Skip to main content

Posts

Showing posts from October, 2022

கதையும் எதிர்-கதையும் - சாருவை முன்வைத்து

சாருவின் புனைவை முன்வைத்து எதிர்-கதை என்றால் என்ன, கதை என்பது ஏன் ஒரு ஆபத்தான அரசியலைக் கொண்டதாக இருக்கிறது, அதற்கும் மதவாதம், சாதிய வன்மம், சாராம்சவாதத்துக்குமான தொடர்பு என்னவென இந்த சிற்றுரையில் விளக்கி இருக்கிறேன். நண்பர்களே பாருங்கள்! உங்கள் கருத்துக்களை பகிருங்கள்! நான் தான் ஔரங்கசீப் - அறிமுகம்

வாடகை வீடுகளை முறைப்படுத்துவது

வீட்டு உரிமையாளர்கள்-வாடகையாளர்கள் நீயா நானா விவாதத்தைப் பார்த்த போது ஒரு முக்கியமான அவா எனக்கு ஏற்பட்டது. இது என்னுடைய நீண்ட நாள் ஆசை அரசு - இந்த வாடகை வீடுகளை முறைப்படுத்தி தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அதாவது நகரத்தின் மையத்தில் உள்ள வீடென்றால் 30,000 வெளியே உள்ள வீடென்றால் 8000 எனும் பாரித்த வேறுபாடு இருக்கக் கூடாது. ரெண்டாயிரத்துக்கு மேல் வீடுகளின் வாடகையை இடத்தின் பொருட்டு உயர்த்த அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அடையாறில் வேலை பார்த்தாலும் அயப்பாக்கத்தில் வேலை பார்த்தாலும் உங்களுடைய சம்பத்தில் 20,000 வித்தியாசம் இருக்கப் போவதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் மாறப் போவதில்லை. அரசு ஒரு இணையதளம் ஆரம்பித்து அதில் உரிமையாளர்களும் வாடகையாளர்களும் தம்மைப் பதிவு பண்ணி வரிசை முறையில் வீட்டை மென்பொருளே ஒதுக்கீடு செய்ய வேண்டும். புரோக்கர்களை ஒழிக்க வேண்டும். வீட்டை அடிப்படையான விதிமுறைகள் ஒழிய வேறு காரணங்களுக்காக மறுக்கும் உரிமையை பதிவு பண்ணியுள்ள உரிமையாளர்களுக்கு மறுக்க வேண்டும். அதே போல வாடகையையும் முன்பணத்தையும் இணையதளம் மூலம் செலுத்தி அதை அவ்வழியே உரிமையாளரும்...

சர்வாதிகாரமும் வீட்டுரிமையாளர்களும்

சர்வாதிகாரமும் வீட்டுரிமையாளர்களும் வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கும் குடியிருப்பவர்களுக்கும் இடையிலான இவ்வாரத்தைய நீயா நானா விவாதத்தைப் பார்க்கையில் ஒரு விசயம் புலப்பட்டது - இன்னும் வீட்டு உரிமையாளர்களுக்கு தம் வீட்டில் குடிவருவோர் தம் குடும்பமோ தமக்குக் கிழ் வாழும் மக்களோ அல்ல எனும் தெளிவு வரவில்லை, இயல்பாகவே ஒரு நிலக்கிழார் மனோபாவம் வந்து விடுகிறது. அதனாலே குடியிருப்போரின் நடத்தை, உணவுப்பழக்கம், அவர்கள் வீட்டுக்குள் பேசக் கூடிய ஒலியளவு என ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்துகிறார்கள். என் நண்பர் ஒருவர் சொன்னர். அவர் கீழ்த்தளத்தில் வசிக்கிறார். உரிமையாளர் மேற்தளத்தில். அவரது படுக்கையறைக்கு மேலே தான் உரிமையாளரின் படுக்கையறையும். அதனால் இவர் இங்கே இரவின் அமைதியில் மெதுவாகப் பேசினால் கூட மேலே இருக்கும் அவருக்குக் கேட்டு விடும். கொஞ்சம் சத்தமாக கணவனும் மனைவியும் பேசினால் அது நள்ளிரவென்றாலும் உடனே உரிமையாளரிடம் இருந்து போன் வந்து விடும். அதனால் படுக்கையறையில் கணவனும் மனைவியும் குசுகுசுவென்றே எப்போதும் பேசுவார்களாம். “இதெல்லாம் கூட பிரச்சினை இல்லையா… நைட்டு உறவு வைத்துக் கொண்ட பின் அந்த சத்தம் அவரு...

