Skip to main content

Posts

Showing posts from November, 2019

பொருளாதார நெருக்கடி நிலை வருமா?

பொருளாதார வீழ்ச்சியை சுட்டி மத்திய அரசு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யலாம் என்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தக் கூடிய சட்டவிதி 360 இது தான்: Article 360 in The Constitution Of India 1949 360. Provisions as to financial emergency (1) If the President is satisfied that a situation has arisen whereby the financial stability or credit of India or of any part of the territory thereof is threatened, he may by a Proclamation make a declaration to that effect (2) A Proclamation issued under clause ( 1 ) (a) may be revoked or varied by a subsequent Proclamation; (b) shall be laid before each House of Parliament;

நாவல் எழுத யாராவது கற்பிக்க முடியுமா சொல்லுங்கள்?

எங்கள் கல்லூரியில் மாலை வேளை நடக்கும் எலெக்டிவ் வகுப்பில் நான் இரண்டாம் வருடமாக நாவல் எழுதும் கலையை கற்பிக்கிறேன். கடந்த வருடம் 17 மாணவர்கள். இவ்வருடம் 45ஆக உயர்ந்து விட்டது. பெரிய வகுப்புகளின் சௌகரியங்கள் 45இல் ஐந்து பேராவது ஒரு நாவலை அரை கல்வியாண்டுக்குள் முடித்து விடுவார்கள் என்பது. கடந்த முறை ஒருவரே முடித்தார். இந்த முறை 12 அத்தியாயங்கள், அத்தியாயத்துக்கு 5-7 பக்கங்கள் என ஒரு இலக்கை கொடுத்திருக்கிறேன். ஆகையால் இம்முறை நாவலை எழுதி முடிப்பது சற்று சுலபமாக அமையும் என கணிக்கிறேன். மாணவர்களை தினமும் நாவலை எழுத வைப்பதே என் பிரதான நோக்கம். ஏனென்றால் இத்தகைய வகுப்புகளுக்கு வருவோருக்கு அதுவே பெரும் சவால் - அவர்களால் எழுத முடியும், அவர்களுக்கு மொழித்திறனும், வாசிப்பும் உண்டு, ஆனால் தினம் தினம் ஒரே புத்தகத்தில் வேலை செய்வது கடினம். அந்த பயிற்சியை எப்படியாவது கொடுத்து விட வேண்டும். இன்றைய முதல் வகுப்பில் அதை பற்றியே முக்கியமாக பேசினேன்.  ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உண்டு, அது எழுதப்படாமலே பல சமயம் போய் டுகிறது என்பது என் நம்பிக்கை. அது இலக்கிய நாவலோ, வெகுஜன நாவலோ, எளிய துப்பறியும் நாவலோ...

தேவ்தத் பட்டாநாயக்கை ஏன் செருப்பைக் கழற்றி அடிக்கக் கூடாது?

நேற்றை   ஹிந்து   நாளிதழில்   வெளியான  Vedantic Attachment and Islamic Idolatry  எனும்   கட்டுரையைப்   படித்த போது   நமது   வலதுசாரிகளில்   சற்றே   புத்திசாலிகளாக   உள்ளவர்கள்   கூட   காவி   வண்ணம்   பூசிக்   கொள்ளும்   போது எப்படி   கோமாளிகளாகிப்   போகிறார்கள்   என   வியப்பேற்பட்டது .  அதாவது   இந்துத்துவாவை   ஆதரிக்கும்   போது  எந்த   தர்க்க   நேர்த்தியும்   அற்ற   பிதற்றலாக ,  சுத்த   பேத்தலாக   அவர்களின்   கருத்துக்கள்   அமைகின்றன ;  ஆனால்  தத்துவம் ,  பொருளாதாரம்   என்றெல்லாம்   வரும்   போது   நிதானமாக   உரையாடுகிறார்கள் ;  தாமரைப்   பூவைக்  காட்டினால்   சுத்த   லூசாகி   விடுகிறார்கள் .  இவர்களின்   எழுத்துக்கள்   சற்றே   அறிவு   படைத்தவர்களைக்   கூட முடியை   பிய்த்துக்   கொள்ள   வைக்கிறத...

