நான் கண்டிப்பா வாங்குவேன். எனக்கு நிறைய பணத்தேவை உள்ளது. பொருள் வயின் உலகு, பொருள் வயின் அன்பு, பொருள் வயின் குடும்பம். பொருள் இருந்தால் நான் என் மகனை பார்க்க முடியும்.
இது என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடம்.
இப்போது அகாடெமி விருதுடன் ஒரு லட்சத்துடன் அரசு வழங்கும் வீடும் கிடைக்கிறது. எனக்கு சொந்தமாக வீடும் இல்லை. அதனால் நான் வாங்குவேன். அகாடெமி நான் விருதை வாங்கும்போது அந்த ஒரு லட்சத்தை 10-25 லட்சமாக மாற்றினால் நன்றாக இருக்கும்.