ஒரு அறிவிப்பு

ஒரு அறிவிப்பு நண்பர்களே, சற்று வருத்தத்துடனே இந்த அறிவிப்பை செய்கிறேன். பொழில் மன்றம் சார்பில் வரும் நவம்பர் மாத நடத்தவிருந்த தமிழின் மகத்தான எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணனுக்கான ஒருநாள் கருத்தரங்கை மாறுபட்ட விதத்தில் அடுத்த ஆண்டு நடத்த வேண்டும் எனும் காரணத்தால் தள்ளி வைக்கிறோம். அடுத்த ஆண்டு இதை ஒரு இருமொழி கருத்தரங்காக மேலும் பிரம்மாண்டமாக நடத்த திட்டம். அது குறித்த அறிவிப்புகளை விரைவில் செய்கிறோம். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு பெங்களூருக்கு வர திட்டமிட்டிருந்தவர்களிடமும், இதில் பேச ஒத்துக் கொண்டிருந்த எழுத்தாள நண்பர்களிடமும், எஸ்.ராமகிருஷ்ணனிடம் தனிப்பட்ட முறையிலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் ஆர். அபிலாஷ்

வாழ்க்கையில் உன்னதமும் இலக்குகளும்

வாழ்க்கையில் வேறெந்த கனவுகளையும் விட திட்டவட்டமான இலக்குகளே அவசியம். அதற்கு ஒரு கால எல்லையும் அமைத்திட வேண்டும். உ.தா நல்ல எழுத்தாளனாவது என்பதை விட ஒரு கால அளவுக்குள் ஒரு நாவலோ பத்து கதைகளோ எழுத வேண்டும் என்பது சிறப்பான இலக்கு. அது இன்னும் நேரடியானது, தூலமானது. 'நல்ல' என்பது, எழுத்தாளனாக இருப்பது என்பது அரூபமானவை. அரூபமாக நம்மை வரையறுப்பது தேவையில்லாத அழுத்தத்தில், நெருக்கடியில் நம்மை வைத்திருக்கும். தொடர்ந்து நான் எவ்வளவு பெரிய ஆள் என சவடால் விட்டுக்கொண்டிருக்கவோ ஜால்ராவுக்கு ஆள் சேர்க்கவோ வேண்டி இருக்கும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தரும் சந்தோஷத்தை கற்பனையான சுயமதிப்பீடுகள் தராது.  ஒரு நாவலை தினமும் எழுதுவதை விட இத்தனை காட்சிகள், பக்கங்கள், சொற்கள் எழுதுவேன் என முடிவெடுப்பது சிறப்பானது, நிஜமானது.  இலக்கியம், தத்துவம் படித்து அறிவு பெற்றவனாவேன் என்பதை விட இன்னின்ன வகை நூல்களைப் படிப்பேன், இவ்வகை தத்துவத்தில் இவ்வருட முடிவுக்குள் ஒரு குறிப்பிட்ட நூல்களைப் படித்து முடித்து அதைப் பற்றி பேசுவேன், எழுத்வேன் எனும் இலக்கு மேலானது.  பணக்காரன் ஆவேன் என்பதை விட இவ்வளவு ...

தீபாவளி வாழ்த்துகள்

வேத மரபினரின் சுரம் எனும் மதுவை அருந்தாததால் அ-சுரர் என அழைக்கப்பட்ட நம் முன்னோர்களான பூர்வ பௌத்தர்களில் ஒருவரான மன்னர் நரகர் கொல்லப்பட்ட நாள் இது. அதற்கான நீத்தார் சடங்கே தீபாவளியாகியது. இதை நினைவில் கொண்டே தீபாவளியைக் கொண்டாடுவோம். நண்பர்களுக்கு நரகாசுர நினைவஞ்சலி தின வாழ்த்துகள்!

