்ச்சை (ர்ச்சை ர்ச்சை ச்சை)

தேவி கவிதையை ஒட்டி மனுஷ்யபுத்திரன் மீது இந்துத்துவ கும்பல் நடத்திய தாக்குதலைப் பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரை ஒரு பாதி அம்பி எழுதியதாகவும் மறுபாதி அந்நியன் எழுதியதாகவும் உள்ளது. முதல் பாதி படித்ததும் “அட” என்றும் பிற்பாதி படித்ததும் “ச்சீ” என்றும் தோன்றியது. ஆனால் நான் இதைச் சொல்ல இக்கட்டுரையை எழுதவில்லை. அக்கட்டுரையில் பல தர்க்கப் பிழைகள் உள்ளன. அவற்றை சுட்டிக் காட்டுவது அவசியம்.

Deceiving You - Manushya Puthiran

How child-like How doubtless in love The way you are fixated on an absolutely pure love

Rain and You - Manushyaputran

I am absolutely unaware Of rain When it constantly pours

கலைஞரா கருணாநிதியா?

மின்னம்பலத்தில் வெளியாகி உள்ள எனது கட்டுரை “ கலைஞரா கருணாநிதியா? ” (https://www.minnambalam.com/k/2018/08/22/40) சமஸ் பட்டப்பெயரை அரசியலில் பயன்படுத்துவது குறித்து எழுதின குறிப்பின் மீதான எனது எதிர்வினை. பட்டப்பெயர்கள் பயன்படுத்துவதையும் ஜனநாயகத்தையும் எதிர்மைகளாய் நாம் காணக் கூடாது என இதில் பேசி இருக்கிறேன். இக்கட்டுரைக்கு பாராட்டுக்கள் வந்தவிதமாய் உள்ளன. கீழே சில கடிதங்கள்:

எழுத்தாளனின் மிகப்பெரிய சவால்

  எழுத்தாளர்கள் mood பற்றி பேசுவார்கள். நல்ல மூட் அமைய அவர்கள் தவமிருப்பார்கள். நீங்கள் எழுத்தாளன் என்றால், எழுதுவதற்கான ஊக்கமிக்க அந்த மனநிலையில் உணர்ச்சிகளால் ததும்பியபடி அதேவேளை உணர்ச்சிகளால் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள். ஒரு காதலைப் பிரிந்த வேதனையில் எழுத முடியாது; ஆனால் காலம் கடந்த பின் அந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கான ஒரு தவிப்பு உங்களுக்கு ஏற்படுகையில் நீங்கள் அதை சிறப்பாய் எழுத முடியும். ஒரு நண்பரிடம் இதைப் பற்றி மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது இமையம் பற்றி குறிப்பு வந்தது. அவரது மகன் நலமற்றிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் சிகிச்சைக்காக நிறைய பணம் செலவழித்திருக்கிறார். அதை விட முக்கியமாய் அவர் எந்தளவு உக்கிரமான உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருப்பார்! அவநம்பிக்கையின் நம்பிக்கையின் எல்லைகளுக்கு இடையில் எந்தளவு ஊசலாடியபடி தவித்திருப்பார்!

மனுஷ்யபுத்திரன் ஏன் எப்போதும் மதவாதிகளுக்கு இலக்காகிறார்?

தனது “ஊழியின் நடனம்” கவிதைக்காக தற்போது எச். ராஜா உள்ளிட்ட தமிழக இந்துத்துவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் மனுஷ்யபுத்திரன். அது சற்றே சிக்கலான கவிதை; அதை எச். ராஜா படித்து புரிந்து கண்டித்து மனுஷை கைது செய்ய வேண்டுமென கோரியிருக்கிறார் என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை எத்தனையோ முறை மனுஷ் மோடியையும் பாஜகவினரையும் கடுமையாய் தாக்கி எழுதியிருக்கிறார். ஏன் அப்போதெல்லாம் கொதிக்காத ராஜா இப்போது கொந்தளிக்கிறார்? ஏன் மனுஷின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து, அவரைத் தாக்கும்படி தன் கட்சியினரை தூண்டி விட்டு, மனுஷை நிலைகுலைய வைக்க முயல்கிறார்?