Skip to main content

Posts

Showing posts from November, 2025

நகல் காதலர்கள்

  அண்மையில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தனக்கு மிகவும் பிடித்த பெண் என்று பெண்ணின் ரீல்ஸைக் காட்டினார். மிகையான சிரிப்புடன் படு கவர்ச்சியாக அப்பெண் நடப்பது, குனிவது, கோலமிடுவது, ஜாகிங் போவது என பல காணொளிகள். அவரிடம் இது செய்யறிவால் உருவாக்கப்பட்டது, இப்பெண்ணே இல்லை என்று சொன்னதும் அவர் அதிர்ந்துவிட்டார். அதன்பிறகு என்னிடம் சிறிது நேரம் பேசவே இல்லை. இன்று இன்னொரு பக்கத்தை பேஸ்புக்கில் பார்த்தேன். இதே செய்யறிவு படைப்புகள். ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் நடத்துகிறார்கள். அப்பெண் பேசுவது, பாடுவது, ஆடுவது என காணொளிகள். வேறேதோ பக்கத்தில் இருந்து எடுத்த இளம்பெண்ணின், வயதான பெண்ணின் படங்களுடன் இதையும் இணைத்து குடும்பச் சித்திரங்களையும் பதிவேற்றியிருந்தார்கள். ஒவ்வொரு படத்துக்கும் ஆயிரக்கணக்கில் விருப்பக்குறிகள், காணொளிகளுக்கு அதைவிட அதிகம். மென்பொருளுக்கு சந்தா கட்டி இப்படியான காணொளிகளையும் பக்கங்களையும் உருவாக்கி பேஸ்புக்கில் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். சில நிமிடங்களில் முடிகிற காரியம். அதில் ஒரு வருமானம். இதை உண்மையென நம்பி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறாயா, இதுதான் ...

விட்டு அடிப்பவர்களுக்கு வீசுவது

தென்னாப்பிரிக்காவின் யான்சன் மட்டையாடும்போது கவனியுங்கள் - அவர் தனக்குத் தடுத்தாடும் திறன் இல்லாததால் குச்சிகளை விட்டு ஆடுகிறார் - அதனால் அவர் பந்துகளை அவற்றின் நீளத்தைப் பார்த்தே அடிக்கிறார், திசையை நோக்கி அல்ல. அதாவது அவர் திசையைத் தன் கணக்கில் இருந்தே எடுத்து விடுகிறார். நடுக்குச்சியில் விழும்பந்து அவருக்கு ஆப் குச்சியாகவும், கால் குச்சியில் விழுவது நடுக்குச்சியாகவும் இருக்கும். இது பந்துகளை நேராகவும் மிட்விக்கெட் மேலும் தூக்கி அடிக்க சுலபமாகும். ஓரளவுக்கு கண்-கை ஒருங்கிணைப்பு கொண்ட மட்டையாளர்களுக்கு அதிக ஸ்டிரைக் ரேட்டில் ஆட இது வெகுவாக உதவும் பாணி. எல்.பி.டபிள்யு, வைடை வெளியே எடுத்துவிடலாம். இப்படியான மட்டையாளர்களுக்குப் பந்து வீசுவதன் பால பாடமே பந்தை 5-6வது குச்சிகளில், குறைநீளத்திலோ யார்க்கர் நீளத்திலோ வீச வேண்டும் என்பதுதான். இந்தப் பாணி ஆட்டத்தைச் செறிவாகப் பயன்படுத்தியவர்கள் தோனியும், டிவில்லியர்ஸும். அவர்கள் இருவரும்கூட கேட்ச் கொடுத்தே அதிகமான முறைகள் அவுட் ஆனார்கள். இன்று அந்த இடத்தில் இருப்பவர் குட்டி ஏ.பி என அழைக்கப்படும் தெவால்ட் பிரெக்ஸிஸ். அடுத்துதான் யான்சன், போஷ் போன...

