
என்னென்னமோ
நடந்திருக்கலாம் எனக்கு.
ஏழு வயதில் கடத்தப்பட்டு
ஒரு ஆபாசமான மத்திய வயது ஆணால்
பலாத்காரம் பண்ணப்பட்டிருக்கலாம்.
மோசமான உடல் நாற்றம் கொண்ட
ஒரு ஆளுக்கு மணமுடிக்கப்பட்டு
ஒரு குளிர்பதனப்பெட்டி போல
செக்ஸ் உணர்வற்று விரைத்துப் போயிருக்கலாம்.
வாடகை ரசீதில்
கைநாட்டு வைக்கும்
ஒரு படிப்பறிவற்ற பெண்ணாக
இருந்திருக்கலாம்.
ஆனால் அப்படியேதும் எனக்கு நிகழவில்லை
இரண்டு குழந்தைகளும்
இரண்டு கருச்சிதைவுகளும் தவிர