சாருவின் புனைவை முன்வைத்து எதிர்-கதை என்றால் என்ன, கதை என்பது ஏன் ஒரு ஆபத்தான அரசியலைக் கொண்டதாக இருக்கிறது, அதற்கும் மதவாதம், சாதிய வன்மம், சாராம்சவாதத்துக்குமான தொடர்பு என்னவென இந்த சிற்றுரையில் விளக்கி இருக்கிறேன். நண்பர்களே பாருங்கள்! உங்கள் கருத்துக்களை பகிருங்கள்!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share