திருப்பாத சுழலர்கள்

  குல்தீப்பை ஏன் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் ஆட வைக்கவில்லை என்று கடந்த இரு டெஸ்ட் பயணங்களின்போதும் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவருக்குப் பந்து வீச பின்னர் வாய்ப்புகள் அமைந்தபோது சோபிக்கவில்லை. கடந்த ஆண்டு அவரிடம் இருந்த ஒன்று இன்று இல்லை. 2024இல் அவருக்கு ஏற்பட்ட கவட்டுப் பகுதி காயம் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அவர் காயத்திற்குப் பிறகு ஆசியக் கோப்பையில் நன்றாக வீசி நிறைய விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அதன்பிறகு நடந்த ஐ.பி.எப்பில் அவரது ரன் ரேட்டும் விக்கெட்டுகளும் எதிர்பார்த்தபடிக்கு இல்லை. டெஸ்டுகளில் மே.இ தீவுகளுக்கு எதிரான மலிவான விக்கெட்டுகள் உதவினாலும் நியுசிலாந்துக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் எதிராக அவர் திணறினார். எந்த விதத்தில்? காயத்திற்கு முன்பு குல்தீப்பின் பந்துவீச்சில் வேகமும் திருப்பமும் இருந்தது. பந்து விர்ரென்று சுழன்றது. இதுவும் அவரது பந்துவீச்சில் இயல்பாகவே உள்ள மர்மத்தையும் கொண்டு அவர் கச்சிதமான சுழலராகத் தெரிந்தார். இதை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக அவர் தன் பந்தை வீசாத வலது கையை (non-bowling arm) பயன்படுத்திய விதம...

தென்னாப்பிரிக்காவின் பொற்காலம்

  வெறுமனே மத்திய வரிசை மட்டையாட்டத் திறமை என்று எடுத்துக்கொண்டால் தென்னாப்பிரிக்க அணி நம்மைவிட பலமடங்கு மேல். இன்று பல அணிகளிடமும் ஓரளவுக்கு நல்ல துவக்க வீரர்கள் உண்டு. ஆனால் மத்திய வரிசையின் பலமே ஒரு அணியின் வெற்றிகளைத் தீர்மானிக்கிறது. பிரீட்ஸ்கி பார்க்க அந்த காலத்து டிவில்லியர்ஸைப் போல இருக்கிறார். அடுத்து குட்டி ஏ.பி பிரெவிஸ். அடுத்து இரண்டு பிரமாதமான ஆல்ரவுண்டர்கள் - யான்ஸனும் போஷும் - இருவருமே 25-60 சராசரி வைத்திருக்கிறார்கள். சுலபத்தில் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிறார்கள். இது போக மார்க்ரமும் டிகாக்கும். கிட்டத்தட்ட எந்த இடத்தில் இருந்தும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறம் படைத்த வீரர்கள். இந்தியாவின் மட்டையாட்ட வரிசையை ஒப்பிட்டுப் பாருங்கள் - நம்மிடம் யாருமே இல்லை. ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என எடுத்துக்கொண்டாலும் இந்த மட்டையாட்ட ஆற்றல் இல்லை. மேலும் வயதும் அவர்கள் வசமே (இந்திய மட்டையாளர்களுக்கு ஒன்று திறமை இல்லை அல்லது கோலி, ரோஹித்தைப் போல வயதில்லை). ஆக, இதுதான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் பொற்காலம். வரக்கூடிய 50 ஓவர் உலகக்கோப்ப்பைத் தொடரின...

Peace Review இதழில் என் கட்டுரை

  ஜெபின் லிஜோவும் நானும் இணைந்து எழுதிய கட்டுரையொன்று Peace Review எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைகள் எதிரெதிராக வைக்கப்படும் சூழலில் இங்குள்ள சாதிய வெறுப்பை, தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளை, சமூகப்பிளவை எப்படிச் சரிசெய்வது என இக்கட்டுரையில் விவாதித்துள்ளோம். கிறைஸ்டில் ஜெபின் என் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இருந்தார். அவரது ஆய்வை ஒட்டி நாங்கள் இந்த சமூகச் சிக்கல்களைக் குறித்து நிறைய விவாதித்தோம். அந்த விவாதங்களின் ஒரு பகுதியாக இக்கட்டுரை கிளைத்துள்ளது. கட்டுரையின் தொடுவழி: https://www.tandfonline.com/doi/full/10.1080/10402659.2025.2581872?src= ஜெபினுக்கு என் நன்றி. பின்குறிப்பு 1: இது இப்போதைக்கு "சந்தா இல்லாதாரும் வாசிக்கும்" இதழ் அல்ல (அதாவது closed access journal). ஆனாலும் அதன் சுருக்கத்தைப் படிக்கலாம் என்பதற்காகப் பகிர்ந்துள்ளேன். பின்குறிப்பு 2: நான் முன்பு காப்பி எடிட்டிங் எனப்படும் ஆய்வுக்கட்டுரை திருத்தும் பணியில் இருந்தபோது Taylor and Francis பதிப்பகத்தின் கட்டுரைகளைத் தொடர்ந்து திருத்திக் கொண்டிருந்தேன் (அவர்கள் எங்கள் நிறுவனத்தின் ம...

