என்னால் ராபர்ட் பிராஸ்டை சகிக்க முடிவதில்லை.
நம்மில் பலருக்கும் ஒரு ஆப்பிள் வாங்கவே வக்கில்லாத போது
அவர் ஏன் ஆப்பிள் பறிப்பதைப் பற்றி பேச வேண்டும்?
நானோ ஒரு ஆப்பிளைக் கண்டே மாதங்கள் ஆகிறது –
முடிகிற பணத்தையெல்லாம் சேமிக்கிறோம் நாம்
பீரும் கர்ப்பத்தடை மாத்திரைகளும் வாங்க.