Skip to main content

Posts

Showing posts from July, 2023

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே

பத்ரி சேஷாத்ரி என் நெருக்கமான நண்பர் அல்லவெனினும் எனக்குப் பிரியமான பரிச்சயங்களில் ஒருவர். ஒரு பதிப்பாளராகவும், கிரிக் இன்போ இணையதளத்தின் மூலவர்களில் ஒருவர் எனும் அளவிலும் அவர் மீது எனக்கு மரியாதையுண்டு. அவர் இன்னும் பெரிய உயரங்களுக்கு சென்றிருக்க வேண்டியவர். கிழக்குப் பதிப்பகம் ஒரு வித்தியாசமான பதிப்பகம். வெகுஜன வாசிப்புக்கு குறைந்த விலையில் பல நல்ல அறிமுக நூல்களுக்கு எடுத்துச் சென்றது, நல்ல லாபமும் பார்த்தது. இன்று யுடியூபில் சேனல்கள் செய்கிற அதே காரியத்தை (அறிமுகம்-சுவாரஸ்யம்-பரபரப்பு) அவர் ரெண்டாயிரத்தில் பதிப்பில் செய்து பார்த்தார். முதன்முதலாக காலக்கெடு விதித்து சம்பளம் கொடுத்து எழுத்தாளர்களைக் கொண்டு 150-180 பக்க அளவில் ஒரு தொழிற்சாலையைப் போல புத்தகங்களை உருவாக்கினார். நேர்த்தியான எளிமையான அறிமுக நூல்கள். என்.ஹெச்.எம் செயலியை அறிமுகப்படுத்தினார். என்னால் துல்லியமாக சொல்ல முடியவில்லை எனினும் 2010க்குப் பிறகு பதிப்பாளராக அவரது வீழ்ச்சி மெல்ல துவங்கியது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெற்று இந்திய மொழிகளில் அவர் ஏற்கனவே தமிழில் வெற்றிகரமாக செய்த முயற்சிகளை செய்...

ஒரு தீர்வற்ற தீர்வு

 நம் மனதை மிகவும் அழுத்துகிற துன்பங்களை மறைப்பதோ மனதின் அடியாழத்தில் மேலும் அழுத்தி புதைப்பதோ தவறானது என அறிவேன். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இல்லாத பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் வேறுவழியிருப்பதில்லை. என் வாழ்வில் அப்படி நேர்ந்த ஒரே துயரம் என் மகனைப் பிரிந்ததுதான். எதாவது ஒரு சிறிய நிகழ்வோ தகவலோ காட்சியோ என் நினைவுகளைத் தூண்டிவிட்டால் நான் கட்டுப்படுத்த இயலாத துயர மனநிலைக்குப் போய்விடுவேன். ஒரு எழுத்தாளனாக நான் நாவலை எழுதும் காலங்களில் குறிப்பாக ஒரு கொதிநிலையில் இருப்பேன். நியாயமாக அது தான் என்னை தனிப்பட்ட துக்கங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும், ஆனால் முரணாக அதுவே தான் என்னை சுலபத்தில் உணர்வுரீதியாக தடுமாறக் கூடியவனாகவும் மாற்றுகிறது. அதனாலே நான் கடந்த சில மாதங்களாக இவ்வகையான பிரச்சினைகள் பற்றி முகநூலிலோ பிளாகிலோ எழுதுவதில்லை. தற்செயலாக எழுதினாலும் அழித்துவிடுகிறேன்.  இன்றிலிருந்து 10 நாட்களுக்கு முன் என் மகனின் பிறந்தநாள் வந்தது. அன்று அதிர்ஷ்டவசமாக நான் தில்லியில் பயணத்தில் இருந்ததால் அதன் நினைவு என் மனதை உருக்குலைப்பதில் இருந்து தப்பித்துவிட்டேன். ஆனால் பயணம் முடிந்து திரும்...

கண்டிப்பாக வாங்குவேன்!

நான் கண்டிப்பா வாங்குவேன். எனக்கு நிறைய பணத்தேவை உள்ளது. பொருள் வயின் உலகு, பொருள் வயின் அன்பு, பொருள் வயின் குடும்பம். பொருள் இருந்தால் நான் என் மகனை பார்க்க முடியும். இது என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடம். இப்போது அகாடெமி விருதுடன் ஒரு லட்சத்துடன் அரசு வழங்கும் வீடும் கிடைக்கிறது. எனக்கு சொந்தமாக வீடும் இல்லை. அதனால் நான் வாங்குவேன். அகாடெமி நான் விருதை வாங்கும்போது அந்த ஒரு லட்சத்தை 10-25 லட்சமாக மாற்றினால் நன்றாக இருக்கும்.  