அமெரிக்காவின் அவலம்

  அமெரிக்காவில் உள்ள மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் சம்பளத்துக்கென்று வேலையிருந்தும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். பணவீக்கம் அந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இவர்களைக் காப்பாற்றுவதற்காக உணவுச் சலுகைச் சீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இ.பி.டி எனப்படும் மின்னணு பயன் பரிமாற்ற அட்டையைக் கொடுக்கிறார்கள். 40 மில்லியனுக்கு மேல் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் இதைக் கொண்டு பொருள் வாங்கலாம். இதில் ஒரு பெரிய சிக்கல் அரசு முடிந்தளவுக்கு மக்களை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றவே முயல்கிறது என்பது. ரெண்டாயிரத்து சொச்சம் டாலர்களே ஒரு குடும்பத்தின் மாத வருமானமாக இருக்க வேண்டும் என வரையறை உண்டென்றாலும் (இதில் பல நுணுக்கமான விதிமுறைகள் இருக்கலாம்) சம்பளத்தில் சிறிதே தொகை ஏறினால் கூட அட்டையில் உள்ள பணத்தைக் குறைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு (இந்திய ரூபாய் கணக்குப்படி)உங்கள் சம்பளம் மாதத்திற்கு 15,000. ஒருநாள் உங்கள் கணக்கில் ஆயிரம் கூடுதலாக வந்தால் அரசு உங்களுக்கான...

உண்மையான சிறுபான்மை 'ஆதிக்கம்'

பெங்களூரில் மலையாளிகளின் ஆதிக்கத்தின் விளைவாக மாட்டுக்கறி தாராளமாகக் கிடைத்து வந்தது. அங்கு அரசு தடைவிதித்தபோதும் கூட முதிய மாடுகளை அறுக்கலாம் எனும் நிபந்தனைகளுடன் அனுமதித்தது. அங்கு இக்கடைகளை நடத்தி வரும் இஸ்லாமியர்களும் ஓரளவுக்கு சுதந்திரமாக செயல்பட முடிகிறது. அதாவது பாஜக அரசு இருந்தபோதும் கூட இதுவே நிலை. ஆனால் மைசூர் அப்படி அல்ல. மைசூர் மன்னர்களின் காலத்தில் பிராமணர்களுக்கு அதிகமாக நிலத்தையும் செல்வத்தையும் பதவிகளையும் வழங்கினார்கள். பிராமணர்களுக்கு இங்கு ஒரு கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. அடுத்து மார்வாரி ஜெயின்களின் ஆதிக்கமும் அதிகம். அவர்கள் வசமே பெரும்பாலான கடைகளும் வீடுகளும் உள்ளன. இதனால் மறைமுகமாகவே இறைச்சி உணவுகள் பரவலாகக் கிடைக்காமல் தடை செய்துவிடுகிறார்கள். ஒருமுறை சுற்றி வந்தாலே இதுவொரு சைவ உணவு நகரம் எனும் உணர்வு ஏற்படும். ஆனால் அது உண்மையல்ல, இறைச்சி உணவை உண்போர் குறிப்பிடத்தக்க அளவில் உள்கிறார்கள். தாம் உண்ணும் உணவைக் கொண்டாடும் உரிமை மட்டும் அவர்களுக்கு இருப்பதில்லை. கூச்சம், குற்றவுணர்வு இங்குள்ள பொதுப்பண்பாட்டில் உள்ளது. நாங்கள் இங்கு வந்தபோது மாட்டுக்கறியைத்தான் தே...