மகாராஷ்டிரா அரசியல் தகிடுதித்தங்கள்: பாஜக எனும் டெர்மினேட்டர்

மகாராஷிரா அரசியல் களம் “ சூது கவ்வும் ” படம் போல பல வாய்பிளக்க வைக்கும் திருப்பங்களுடன் உள்ளது . முதலில் பாஜகவும் சிவசேனாவும் எதிரெதிர் அணிகளாக நின்று மோதும் என்றார்கள் . அடுத்து என் . சி . பி , காங்கிரஸ் , சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்தார்கள் . இதனிடையே எங்களுடன் சேராவிட்டால் ஆளுநர் ஆட்சி தான் என அமித் ஷா வழக்கமான அஸ்திரத்தை ஏவினார் . நான் கூட பாஜக மகாராஷ்டிரத்தை மற்றொரு காஷ்மீர் ஆக்கி விடுமோ என கவலைப்பட்டேன் . ஆனால் ஷாவோ நம் கவனத்தை முழுக்க சிவசேனா / பவார் பக்கம் திருப்பி விட்டு இரவோடு இரவாக பவாரின் மருமகன் அஜித் பவாரின் துணையுடன் என் . சி . பியை பிளந்து அதன் ஆதரவுடன் பாஜக ஆட்சிக் கட்டிலை கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளார் - பத்னாவிஸ் முதல்வர் , அஜித் பவார் துணை முதல்வர் . 

ஒற்றன் (2)

துக்கத்தை ஏன் பகிர்ந்து கொள்ள முடியாது ? எதை நாம் பகிர்ந்தாலும் அதன் அளவு குறைந்து விடும் . உங்கள் தட்டிலுள்ள உணவை நீங்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாகி விடும் . ஆனால் உங்கள் மனத்தில் உள்ள உணர்வை என்னிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறையாது . ஏனென்றால் உணவைப் போல நிஜமானது அல்ல உணர்வு . உணர்வு என்பது நாடகம் போல ஒரு நிகழ்த்தல் . அதில் நாம் ஒரு பாத்திரமாக பங்கேற்கிறோம் . அதற்கு ஒரு திரைக்கதையை அமைக்கிறோம் . அதற்கு பார்வையாளர்களை அழைக்கிறோம் . பார்வையாளர்கள் நம் துக்கத்தை அங்கீகரிக்க அங்கீகரிக்க நாம் துக்கப்படுவதும் அதிகமாகிறது . கதைசொல்லி இதனால் தான் இலாரியாவிடம் கற்பனையில் வாழாதே என அறிவுரைக்கிறார் . ஆனால் அவளால் அதை உட்கொள்ள முடியவில்லை . இப்போது கதைசொல்லி எரிச்சலாகிறார் . ‘ ஒருவனை காதலிக்கும் முன் அவனுக்கு திருமணமாகி இருக்கிறதா என்பதை கூட விசாரித்து அறிந்து கொள்ள மாட்டாயா ’ என கேட்கிறார் . இலாரியா கோபத்தில் எழுந்து போய் விடுகிறாள் . அதன் பிறகு அவள் அவரை சந்திப்பதில்லை . ...

ஒற்றன் (1)

அசோகமித்திரனின் “ ஒற்றன் ” நாவலை நான் இரண்டாவது முறையாக படிக்கிறேன் . முதலில் படித்த போதிருந்த அதே உணர்வு தான் இப்போதும் - வடிவ பரிசோதனை செய்திருக்கிறார் , ஆனால் அது அவ்வளவு துல்லியமாக கைவரவில்லை . “ ஜெ . ஜெ : சில குறிப்புகள் ” நாவலில் டைரிக் குறிப்பும் துண்டுத்துண்டான மனநிலையும் வடிவம் என்றால் இதில் பயணக்குறிப்புகள் . அசோகமித்திரன் அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்கள் தங்கி எழுதும் திட்டம் ஒன்றில் பங்கேற்ற அனுபவங்கள் . ஆனால் அசோகமித்திரன் பயணக்குறிப்புகளைக் கொண்டு கதைசொல்லி நிலையற்று , மையமற்று போவதை , அதன் சுதந்திரத்தைப் பேசாமல் ( அதுவே எளிது ) இந்த குறிப்புகளின் ஊடாக ஒரு கோர்வையான கதையை சொல்கிறார் . இந்த கதையை மேலோட்டை மட்டும் உருவினால் ஒண்டுக்குடித்தனங்களில் வாழும் ஜனங்களின் கதை ஒன்று வருகிறது . அல்லது “ வியட்நாம் வீடு ” போன்ற ஒரு கதை . 