எழுத்தாளர்களும் ராகுல் காந்தியும்

  கேள்வி: சும்மா ஒரு சந்தேகம் - ராகுல் காந்தி கேரளாவுக்குப் போனால் கோட்டக்கலில் எம்.டியை அவர் வீட்டில் போய் சந்திப்பார். ஆனால் ராகுல் தமிழ்நாட்டுக்கு வந்தால் எதாவது எழுத்தாளரை தேடிப் போய் சந்திப்பாரா? பதில்: எம்.டியின் சமூக மதிப்பு அங்கு எக்கச்சக்கம். அவரை சந்திப்பது ராகுலின் நன்மதிப்பை மேலும் உயர்த்தும். தமிழகத்தில் எழுத்தாளரை எவனுக்கும் தெரியாது. அதனால் ராகுலும் சந்தித்து பரிசு வாங்க மாட்டார். அப்படியே ராகுலை சந்திக்க வேண்டினாலும் அவர் பாத யாத்திரை போகும்போது பின்னாடியே கத்திக்கொண்டு ஓடி கூட்டதை மீறி அவரை சந்தித்து நூலைக் கொடுக்க வேண்டும்.

சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சொதப்புவதற்கான நிஜக் காரணம்

நாம் இந்திய மட்டையாளர்கள் அனைவரும் சுழல் பந்தை சிறப்பாக ஆடத்தக்கவர்கள் என கற்பனையைக் கொண்டுள்ளோம். ஆனால் அது உண்மையல்ல. சூழலை ஆடும் திறன் மாநிலங்களைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக தமிழக, ஆந்திர வீரர்கள் சிறப்பாக சுழலை ஆடுவார்கள், ஆனால் மும்பை வீரர்களுக்கு - கவாஸ்கருக்குப் பிறகு வந்தவர்கள் குறிப்பாக - சச்சின், ரோஹித், ரஹானே உள்ளிட்டு சுழலை ஆடுவதில் ஒரு பிரச்சினை உள்ளது. (ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே விதிவிலக்கு) குறிப்பாக எல்.பி.டபுள்யூ, பவுல்ட் ஆவது. சச்சின் ஸ்வீப் ஆடி இந்த குறையை எதிர்கொண்டாலும் அவரும் தன் கடைசிக் காலத்தில் இவ்வாறே தொடர்ந்து சுழல் பந்துக்கு அவுட் ஆகிக் கொண்டிருந்தார். என்னுடைய கணிப்பு படி மும்பை மட்டையாளர்களில் பலருக்கும் சுழல் பந்தை வீச்சாளரின் கையில் இருந்தே வாசித்து அதற்கு ஏற்ப காலாட்டத்தை முன்னெடுக்கும் திறன் இல்லை. அவர்கள் பந்து ஆடுதளத்தில் விழுந்த பிறகே அதை கணித்தாடுகிறார்கள். ஆகையால் அது திரும்புமா நேராக வருமா என்பதை ஊகிக்க முடியாமல் ஒன்று கண்மூடித்தனமாக ஸ்வீப் செய்கிறார்கள் அல்லது பின்னங்காலுக்கு சென்று தடுத்தாட முயன்று அவுட் ஆகிறார்கள். சூர்யகுமாரைப் பொறுத்தவரையில் அ...

முரடர்களை ஆளும் மாபியா தலைவர்கள்

மணிப்பூர் கலவரத்தின் போது அப்பெண்களின் சகோதரரும் தகப்பனாரும் கொல்லப்பட்டார்கள். மேலும் பல குழந்தைகளும் வயசாளிகளும் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். ஆனால் அச்சம்பவங்கள் மக்களின் ‘மனசாட்சியை’ தட்டி எழுப்பவில்லை. ஆனால் ஒரே ஒரு நிர்வாண ஊர்வலக் காணொளி மொத்த நாட்டையுமே உலுக்கிவிட்டது. ஏன்? நாம் அடிப்படையில் நிலப்பிரபுத்துவ / விவசாயக் குடி மனநிலை கொண்டவர்கள். நமக்கு நிலத்துக்கு அடுத்தபடியாக பெண்ணுடலே முக்கியம். அதுவும் பெண்ணின் கருப்பை, அவளுடைய கன்னிமை. ஏனென்றால் நிலத்தின் மீதான அதிகாரத்தை பெண்ணின் சந்ததி வழியாகவே நாம் நிலைநாட்ட முடியும். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டாக இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் துணிச்சல் நமக்கில்லை. ஆகையால் பெண் என்பவள் பலவீனமானவள், பெண்ணுக்கு எதிரான குற்றமே ஆகக்கொடூரமான மன்னிக்க முடியாத குற்றம், அது அநாகரிகம், அநீதி என ஜல்லியடிக்கிறோம். மணிப்பூர் சம்பவத்தின் போதும் அதுவே நடந்தது - அப்பெண்ணுக்கு நேர்ந்த துன்பத்தை விட அவளுடைய உடலுக்கு நேர்ந்த அத்துமீறலே நம்மை அதிகம் உலுக்கியது. அதை விட அந்த நிர்வாணம், அது வெகு சாதாரணமாக அவமதிக்கப்பட்டது, அதன் அநாகரிகம் இவையே நம்மை நடுநடுங்க வை...

