Skip to main content

Posts

Showing posts from February, 2020

தில்லிக்கு வந்த ஹிட்லரின் வழித்தோன்றல்கள்!

தில்லியில் நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள் கண்ணீரை வரவழைப்பவை . பாஜகவின் குண்டர்கள் எளிய மக்கள் மீது நடத்தும் இத்தாக்குதல்களின் நோக்கம் CAA, NRC க்கு எதிரான போராட்ட களங்களை உடனடியாய் கலைப்பது , போராளிகளிடத்து அச்சத்தை விதைப்பது என்பது தெளிவானது . எனக்கு இது ஈழத்தில் எண்பதுகளில் சிங்களப்பெரும்பான்மை அரசு தமிழக குடியிருப்புகள் மீது அவிழ்த்து விட்ட கலவரங்களை , யாழ்ப்பாண நூலக எரிப்பை நினைவுபடுத்துகிறது . குஜராத் படுகொலைகளையும் தாம் . வன்முறை மூலம் போராட்டங்களை ஒடுக்கலாம் எனும் யுத்தி வெற்றி பெறாது என வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது . தில்லி தேர்தல் முடிவும் பாஜகவுக்கு பளாரென ஒரு அறை கொடுத்தது . இருந்தும் ஏன் பாஜக அதே ஆயுதத்தை தூக்குகிறது என எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை ! இப்போது மெல்ல மெல்ல உண்மை புலப்படுகிறது !

ஒரு நாள் வரும்!

என்னுடைய மொழியாக்கத்தில் மார்ச் மாதம் வெளியாகிற Kisses at Daybreak மனுஷ்யபுத்திரனின் 60 காதல் கவிதைகள் தாங்கிய நூல் . அவரது முதல் ஆங்கில மொழியாக்க நூல் என நினைக்கிறேன் . சுமார் மூன்று பத்தாண்டுகளாக எழுதி வரும் , தீவிர வாசகர் மட்டுமன்றி எளிய வாசகர்களுக்கும் பரிச்சயமான ஒரு கவிஞருக்கு இவ்வளவு தாமதமாக ஆங்கில மொழியாக்கம் வருவது குறித்து எனக்கு ஆச்சரியமில்லை . அவர் அதற்கான முயற்சிகளை இவ்வளவு நாளும் எடுக்கவில்லை . அது மட்டுமே காரணம் . சில படைப்பாளிகளுக்கு பதிப்பகங்களின் அரிய முயற்சியால் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் நூல்கள் மொழியாக்கப்பட்டு கவனம் பெற்றுள்ளன . காலச்சுவடு , க்ரியா , ஸீரோ டிகிரி போன்ற பதிப்பகங்களை இவ்விசயத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும் . நூல் ஆங்கிலத்தில் வருவதற்கும் ஒரு படைப்பாளியின் பிரபலம் மற்றும் திறமைக்கும் எந்த பெரிய சம்மந்தமும் இல்லை . அதற்கான உள்கட்டமைப்பு , வேற்று மொழித் தொடர்புகள் , தொடர்ந்து தொடர்பாக்கம் செய்து முயற்சி எடுப்பதற்கான ஆட்கள் இல்லாத காரணத்தாலே ஜெயமோகன் , எஸ் . ர...

எங்களைத் தூங்க விடுங்கடா எனும் இந்திய அணி

நியுசிலாந்தில் தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் அவமானகரமாய் தோற்றது . அதாவது சில தேர்வுகளில் மாணவர்கள் ரெண்டு மணிநேரமும் பெஞ்சில் படுத்து தூங்கி விட்டு வெறுமனே பெயரை மட்டுமே எழுதிக் கொடுத்து விட்டு கிளம்புவார்களே அப்படி ஒரு ஆட்டம் . அடுத்த டெஸ்டில் நாம் இதை விட மோசமாகவே தோற்க வாய்ப்பு .

