நான் என்றுமே ஒரு கோலி விசிறி அல்ல. ஆனால் இன்று என் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்து கைத்தட்டியபடியே பார்த்தேன். நான் என்னை மறந்து ரசித்த போட்டிகளில் ஒன்று. எவ்வளவு பதற்றம், கடுப்பு, ஏமாற்றம், முடிவில் திகைப்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம். கடைசி ஓவர் வரை கொண்டு சென்று ஆட்டத்தை அற்புதமாக முடித்து வைக்கிற பழைய தோனி காலகட்டத்துக்கே போன மாதிரி உணர்வு.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share