கத்தியைத் தூக்கிக்கொண்டு வீதியில் ஓடும் விமர்சனம்

  எனக்கு கடுமையான விமர்சனங்களில் நம்பிக்கையில்லை. சொல்லப்போனால் எனக்கு இலக்கிய மதிப்பீடல், தரவரிசை, வெற்றி தோல்வியிலும் நம்பிக்கையில்லை. இன்னும் சொல்லப்போனால் என் கண் முன்னால் புத்தகங்களே உள்ளன, எழுத்தாளர்கள் இல்லை. ஒரு பிரதியின் போக்குகளை, அதில் தோன்றும் சிக்கல்களை அலசலாம். அதிலும் நம்மால் புறவயமாக சில தொழில்நுட்ப உள்ளோட்டங்களை மட்டுமே அடையாளம் காண முடியும். வாசிப்பில் விரியும் படைப்பானது தோன்றி விகசிக்கும் மானுடப் பிரக்ஞை. புத்தகம் என்பது எழுதப்பட்டதோ, வாசிக்கப்படுவதோ அல்ல என்று நினைக்கிறேன். அதனாலே அது உடலுறவுக்கு நெருக்கமான அனுபவம். அது நம்மை இன்மைக்கு வெகு நெருக்கமாகக் கொண்டு போகிறது. எழுதி முடிக்கையில் மட்டுமல்ல எழுதும்போது கூட ஒரு படைப்பாளி மரணித்துவிடுவது இதனாலே. நான் இவ்விசயத்தில் விதிவிலக்கானவன் என நினைக்கிறேன்.

மாயக் கதவின் கதை

  பொதுவாக கடுமையான விமர்சனங்களைப் பார்க்கையில் எனக்கு விமர்சிக்கப்பட்ட படைப்பாளி மீது இரக்கம் மேலிடும். ஆனால் அண்மையில் அவ்வாறு விமர்சித்த ஒருவரே என் இரக்கத்தை, வருத்தத்தை, கவலையைக் கோரும்படியாக ஒரு பதிவெழுதியிருந்தார்: தான் எழுதிய எதிர்மறை விமர்சத்தினால் தனக்கு எதிர்காலத்தில் திறக்கப்படக்கூடிய கதவுகள் திறக்கப்படாமல் போகக்கூடும் எனத் தனக்குத் தெரியும் என்று அவர் சொல்கிறார். அவரது வருத்தம் புரிகிறது. இது இன்றைக்கு பல எழுத்தாளர்களுக்குள்ளும் இருக்கும் அச்சம்தான். எழுத்தாளர்கள் ஒற்றை அடையாளத்தின் கீழ் வரும் ஒரு இயக்கத்தின் பகுதியாக தம்மை மாற்றும்போது அவர்களை இணைப்பது தன்னலமும் அச்சமுமே. அவர்கள் அதனாலே தம் கருத்துக்களை தம் இதயத்துக்குள் புதைத்துக் கொள்கிறார்கள். எழுத்தாளர்கள் தம் கருத்துக்களைச் சுதந்திரமாகத் தெரிவிக்க முடியாமல் போகும்போது அவர்கள் அகவெளியும் சுருங்குகிறது, அவர்களுக்கும் சமூகத்துக்குமான தொடர்பு வலை அறுகிறது, அவர்கள் மௌனத்தை தூக்குக் கயிறாக முடிச்சிட்டு தம் கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். தமிழில் இதற்குச் சிறந்த உதாரணம் விஷ்ணுபுரம் அமைப்பு. ஜெயமோகன் என்னதான் எழுத்தாளர்க...

நாவலெழுதுவது பற்றின குறிப்புகள் 7

இருவகையான நாவல் வாசிப்புகள் உளன. ஒன்று விமர்சக வாசிப்பு. மற்றொன்று வாசக வாசிப்பு. விமர்சன வாசிப்பு நாவல் குறித்த சிந்தனைகளை ஒழுங்குபடுத்த, அரசியல்படுத்த முயல்கிறது. அதற்கென்று திட்டமிட்ட நோக்கம் எப்போதும் உண்டு. அதனாலே நாவலின் திரளாத பலதரப்பட்ட முரணான எண்ண, உணர்வோட்டங்கள் உள்ள பரப்பை விமர்சகரால் எட்ட முடியாது. விமர்சகரின் இயக்கமே நாவல் வாசிப்பின் இயக்கத்துக்கு எதிரானதுதான். ஆனால் விமர்சன வாசிப்புக்கென்று ஒரு இடம் உள்ளது - ஒரு நூலகர் அலமாரி அடுக்குகளில் சரியாக நூல்களை அடுக்குவதைப் போன்ற, ஒரு போக்குவரத்துக் காவலர் சாலை நடுவே வந்து இவரை எதாவது கார் மோதினால் என்னாவது என நாம் பயந்துகொண்டிருக்கும்போதே 'நீ போ, நீ வா' என நெறிப்படுத்துவதைப் போன்ற செயல் அது. ஆனால் வாசகர்கள் விமர்சக வாசிப்பைப் பொருட்படுத்துவதில்லை. வாசிப்பு அவர்களை விமர்சனத்துக்கு அப்பாலே கொண்டு செல்கிறது. வாசிப்பு ஒருவிதத்தில் வெள்ளப்பெருக்கைப் போன்றது. அதில் நின்று நிதானமாக யோசிக்க முடியாது. ஒரு நாவலில் முக்கியமற்றது என விமர்சகர் நினைக்கும் பகுதியை வாசகர் ரசித்து அதிலேயே தொய்வார். ஒரு கதையில் பொருட்படுத்தத் தகாத ஒரு தக...

