"ஆப்யந்தர குற்றவாளி" சேதுநாத் பத்மகுமார் என்பவர் எழுதி இயக்கிய படம். ஆசிப் அலி நாயக வேடத்தில். 498A போன்ற போலி வழக்குகளால் அலைகழிக்கப்படும் இளைஞர் ஒருவரின் கதை. இக்கதை நான் கேட்ட, பார்த்த பல்வேறு சம்பவங்களை மீள்நிகழ்த்தியதைப் போல உள்ளது. பெற்றோரின் அழுத்தத்தின் பெயரில் திருமணம் செய்து அதிலிருந்து உடனடியாக வெளியேற பொய்க்குற்றங்களை கணவர் மீது சுமத்தி வழக்காடுமன்றம் வரும் ஒரு பெண். அவர் இறுதியில் மனம் மாறி நீதிபதி முன்பு உண்மையை ஒப்புக்கொண்டு வழக்கைப் பின்வாங்குகிறார். நடுவே துணைக்கதைகளாக பொய்க்குற்றச்சாட்டின் பெயரில் மகளைக் காண அனுமதிக்கப்படாத அப்பாவும், அம்மாவாலும் தாத்தாவாலும் அவர் மீது அச்சத்திடமும் இயல்பாகவே தனக்கு அப்பா மீதுள்ள பாசத்திடமும் மோதித் தடுமாறுகிற அவரது பெண் குழந்தை, கணவர் இறந்தபிறகு மாமனார் பெயரில் உள்ள சொத்தைக் கேட்டு வழக்காடு மன்றம் செல்லும் பெண் எனக் காத்திரமான சில காட்சிகளும் உள்ளன. அந்த மகளைக் காணத் தவிக்கும் அப்பாவின் பாத்திரத்தில் சித்தார்த் பரதன் அபாரமாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, பெரும்பாலானவர்கள் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். சிறு பா...