பெயரில் சாதியை ஒழிப்பது

ஒரு பழைய “ நீயா   நானாவின் ”  டிரைலரைப்   பார்த்தேன் .  சாதியை   ஒழிப்பதில் கேரளாவுக்கும்   தமிழகத்துக்கும்   உள்ள   வித்தியாசத்தை   இது   விவாதிக்கிறது .  சாதியை   வெளிப்படையாக பெயரொட்டாக   வைத்துக்   கொள்ளும்   கேவலமான   வழக்கம்   கேரளாவில்   பலருக்கும்   உண்டு .  இது   ஏன் ,  தமிழகத்தில்   இது   ஏன்   இல்லை   என   நிகழ்ச்சியில்   கரு . பழனியப்பனின் ,  நடிகை   பார்வதி   நாயரும் விவாதிக்கிறார்கள் . டிரைலரில்   இந்த   குறுவிவாதத்தைக்   கண்ட   போது   எனக்குள்   எண்ணம்   நாம்   இந்தளவுக்கு   மேம்பட்டு   தான் இருக்கிறோமா   எனும்   கேள்வி   எழுந்தது .  “ நீயா   நானா ”  போன்ற   நிகழ்ச்சிகளில்   பெயரில்   சாதி   வைப்பதில்லை   என   தமிழர்கள்   பெருமையடித்தாலும் கொடூரமான   சாதிப்   படுகொலைகள் ,  ஆணவக் ...

எதிர்-சிந்தனை குறித்து ஒரு கருத்தரங்கு

அடுத்த வருடம் ஜனவரி 24 அன்று எங்கள் கிரைஸ் பல்கலையில் நடக்க இருக்கும் ஒருநாள் கருத்தரங்கம் இது: Dissent: An Exercise of Heterogeneity, Differance and Existence. கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகள் ஒரு UGC care list ஆய்விதழில் பிரசுரிக்கப்படும். கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் பதிவு செய்ய: https://christuniversity.in/nationalseminar/about.html

பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கின் பூடகம்

பாத்திமா லத்தீப்பின் தற்கொலை வழக்கு ( ஸ்வாதி கொலை வழக்கு போன்றே ) பூடகமானது . சில கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் இல்லை : 1) பேராசிரியர் சுதர்சனன் பத்மநாபன்   செய்த குற்றம் தான் என்ன ? அவர் பேசிய மத - துவேசம் கொண்ட வாக்கியம் என்ன ? 2) அவர் நேரடியாக தற்கொலைக்குத் தூண்டினாரா ?  3) வகுப்பில் பொதுமன்றத்தில் அவர் மாணவியை அவமதிக்கும்படி பேசினாரா ? ஆம் எனில் அது என்ன ? இத்தனை பேர் இருந்த ஒரு கல்வி நிறுவனத்தில் ஒருவர் கூடவா இதை வெளியே வந்து சாட்சியமாக சொல்ல மாட்டார்களா ? 4) ஒரு ஆசிரியர் தன் மாணவிக்கு CIA மதிப்பெண்ணை குறைத்து வழங்கியதை தற்கொலைக்கான தூண்டுதல் / உளவியல் ரீதியான ஒடுக்குமுறை என நாம் சித்தரிக்க முடியுமா ? அது நியாயமா ? அதற்கு சட்டத்தில் இடமுண்டா ?

அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் (4)

இங்கு நாம் கதராடையின் தனியாளுமை பற்றியும் பேச வேண்டும் . அந்நிய ஆடையே மேன்மை என நம்பப்பட்ட காலத்தில் காந்தி உள்ளூர் கதராடையை நெய்வதை , அதை வாங்குவதை , அணிவதை அரசியலாக்கினார் . கதர் என்பது பிரிட்டீஷ் அரசின் அரசியல் சரிநிலை மீதான பெரிய தாக்குதலாக மாறியது . எது இயல்பானது என பிரிட்டீஷார் நம்மை நம்ப வைத்தனரோ அதையே இயல்பற்றது என காந்தி நமக்குப் புரிய வைத்தார் . வெள்ளையர்கள் உடம்பை முழுக்க மறைப்பதே நாகரிகம் என ( விக்டோரிய ஒழுக்கவியலின் அடிப்படையில் ) நம்பினால் தன்னை மிகக்குறைவாக மறைப்பதே எளிமை என காந்தி எதிர் - அரசியலை முன்னெடுத்தார் . இந்த குறியீட்டுத் தாக்குதல் மெல்ல மெல்ல இந்தியாவில் “ கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த ” பிடிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தை உருக்குலைத்தது .