Skip to main content

Posts

Showing posts from October, 2017

ஒரு சொல்லில் உள்ளது கவிதை

இன்று அதிகாலை நடையில் முதன்முதலாக சந்தித்தோம் நானும் ஒரு பனித்துளியும் ஒரு வாழ்நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்து விட்டு பரஸ்பரம் காணாமல் போனோம்! - எம். யுவன் # "போ...

மேலாண்மை பொன்னுசாமி விடைபெற்றார்

மேலாண்மை பொன்னுசாமியை நான் என் 13ஆம் வயதில் படிக்க ஆரம்பித்தேன். அவர் கதைகளின் உக்கிரம், முறுக்கு, நேரடியாய் கோபத்தை உரக்க சொல்லும் பாணி பிடித்திருந்தது. சிலரைப் பட...

ஜோசப் விஜய்யும் நிஜ விஜய்யும்: எச். ராஜாவின் முட்டாள் வியூகங்கள்

  அரசியல் என்பது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை ஒன்று திரட்டுவது தான். ஆனால் அதை செய்ய நீங்கள் மக்களுக்கு நெருக்கமாய் நின்று அவர்களை ஆழமாய் பாதிக்கும் உணர்ச்சிகள் என்ன என தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்கு இந்த எளிய சூத்திரம் புரியவில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப தம்மை கோமாளியாக்கிக் கொள்கிறார்கள்.  விஜய் ஒரு கிறித்துவர் என எச்.ராஜா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியதில்லை. தன் பெயர் ஜோசப் தான் என்பதை அவரே துணிச்சலாய் சொல்வார். தன் லெட்டர் பேடில் அப்பெயருடன் தான் அவர் குமுதத்துக்கு நன்றிக் கடிதம் அனுப்புகிறார். அவரது தாய் இதைப் பற்றி முன்பு ஒரு பத்திரிகைத் தொடரில் எழுதியுள்ளார். விஜய்யின் தாய் இந்து. அப்பா கிறித்துவர். விஜய் கிறித்துவராகவே வளர்ந்துள்ளார். இது தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை என்பது எச்.ராஜாவுக்கு புரியவில்லை என்பது தான் பிரச்சனையே.

மெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்

  மெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் சிலர் துவங்கி தமிழ் உள்ளூர் முகநூல் விமர்சகர்கள் வரை தெரிவித்த ஆதரவைக் காண்கையில் இந்த கேள்வி மட்டுமே எனக்கு எழுகிறது: ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகத்தில் அவசியமின்றி ஏன் பலரும் எண்டர் ஆகி எழுதப்படாத வசனங்களைப் பேசி வேறு யாருக்கோ கைத்தட்டல்கள் போவதை உணராமல் புல்லரிக்கிறார்கள்? இந்த சர்ச்சையின் நோக்கம் என்ன? (ஆம், எந்த ஊடக சர்ச்சையும், அதுவும் அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்ட எந்த சர்ச்சையும், தாமாக ஏற்படுவதில்லை.

இன்னும் எத்தனைக் காலம் தான்…

சமீபத்தில் நான் பாகிஸ்தான் – இலங்கை ஐம்பது ஓவர் கிரிக்கெட் ஆட்டமொன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். சராசரியான ஸ்கோர் தான். 292. இரண்டாவதாக ஆடிய இலங்கை அந்த இலக்கை எட்டும் நோக்கில் முதல் பத்து ஓவர்களும் சற்று கவனமாய் ஆடியது. தரங்காவும் திரிமன்னேவும் ஒரு பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வந்தார்கள்.  பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கவில்லை. அவர்களை சுலபமாய் அடித்தாட முடிந்தது. அடுத்து ஹபீஸ் ஸ்பின் போட வந்தார். பந்து சுழலவில்லை. சரி, இனிமேல் பாகிஸ்தானுக்கு பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனால் தான் உண்டு. அல்லாவிடில் இந்த ஜோடி நிலைத்தாடினால் இலங்கை நிச்சயம் வென்று விடும் என எண்ணினேன். ஆனால் அடுத்து ஒரு முக்கிய திருப்பம். ஹபீஸ் தன் இரண்டாவது ஓவர் போட வந்தார். ஒரு பந்து சட்டென எகிறித் திரும்பியது. எனக்கு இது வியப்பாக இருந்தது. அதெப்படி சுழலில்லாத ஆடுதளத்தில் இவர் மட்டும் சுழலச் செய்கிறார்? இதனை அடுத்து ஹபீஸ் சில நேரான பந்துகளை வீசினார். அவரை ஆட முடியாது தரங்கா திக்கித் திணறினார். ஒன்றிரண்டு ரன்களை எடுப்பதே ஒரு பிரயத்தனம் ஆகியது. இது மொத்தமாய் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. மூ...