திருமணம் எனும் அண்டர்வேர்ல்ட்

இது ஒட்டுமொத்தமாக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது. என்னுடைய அனுமானம் இருவருக்கும் இடையே உறவு மோசமான பின்னர் வேறு நபர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். தன்னுடனான திருமணத்துக்கு முன்பு மற்றொரு திருமணம் செய்திருந்ததை மறைத்து திவ்யா தன்னை ஏமாற்றியதாகவும், தன் விருப்பத்தை மீறி திவ்யா கர்ப்பத்தைக் கலைத்ததாக அரணவ்வும், அரணவ் தன்னைத் தாக்கி கர்ப்பத்தைக் கலைத்ததாகவும் அவருக்கு வேறு பெண்ணுடன் உறவிருப்பதாக திவ்யாவும் கூறுகிறார். இரண்டுமே பாதி உண்மைகளாக இருக்க வேண்டும். உறவு முறியும் போது ஏற்படும் பகையுணர்வை சில ஆண்கள் வன்முறையாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் பெண்கள் தமக்கு சாதகமாக உள்ள சட்டங்கள், மகளிர் காவல்நிலையம் போன்ற அமைப்புகளைக் கொண்டு ஆண்களை சிறையில் தள்ளுவார்கள். இரு தரப்பையும் செலுத்துவது ஒரே உணர்வு தான். திருமணம் செய்வதால் இவ்வளவு பிரச்சினைகள் வருமெனத் தெரிந்தும் ஏன் போய் சிக்கிக் கொள்கிறார்கள்? ஓரினச் சேர்க்கையாளர்களைப் பாருங்கள், சமூக சட்ட அங்கீகாரம் பரவலாக இல்லாததாலே அடிதடி, நீதிமன்றம், வீட்டுமுன் தர்ணா, வரதட்சணை, அதன் பெயரில் போலி வழக்குகள், விவாகரத்து, அதற்காக பல ஆண்...

இன்று ஒரு சேதி

மன ஊக்கம் இருந்தால் காலம் ஏற்படுத்தும் தடைகளைக் கடந்து சிகரம் தொடலாம் என்பதற்கு விராத் கோலி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  2019இல் இருந்து 2022இன் துவக்கம் வரை அவர் மோசமான ஆட்டநிலையில் இருந்தார். அணித்தலைவதாக புற அரசியலாலும் தனது தவறான முடிவுகளாலும் சில சறுக்கல்களை சந்தித்த காலத்திலும் அவர் தவறாமல் தினமும் கடுமையான மட்டையாட்ட பயிற்சியில் ஈடுபடுவார். உடனடியாக பலன் இல்லையே என கலங்கி பயிற்சியை கைவிடவில்லை. அதனாலே இன்று அவரால் அந்த முயற்சியின் பலனை அறுவடை பண்ண முடிகிறது.  இது நாவல் எழுதுவோருக்கும் பொருந்தும் - ஒரு நாவலாசிரியன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறந்த படைப்பை எழுதப் போவதில்லை. முடிக்க இயலாமல் பாதியில் தூக்கி வீசப்பட்ட நாவல்கள், எழுத்தில் தோல்விகள் இருக்கும். ஆனால் அதற்காக சோர்ந்து விடாமல் அவன் தினமும் சில மணிநேரங்களோ சில நிமிடங்களோ நாவலெழுத முயல வேண்டும். சரியான வேளை வரும் போது அவன் மேகங்களை விலக்கி ஆதவனாக வெளிப்படும் போது, இந்த முயற்சி, உழைப்பு கைகொடுக்கும். எதுவும் எப்போதும் வீணாகாது!

கோலியின் அற்புத ஆட்டமும் இந்தியாவின் கால்நடுக்கமும்

டி20 உலகக்கோபையின் முதற் போட்டியில் நிச்சயமாக ஜெயிக்க வேண்டிய இடத்தில் இருந்து இந்தியாவின் துவக்க வீரர்கள் பதற்றமாக ஆடி சொதப்பிட, நிச்சயமாக தோற்க வேண்டிய ஒரு ஆட்டத்தை கோலி - பாண்டியாவின் துணையுடன் - இறுதி வரை போராடி வென்றளித்தார். அதுவும் ஹாரிஸ் ரவுபின் 19வது ஓவரில் அவர் அடித்த இரு சிக்ஸர்களையும் மறக்க முடியுமா? கோலியின் தலைசிறந்த டி20 அரைசதம் இதுதான். இந்த ஆட்டநிலையை அவர் இறுதிப் போட்டி வரை எடுத்து சென்றால் கோப்பை நமக்குத் தான் எனத் தோன்றுகிறது. அதே நேரம் இப்போட்டி முழுக்க பெரிய ஆட்டத்தில் மோதுகிற கால் நடுக்கம் தெளிவாக இந்தியாவுடம் புலப்பட்டது. இன்று கிட்டத்தட்ட choke ஆனார்கள். ஒருவேளை அரை இறுதியிலும் choke ஆனால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கோலியின் இன்றைய இன்னிங்ஸ் போல சில அதிசயங்கள் முக்கியமான போட்டிகளில் நடந்தாலே இந்தியாவால் முன்னேற முடியும்.  ஒப்பிடுகையில் பாகிஸ்தான் இன்னும் மேலான தன்னம்பிக்கையுடன் ஒழுங்குடன் ஆடினார்கள். இறுதி வரை கலங்கவில்லை. ஆனால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் - சிங்கைத் தவிர - துவக்க ஓவர்களில் நீளத்தை fullஆகப் போடவில்லை. சற்று தள்ளி பந்தை லெங்த்தி...

