எதுவுமே ஆரம்பத்தில் சற்று சுலபமாய் படும் . முதல் நாள் பள்ளிக்குப் போவது , காதலியுடன் முதல் நாள் வெளியே சுற்றுவது , ஒரு புதிய டயட்டை பின்பற்றுவது . போகப் போக ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் வரும் . இடைப்பட்ட உண்ணாநோன்புக்கு (intermittent fasting) இது வெகுவாக பொருந்தி வரும் . இடைப்பட்ட உண்ணாநோன்பை பழகினால் எடைகுறைப்பு , உடல் நலத்தை பேணல் , நேரத்தை சேமிப்பு என பல பலன்கள் வரும் . குறிப்பாய் , ஆரம்ப சில மாதங்களுக்கு . சொல்லப் போனால் , பேலியோ உணவு முறை , உடற்பயிற்சி ஆகியவற்றை விட உண்ணாநோன்பினால் அதிக பலன்கள் உடனடியாய் கிடைக்கும் . என் விசயத்தில் , முதல் மூன்று மாதங்களில் மிக சுலபமாய் 16 கிலோ எடை குறைத்தேன் . நான் உணவருந்த்தும் போது எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றவில்லை . விருப்பப்படி சாப்பிட்டேன் . உடற்பயிற்சியையும் ஒழுங்காக தினமும் பண்ணவில்லை . எடை குறைகிற வேகம் எனக்கு வேறெதுவும் தேவையில்லை எனும் நம்பிக்கையை அளித்தது . உண்ணாநோன்பை மிகப்பெரிய வரப்பிரசாதம் என நினைக்கத் தொடங்கினேன் . அதன் பிறகே , ஒரு பெரிய சிக்கல் ஆ...