எழுத்துப்பிரசுரம் / ஜீரோ டிகிரி பதிப்பகம்

தமிழில் நண்பர்களுக்காக பதிப்பகம் ஆரம்பித்தவர்கள் இருக்கிறார்கள் ; சொந்த நூல்களை வெளியிட , தன் சித்தாந்தத்துக்காக , ஒரு த்ரில்லுக்காக , சம்பாதிக்கலாம் எனும் நப்பாசைக்காக , புரட்சிக்காக , உலக இலக்கியத் தரத்துக்கு தமிழ் இலக்கியத்தை உயர்த்தலாம் எனும் கனவுக்காக என பல நோக்கங்களுக்காக பதிப்பகங்கள் ஆரம்பித்தபடியே இருக்கிறார்கள் . நான் ஒரு புதிய பதிப்பக நூலைக் கண்டதும் அதன் பதிப்புத் தரத்தைத் தான் கவனிப்பேன் - அட்டையில் இருந்து , வடிவமைப்பு வரை உள்ள கற்பனை , சிந்தனையோட்டத்தை , தாள்களின் தரத்தை , புதிதாக எதையாவது முயற்சி பண்ணுகிறார்களா என . ஒரு புத்தகத்தைக் கொண்டு வருவது வெறுமனே பதிப்பிப்பது மட்டுமல்ல என்பதை சில புத்தகங்களையாவது POD முறையில் கொண்டு வந்தவன் என்கிற முறையில் அனுபவரீதியாக அறிவேன் . ஒரு புத்தகத்துக்கும் பிரிண்ட் அவுட் எடுத்து ஸ்பைரல் அட்டை போட்ட பிரதிக்குமான வித்தியாசமே அதற்கு நாம் பதிப்பில் அளிக்கிற புதிய தோற்றம் , வண்ணம் , உணர்வில் தான் இருக்கிறது . அது கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் பெற்று குள...

பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்

அன்புள்ள பெருந்தேவி, தேய்வழக்குகளை ஒருவர் தன் கவிதையில் நுட்பமான நகைமுரணுடன் பயன்படுத்துவது அவற்றை வலியுறுத்த அல்ல கடந்து செல்லவே. பாய்பெஸ்டிக் கவிதையும் அதையே செய்கிறது. அதை உணர நீங்கள் முதலில் கடும்போக்கு பெண்ணியக் கண்ணாடியைக் கழற்றி வீச வேண்டும். ஒவ்வொரு கருத்துநிலையும் ஒரு மொழி விளையாட்டே என உணர வேண்டும். கவிதைமீது நீங்கள் செலுத்தும் வன்முறையானது அது ஒரு அரசியல் சம்மட்டியாக இருக்க வேண்டும், ஒவ்வொரு மனிதனையாய் விசாரித்து சிறையில் தள்ளி திருத்த வேண்டும் என எதிர்பார்ப்பதே. பால்நிலை குறித்த அரசியல் சரித் தன்மைகொண்ட சித்தரிப்புகளே இலக்கியத்தில் வர வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் நாம் இலக்கியப் பாத்திரங்கள் நிஜ மனிதர்களைத் துண்டும், அவர்களின் மனநிலையை கட்டமைக்கும், அது அவர்களின் பால்நிலையாக்கத்தில் தாக்கம் செலுத்தும் என நினைக்கிறோம். இது எவ்வளவு பெரிய கற்பிதம். இது உண்மையெனில் இந்த உலகைத் திருத்துவதற்குத் தேவை நிறைய அரசியல் சரித்தன்மை கொண்ட நாவல்களும் கவிதைகளும் தாமே. உன்னத இலக்கியங்களைப் போதித்து எதார்த்தத்தை மாற்றி அமைத்துவிடலாமே. என்னவொரு அபத்தம்! மேலும் வாசிக்க http://u...

சாரு நிவேதிதா ஏன் பெருமாள் முருகன் ஆக வேண்டும்?

த . ராஜனின் “ சாரு நிவேதிதாவால் ஏன் பெருமாள் முருகன் ஆக முடியவில்லை ?” என்னும் கட்டுரையுடன் என்னால் முழுக்க உடன்பட முடியவில்லை . ஏன் ? சொல்கிறேன் .   தன்னை ஏன் தமிழ் சமூகம் பொருட்படுத்தவில்லை என சாரு அடிக்கடி சாடுவதுண்டு - அதில் பொறாமையும் உண்டு , நியாயமான வருத்தமும் உண்டு . சாருவின் அழகே அவர் தன் பொறாமைகளும் ஆசைகளையும் லட்சிய முகமூடிகளின் பின்னால் மறைப்பதில்லை என்பது . ஆனால் சாரு சொல்வதை அதன் நேரடியானப் பொருளில் நாம் ஒரு போதும் எடுத்துக் கொள்ளக் கூடாது ; அப்படி செய்தால் சாரு சொல்லுகிற நுண்ணுணர்வற்ற கும்பலுக்கும் நமக்கும் வித்தியாசம் இராது . சாரு சொல்வது ‘ என் மீதும் தாக்குதல் தொடுத்து என்னையும் பிரபலமாக்குங்கள் ’ என்பதல்ல . அப்படி நம்பினதால் தான் சிலர் அவரை ஏதோ நாய் சேகர் போலக் கண்டு சிரிக்கிறார்கள் . ஆனால் சாருவினுடையது ஒரு ஆற்றாமையின் வெளிப்பாடே அன்றி தன்னை சாதி / மத வெறிக்கும்பல் துரத்த வேண்டும் எனும் விருப்பம் அல்ல . சாரு எதிர்பார்ப்பது தன்னுடைய எழுத்துக்கள் பொதுநீரோட்ட சமூகத்...