கோலி தந்த கொண்டாட்டம்

நான் என்றுமே ஒரு கோலி விசிறி அல்ல. ஆனால் இன்று என் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்து கைத்தட்டியபடியே பார்த்தேன். நான் என்னை மறந்து ரசித்த போட்டிகளில் ஒன்று. எவ்வளவு பதற்றம், கடுப்பு, ஏமாற்றம், முடிவில் திகைப்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம். கடைசி ஓவர் வரை கொண்டு சென்று ஆட்டத்தை அற்புதமாக முடித்து வைக்கிற பழைய தோனி காலகட்டத்துக்கே போன மாதிரி உணர்வு.

நிறைய அபத்தங்களும் ஒரு உண்மையும்

பெற்றோருடைய அழுத்தத்தினாலோ, இதைவிட வேறொருவர் கிடைப்பார் என்றோ, சும்மாவே பிடிக்காமல் போனதாலோ காதலை முடித்துக் கொள்ளலாம் என ஒருவர் முடிவெடுக்கும் போது மற்றவர் அதை நாகரிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னதான் சிரமம் என்றாலும், கொலைவெறி, குரோதம் வந்தாலும் அதை அடக்கிக் கொள்வதே கண்ணியம். இதையே நம் சமூகம் நீண்ட காலமாக சொல்கிறது. ஆனால் அதே நேரம் நம் சமூகம் மற்றொன்றையும் சொல்கிறது: இந்த உரிமை பெண்ணுக்கு மட்டுமே உண்டு! தன்னுடைய தாய், தந்தையர் வலியுறுத்திய காரணத்தால் அல்லது இதை விட அழகான பணக்கார பெண்ணை கட்டி வைக்கிறேன் என்று ஆசை காட்டியதாலோ ஒரு ஆண் தன் காதலியை கழற்றி விடுகிறான் என்றால் இந்த சமூகம் அவனைத் தூற்றும். அந்த பெண் அவனைப் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு பலாத்கார வழக்குத் தொடுத்தால் அவன் சிறைக்குப் போக வேண்டும். தந்தியில் 'பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர் கைது' என படத்தோடு செய்தி போடுவார்கள். இதில் ஏதாவது லாஜிக் உள்ளதா? உறவு முறியும் பொது ஏற்படும் காயம், வருத்தம், ஏமாற்றம், மன அழுத்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்று தானே? பாலுறவு இருவருக்கும் இருந்திருந்தால் கூட அதில் கிடைக்கும் இ...

நீலகண்டம்

முக்கியமான தமிழ் நாவல்கள் நான் ஒரு அந்தரங்கமான பட்டியல் போட்டால் அதில் சுனில் கிருஷ்ணனின் “ நீலகண்டம் ” இருக்கும் . தமிழில் ஊனம் குறித்து வந்துள்ள ஒரு சில நாவல்களில் பெற்றோரின் தரப்பில் இருந்து குழந்தையின் ஊனத்தைப் பற்றி பேசும் தனித்துவமான படைப்பு இது . மரபணு கோளாறு கொண்ட குழந்தை ஒன்றை தெரியாமல் தத்தெடுக்கும் ஒரு தம்பதியின் வாழ்வில் வருகிற சிக்கல்களும் , அதை இருவரும் தத்தம் வழிகளில் கையாள முயல்வதுமே நாவலின் களம் . ஒரு நாவலை வாசிக்கையில் அங்கிங்கே நம் கவனம் பிசகாமல் நமது மொத்த கவனமும் , ஏதோ கண்ணுக்கு முன்னால் அது ரத்தமும் சதையுமாக நிகழ்வதைப் போல , அதிலேயே குவிந்திருக்க வேண்டும் . நான் அப்படியான ஒரு ஈர்ப்புடன் , கொந்தளிப்புடனே “ நீலகண்டத்தைப் ” படித்தேன் .   எந்தவித இரக்கத்தையும் தன்னிரக்கத்தையும் கோராமல் ஊனத்தைப் பார்க்க முயல்வது இந்நாவலின் ஒரு சிறப்பு . மனிதர்கள் அடிப்படையில் தன்னலம் மிக்கவர்களே . அதுவும் குடும்ப அமைப்புக்குள் - அது தியாகத்தைக் கோருவதாலே - அவர்கள் மிகவும் மூர்க்கமாக மாறுவார்கள் ...