அமெரிக்காவின் அவலம்

அமெரிக்காவில் உள்ள மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் சம்பளத்துக்கென்று வேலையிருந்தும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். பணவீக்கம் அந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இவர்களைக் காப்பாற்றுவதற்காக உணவுச் சலுகைச் சீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இ.பி.டி எனப்படும் மின்னணு பயன் பரிமாற்ற அட்டையைக் கொடுக்கிறார்கள். 40 மில்லியனுக்கு மேல் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் இதைக் கொண்டு பொருள் வாங்கலாம். இதில் ஒரு பெரிய சிக்கல் அரசு முடிந்தளவுக்கு மக்களை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றவே முயல்கிறது என்பது. ரெண்டாயிரத்து சொச்சம் டாலர்களே ஒரு குடும்பத்தின் மாத வருமானமாக இருக்க வேண்டும் என வரையறை உண்டென்றாலும் (இதில் பல நுணுக்கமான விதிமுறைகள் இருக்கலாம்) சம்பளத்தில் சிறிதே தொகை ஏறினால் கூட அட்டையில் உள்ள பணத்தைக் குறைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு (இந்திய ரூபாய் கணக்குப்படி)உங்கள் சம்பளம் மாதத்திற்கு 15,000. ஒருநாள் உங்கள் கணக்கில் ஆயிரம் கூடுதலாக வந்தால் அரசு உங்களுக்கான மானிய...

“வீதி சமைப்போம்”

அம்பையின் சிறந்த கதைகளில் ஒன்று இது. இம்மாத உயிர்மையில் வெளியாகி உள்ளது. கதையின் மையம் இதுதான்: ஒரு வீதி அல்லது பகுதியுடன் நமது நினைவுகள், நம்பிக்கைகள், வரலாறு பிணைந்துள்ளது. நாம் அதை நம்முடனே வைத்துக்கொள்ள விரும்புகிறோம். இன்னொரு பக்கம், அந்த வெளி உருமாறிக்கொண்டும், நகர்ந்தபடியும் இருக்கிறது. அழியாதவை, அழிந்து உருமாறுகிறவை எனும் இரு விசைகளுக்கு இடையிலான மோதல்தான் இக்கதை. அம்பை தன் வழக்கப்படி ஒரு குடும்பத்தை, அதன் வரலாற்றை, அக்குடும்பம் வேர்பிடித்த நகரத்தை விவரிக்கிறார். அக்குடும்பத்துப் பாத்திரங்களுக்கு இடையிலான உறவுகளை, நிபந்தனைகளை, பாசப்பிணைப்பைக் காட்டுகிறார். ஆண் குடும்பத் தலைவர் பேசினாலும் அவர் மெல்லமெல்ல பின்னகர்ந்து பெண்களின் குரல் அதிகமாகக் கேட்கத் தொடங்கி அவ்வாறே - பெண்ணின் தன்னிலை வெளிப்பாட்டுடன் - கதை முடியவும் செய்கிறது. அம்பையின் முந்தைய கதைகளில் பாசப்பிணைப்பு துன்பப் பிணைப்பாக மாறும் நிலையும் சித்தரிக்கப்படும். ஆனால் இக்கதையில் பாஸிட்டிவிஸ்ட் தன்மை அதிகம் எனத் தோன்றும்போது அவர் ஒரு சிந்தி இனத்துப் பெரியவரான திலீப் ஸக்லானியை முன்னிலைப்படுத்துகிறார். திலீப் தன் கடந்த கால ந...