மின்னல் முரளிகள்

இம்முறை தில்லி சென்றிருந்த போது பல இடங்களில் மோடியின் பின்னால் யோகி பணிவாக நிற்கும் படங்களைப் பார்த்தேன். அவர்களுடைய எதிர்காலத் திட்டம் அது, நம்மை அதை நோக்கித் தயாரிக்கிறார்கள் எனத் தெளிவாகியது. அதற்காக யோகியை நம் மீது திணிக்கிறார்கள் என்றில்லை. இப்போது கூட யோகிக்கு ஓட்டுப்போட சொன்னால் வடக்கர்கள் குதித்தோடி வருவார்கள் என எனக்கு அங்கு கிடைத்த அனுபவம் உணர்த்தியது. நம் மக்களுக்கு மோடியை விட பொருத்தமான தலைவர் யோகி தான். அவர் பிரதமர் ஆனால் இந்த தேசம் அதன் 'ஒரிஜினலான'விலங்கு நிலையை அடைந்து விடும் என நம்புகிறேன். "புதுப்பேட்டை" படத்தில் தனுஷ் சொல்வார், "நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு புதுச்சட்டை போட்டு செண்ட் அடிச்சு பளிச்சின்னு இருக்கக் கூடாது. உடனே அவன் தாலியறுத்தான், இவன் வெட்டிட்டான், அவங்க கூட சேர்ந்துட்டான்னு சொல்லுவீங்க. நான் உடனே கத்தியைத் தூக்கிட்டு ரோட்ல ஓடணும். அதானே?" நமது நாட்டின் எதிர்காலத்தை நினைக்கையில் இதுதான் நினைவுக்கு வருகின்றது. கொஞ்ச நாளில் எல்லாரையும் கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓட வைப்பார்கள்!

பின்நவீன கேள்வி பதில்

மெஸெஞ்சரில் ஸ்பேம் எனும் பகுப்பு உள்ளதை இன்றுதான் தற்செயலாகக் கண்டேன். உள்ளே போய்ப் பார்த்தால் 9 ஆண்டுகள் பழைய செய்திகள் இருக்கின்றன. முடிந்தவரை பதில் அனுப்பினேன். அதில் அண்மையில் ஒருவர் அனுப்பிய சேதி என்னை வெகுவாக கவர்ந்தது. அவர் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார். "என்னை விட்டுப் போன என் பழைய காதலி இப்போது என்னிடம் திரும்ப வருவதாக சொல்கிறார். நான் என்ன முடிவெடுக்கட்டும்?" இது மிக நல்லதொரு கேள்வி என நினைத்து தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னேன்: "அவரது நோக்கமென்ன என்று அறிந்து முடிவெடுங்கள்." அவர் உடனே எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு "அண்ணா பதில் கிடைத்துவிட்டது, ஆனால் நான் கேட்ட கேள்வி அழிந்துவிட்டது. அது என்னவெனத் தெரிந்து கொள்ள வேண்டும். ப்ளீஸ் சொல்லுங்கள்." என்றார். எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போயிற்று. ஒரு சிரிப்பானைப் போட்டுவிட்டு நகர்ந்து கொண்டேன். அசல் பின்நவீன வாழ்க்கை என்றால் இதுதான்.

கலவரங்களை ஏன் மக்களாட்சி அனுமதிக்கிறது?

மணிப்பூர் ‘ கலவரத்தின் ’ போது குக்கி இனப்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்வாணமாக நடத்தி செல்லப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது . பிரதமரே ‘ இறங்கி வந்து ’ கண்டித்தார் . நிர்பயா வண்புணர்ந்து கொல்லப்பட்ட போது அளிக்கப்பட்ட கவனத்தை ஊடகங்கள் இதற்கு அளிக்கவில்லை என்றாலும் நாடு முழுக்க எதிர்ப்பு பேரணிகள் நடந்தன . நம்மில் சிலர் பிரதமர் வெட்கம் கெட்டவர் , அவர் பதவி விலக வேண்டும் , பாஜக ஆளும் தகுதியற்ற கட்சி என்றெல்லாம் சொன்னோம் . ஆனால் நாம் கவனிக்காமல் விட்ட இரண்டு முரண்பாடுகள் உண்டு . அந்த கொந்தளிப்பான மனநிலையில் அதைச் சொல்ல வேண்டாம் எனக் கருதியதால் இப்போது சொல்கிறேன் : பாஜக இதையே தான் 30 ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை பண்ணி ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறது . குருதியில் வெற்றிக் கையெழுத்து இடுவது அவர்களுடைய தேர்தல் உத்தி . இதை சட்டத்தாலோ தேர்தல் ஆணையத்தாலோ கேள்வி கேட்க முடியாது . அயோத்தியா வன்முறை நடந்து இத்தனை பத்தாண்டுகள் ஆகியும் அதைத் திட்டமிட்டு நடத்திய தலைவர்கள் தண்டிக்கப்படவில்லை . மாறாக அந...