போரும் வாழ்வும் வாசிப்பு

வணக்கம் Abilash, தீபாவளி நல்வாழ்த்துக்கள். நான் தங்களிடம் கடந்த முறை உரையாடும் போது கூறியதைப் போல் போரும் அமைதியும் வாசிக்க ஆரம்பித்து சற்று ஏறக்குறைய 80 பக்கங்கள் கடந்த...

ரசிகன் - வீழ்ச்சியைப் பற்றின நாவல் - குலசேகரன் பாண்டியன்

ஆர். அபிலாஷ் எழுதிய ரசிகன் என்கிற நாவலை நடுவில் வேறெதையும் படிக்காமல் சமீபத்தில் வாசித்தேன். எனக்கே ஆச்சரியம். நாவல் சுவாரசியமாயிருந்தது. ஆனால் எல்லாவற்றையுமே கொ...

பெண்களுக்கு பேச்சு என்பது ஒரு கண்ணாடி

"பெண்களுக்கு பேச்சு என்பது கண்ணாடிமுன் நிற்பதுபோல என்று அவளுடன் பேசும்போது தோன்றும். கண்ணாடி அவளைச் சுருதி சுத்தமாகப் பிரதிபலித்தாகவேண்டும், அவ்வளவுதான். அவள் ய...

என்னவொரு அதிர்ஷ்டம் – மம்தா காலியா

  என்னென்னமோ நடந்திருக்கலாம் எனக்கு. ஏழு வயதில் கடத்தப்பட்டு ஒரு ஆபாசமான மத்திய வயது ஆணால் பலாத்காரம் பண்ணப்பட்டிருக்கலாம். மோசமான உடல் நாற்றம் கொண்ட ஒரு ஆளுக்கு மணமுடிக்கப்பட்டு ஒரு குளிர்பதனப்பெட்டி போல செக்ஸ் உணர்வற்று விரைத்துப் போயிருக்கலாம்.

நிர்வாணமான உண்மையைக் கண்டு எனக்கு அச்சமில்லை - மம்தா காலியா

நிர்வாணமான உண்மையைக் கண்டு எனக்கு அச்சமில்லை அல்லது நிர்வாணமான ஒரு கத்தியைக் கண்டு அல்லது ஒரு நிர்வாண சாக்கடையைக் கண்டு ஆனால் அதன் பொருள் எனக்கு ஒரு நிர்வாணமான ஆணைக் கண்டு அச்சமில்லை என்றல்ல. சொல்லப்போனால், நிர்வாணமான ஆணை நான் பெரிதும் அஞ்சுகிறேன்.

வாலு - மம்தா காலியா

என் தொப்புளைப் பார்க்கையில் உன் நினைவு வருகிறது, அம்மா. உனக்குள் அந்த தொப்புள் கொடியில் நானெப்படி மிதந்திருப்பேன் அம்மா. நான் ஒரு எலியைப் போன்றிருந்திருப்பேன், அவசர மூச்சுகள் விடும் ஒரு நெளிநெளியான சுருள். நீ, நிச்சயம், உன் படைப்பாக்கத்தில் பெருமை கொண்டிருக்க மாட்டாய் - நான் பார்க்க அப்பாவைப் போன்று இருந்தேன் நம் பாத்ரூமை பகிர்ந்து கொண்ட அந்த பக்கத்து வீட்டுக்காரரைப் போன்று இல்லை எனும் நிம்மதியைத் தவிர.