எனது நண்பன் எனது நண்பன் அல்ல

தெரிதா தனது The Politics of Friendship ( நட்பின் அரசியல் ) என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில்   கிரேக்க ஞானி அரிஸ்டாட்டிலின் ஒரு மேற்கோளைப் பற்றி வெகுசுவாரஸ்யமாக பேசுகிறார் : அரிஸ்டாட்டில் தன் நண்பர்களிடத்து இவ்வாறு ஒருமுறை சொல்லுகிறார் : “ ஓ நண்பர்களே , நண்பர்கள் என யாருமே இல்லை ”. இந்த மேற்கோளின் சுயமுரண் வெளிப்படையானது - நண்பர்களே இல்லையென்றால் அரிஸ்டாட்டில் இங்கு “ நண்பர்களே ” என அழைத்து பகிர்ந்து கொள்ளும் அந்த நபர்கள் எல்லாம் யார் ? அரிஸ்டாட்டில் என்னதான் சொல்ல வருகிறார் ? தெரிதா இவ்வாறு விளக்குகிறார் - நட்பு என்பது யாரெல்லாம் நமது நண்பர் அல்ல என நாம் வகுத்துக் கொண்ட பின்னர் தோன்றுகிறது . நீ எனது நண்பன் , ஏனெனில் அவன் எனது விரோதி , அவன் எனது விரோதி எனில் அவனுக்கு அடுத்திருப்பவன் எனக்கு நண்பன் , அவன் எனக்கு நண்பன் எனில் என் விரோதிக்கு அவனும் விரோதி , அவனுக்கு அடுத்திருப்பவன் எனக்கு விரோதி , ஏனெனில் அவன் என் நண்பனுக்கு நண்பன் அல்ல , இன்னும் ஒருவன் எனக்கு நண்பனோ விரோதியோ அல்ல , அவனை இ...

ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?

எனக்கு ஒரு நீண்ட கால நண்பர் இருக்கிறார் . அவருடன் தற்காலிக நட்பை பேணினவர்கள் , அற்ப நோக்கிற்காக உறவை முறித்தவர்கள் அடிக்கடி என் வாசல் கதவைத் தட்டி நண்பருடனான நட்பை கேள்வி கேட்பார்கள் , அவரைப் பற்றி தவறாகப் பேசுவார்கள் , அவர் என்னைப் பற்றி தவறாகப் பேசியதாக போட்டுக் கொடுப்பார்கள் . அவர்களுடைய நோக்கம் ஒன்றே ஒன்று தான் : நண்பரிடம் இருந்து என்னைப் பிரிப்பது . இவர்கள் தம் உறவை முறித்தபின் ஏன் என்னுடய நட்பை கலைக்க இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என நான் மண்டயைப் போட்டுக் குழப்புவேன் .   நட்புக்கும் நட்பு முறிவுக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம் எனக்கு புலப்பட்டது அப்போது தான் - ஒருவருடன் இணக்கமான நட்பில் இருக்கும் போது அவரைப் பற்றி நாம் பிறரிடம் அதிகம் பேச முனைவதில்லை ; அது வெகு அந்தரங்கமாக , கிட்டத்தட்ட காதலைப் போல , பிரகடம் செய்யாமலே மதிப்பு மிக்கதாக இருக்கிறது . ஆனால் விரோதம் எப்போதுமே பிரகடனம் செய்ய ஒருவரைத் தூண்டுகிறது - தான் ஏமாற்றப்பட்டத்தை , கைவிடப்பட்டதை , தனக்கு அநீதி இழைக்கப்பட...