இம்முறை தில்லி சென்றிருந்த போது பல இடங்களில் மோடியின் பின்னால் யோகி பணிவாக நிற்கும் படங்களைப் பார்த்தேன். அவர்களுடைய எதிர்காலத் திட்டம் அது, நம்மை அதை நோக்கித் தயாரிக்கிறார்கள் எனத் தெளிவாகியது. அதற்காக யோகியை நம் மீது திணிக்கிறார்கள் என்றில்லை. இப்போது கூட யோகிக்கு ஓட்டுப்போட சொன்னால் வடக்கர்கள் குதித்தோடி வருவார்கள் என எனக்கு அங்கு கிடைத்த அனுபவம் உணர்த்தியது. நம் மக்களுக்கு மோடியை விட பொருத்தமான தலைவர் யோகி தான். அவர் பிரதமர் ஆனால் இந்த தேசம் அதன் 'ஒரிஜினலான'விலங்கு நிலையை அடைந்து விடும் என நம்புகிறேன். "புதுப்பேட்டை" படத்தில் தனுஷ் சொல்வார், "நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு புதுச்சட்டை போட்டு செண்ட் அடிச்சு பளிச்சின்னு இருக்கக் கூடாது. உடனே அவன் தாலியறுத்தான், இவன் வெட்டிட்டான், அவங்க கூட சேர்ந்துட்டான்னு சொல்லுவீங்க. நான் உடனே கத்தியைத் தூக்கிட்டு ரோட்ல ஓடணும். அதானே?" நமது நாட்டின் எதிர்காலத்தை நினைக்கையில் இதுதான் நினைவுக்கு வருகின்றது. கொஞ்ச நாளில் எல்லாரையும் கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓட வைப்பார்கள்!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share