ராபர்ட் பிராஸ்டுக்கு எதிராய் - மம்தா காலியா

என்னால் ராபர்ட் பிராஸ்டை சகிக்க முடிவதில்லை. நம்மில் பலருக்கும் ஒரு ஆப்பிள் வாங்கவே வக்கில்லாத போது அவர் ஏன் ஆப்பிள் பறிப்பதைப் பற்றி பேச வேண்டும்? நானோ ஒரு ஆப்பிளைக் கண்டே மாதங்கள் ஆகிறது – முடிகிற பணத்தையெல்லாம் சேமிக்கிறோம் நாம் பீரும் கர்ப்பத்தடை மாத்திரைகளும் வாங்க.

ஒரு பிறந்த நாள் கவிதை – ஸ்ரீனிவாஸ் ராயப்ரோல்

  சூழ்நிலையின் தேவைக்கு மேலாக  நான் என்றுமே இருந்ததில்லை என்னிடம் என்னை விட அதிகமாய் வேண்டிய ஒரு சூழ்நிலையில் என்றும் நான் இருந்ததில்லை இதயத்தின் புரவிகள் மூளையின் வாதங்களை கழற்றி விட்டு பாய்ந்தோடிய நிலை ஏற்பட்டதில்லை

தாம்பத்ய காதல் - ஸ்ரீனிவாஸ் ராயப்ரோல்

ஒவ்வொரு மாலையிலும் வாயிற் கதவருகே வந்து விடுகிறாள் என் மனைவி என்னை வரவேற்க, தன் கூந்தல் கலைந்திருக்க, அடுக்களை வேலையில் தன் ஆடை அலங்கோலப்பட்டிருக்க என் புராதனக் கார் மெல்ல உருண்டு நுழைய. என் மகள்கள் வாயிற்கதவின் குறுக்குக்கம்பிகளில் தொங்கியபடி வரவேற்க தலைப்படுவார்கள் ஒருத்தி என் பையை தூக்கிப் போவாள், இன்னொருத்தி என் சாப்பாட்டுப் பையையும். என் பகல் பொழுது வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியாகி விட்டது.

கமலின் அரசியல் எதிர்காலம்

சமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாளர். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். வெளியே நல்ல மழை. நானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர். சுருக்கமாக அவர் ஒரு கமலஹாசன். 

வாசிப்பு பற்றி நான்கு கேள்விகள் (2) - எதுக்குமே நேரமில்லை

ஏன் நேரமில்லை? வாசிக்க நேரமில்லை என ஏன் கூறுகிறார்கள்? எனக்கே பல நாட்களில் வாசிக்க ”நேரமிருப்பதில்லை”. ஆனால் அரட்டை அடிக்க, வேலை செய்ய, படம் பார்க்க “நேரமிருக்கும்”. என்னுடைய சில நண்பர்களால் ஒரு ஐம்பது பக்க நாவலைக் கூட தொடர்ந்து படிக்க முடிவதில்லை. ஒரு அத்தியாயம் படித்து விட்டு களைத்து தூங்கி விடுவார்கள். வாசிப்புக்கான தொடர்ச்சி இங்கு தான் முக்கியமாகிறது. நாவல் வாசிப்பில் என் அனுபவம் இப்படி. நான் ஆயிரம் பக்க நாவல் ஒன்றை படித்து முடித்தால் அடுத்து அதே போல மற்றொரு தலையணை நாவலுக்கு தயாராகி விடுவேன். முந்தின நாவலின் தொடர்ச்சியாகவே இதை பார்ப்பேன். இது ஒரு பருவம். ஆயிரக்கணக்கான பக்கங்களை சுலபத்தில் தாண்டி சென்று விடுவேன். பிறகு ஒரு இடைவேளை வரும். வேறு வகையான நூல்களை வாசிக்க துவங்குவேன். பெரிய நூல்களுக்கான பழக்கம் விட்டுப் போன பின் ஒரு புதிய ஆயிரம் பக்க நாவலுக்குள் நுழைவது சிரமமாக இருக்கும். நூறு பக்கம் படித்ததும் ஆர்வம் இழந்து விடுவேன்.