Skip to main content

Posts

Showing posts from April, 2019

கோமதி மாரிமுத்து சர்ச்சை: இரண்டு தேசியவாதங்களின் மோதல் (2)

ஜார்ஜ் ஆர்வல் சொன்னது போல விளையாட்டு என்பது ஒரு தேசியவாத பெருமித குறியீடு. பெருமாள் முருகனின் நாவல்கள் இன்று உலகம் முழுக்க படிக்கப்படுகின்றன. ஆனால் யாரும் அவரது எழுத்தை தேச பிரதிநுத்துவமாய் பார்க்க மாட்டார்கள். ஆனால் விளையாட்டு வீரன் தனது விருப்பத்துக்காக , பெருமைக்காக ஆடி சாதித்தால் அது தேசத்தின் சாதனையாய் பார்க்கப்படும். ஏன் என்பதை ஆர்வல் விளக்குகிறார். 

கோமதி மாரிமுத்து சர்ச்சை: இரண்டு தேசியவாதங்களின் மோதல் (1)

ஆசிய தடகளப் போட்டியில் முதல் தங்கத்தை இந்தியாவுக்காக வென்று கொடுத்த கோமதி மாரிமுத்துவிடம் New 18 அலைவரிசையில் இருந்து பேட்டி கண்டார்கள். பேட்டியாளர் வாழ்த்தி விட்டு ஒரே கேள்வியை பல வடிவங்களில் மீள மீள கேட்டார். அதன் சாராம்சம்: “சாதனை படைத்துள்ள தங்களை இந்திய தேசம் புறக்கணிப்பதாய் , மரியாதை செய்ய தவறியதாய் நினைக்கிறீர்களா ? ஆம் எனில் நீங்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளதே அதன் காரணமா ?” கோமதி வக்கணையாக பேசுபவர் அல்ல ; ஆக அவர் தனக்குத் தோன்றியதை எளிமையாக உண்மையாக சொல்கிறார். “இன்னும் கூடுதலாய் ஆதரவும் உள்கட்டமைப்பு வசதிகளும் என்னைப் போன்ற பின் தங்கிய ஊர்களில் இருந்து வருகிறவர்களுக்கு அளித்தால் , அமைத்துத் தந்தால் நன்றாக இருக்கும்” .  

தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்தால் ஜுரம் வருமா? (2)

தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் இரட்டைக் கொலைகளைச் செய்த ரஸ்கோல்நிக்கோவின் நெருக்கடிக்கான தீர்வு – திறக்காத பூட்டின் சாவி – சோனியா என்னும் இளம் பாலியல் தொழிலாளியிடம்தான் உள்ளது. அவள் உடல் குற்றத்தில் ஈடுபட்டாலும் அவள் மனம் அதில் சற்றும் படாமல் தூய்மையாய் இருக்கிறது. வளர்ந்த உடலில் மாசற்ற குழந்தை அவள். எந்த தீங்கையும் மிதமிஞ்சிய கருணையால் அன்பால், நம்பிக்கையால் எதிர்கொள்கிறாள். முழுக்க முழுக்க முரண்களின் வலி நிரம்பிய உலகில் அவள் இம்முரண்களைப் பரீசீலனை இன்றி ஏற்று அவற்றின் சிக்கலைக் கடக்கிறாள்.

தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்தால் ஜுரம் வருமா? (1)

“எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்ததுமே ஜுரம் அடிக்கத் தொடங்குகிறது” என்றார் எனது நண்பர் ஒருவர். இதை அவர் சொல்லி சில மாதங்கள் இருக்கும். நேற்று தாஸ்தாயேவ்ஸ்கியின் Insulted and Humiliated நாவலையும் விபூதிபூஷன் பந்தோபத்யாயின் அபராஜிதோ நாவலையும் மாற்றி மாற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். Insulted and Humiliated எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நினைவூட்டியது. அப்போதுதான் நண்பர் என்ன சொல்ல வந்தார் எனப் புரிந்தது.

கேரளாவில் ஏன் அரசியல் கொலைகள் அதிகம் நடக்கின்றன?

தமிழகத்தில் அதிமுக செயல்பாட்டாளர்களிடம் உரையாடும்போது திமுக மீது ஒருவித பொறாமையான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். அதிமுககாரர் ஒருவர் திமுககாரரைப் பற்றிப் பேசும்போது அவர்கள் குரலிலே மரியாதை தொற்றிக்கொள்ளும். திமுகவினர் அதிமுகவினர் மீது விமர்சனம் கொண்டிருந்தாலும் அவர்களின் கார்ப்பரேட் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு, தனிமனிதர்கள் தமது பணியின் பொருட்டே படிநிலையில் ஏறி விரைவில் உச்சாணியை அடையும் சாத்தியம் அதிமுகவில் போல திமுகவில் இல்லாமை பற்றி எல்லாம் கொஞ்சம் புகைச்சலுடனும் மரியாதையுடனும் பேசுவார்கள். ஆகையால் இருவரும் பரஸ்பரம் ஆழமாக வெறுப்பதில்லை.

பெண்கள் பலாத்காரம் செய்தால் (6)

ஆஸ்திரேலியாவில் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த ஆணை பலாத்காரம் செய்த சமந்தா மியர்ஸ் அமெரிக்காவில் கத்தி காட்டி மிரட்டி ஆணை பலாத்காரம் செய்த சமந்தா மியர்ஸ் ஆய்வுகள் என்ன சொல்கின்றன ? லாரா ஸ்டெம்பிள் , ஆண்டிரூ ப்ளோரஸ் மற்றும் இலன் மேயர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று (“Sexual Victimization Perpetrated by Women…”) பலாத்காரம் செய்யும் பெண் குற்றவாளிகளைப் பற்றி பேசுகிறது . அமெரிக்காவில் 2008 முதல் 2013 வரை நான்கு அரசு கணக்கெடுப்பு நிறுவனங்கள் நடத்திய ஆய்வு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பலாத்கார குற்றங்களைப் பொறுத்தமட்டில் ஆண் குற்றவாளிகளுக்கு கிட்டதட்ட இணையாகவே பெண் குற்றவாளிகளும் ஈடுபடுகிறார்கள் என கண்டறிகிறார் . நீண்ட கால பெண்ணிய பிரச்சாரம் காரணமாக ஆய்வாளர்கள் பாதிப்படும் ஆண்களை பொருட்படுத்த மறுத்திருக்கிறார்கள் / அல்லது அத்தகையோர் மீது கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறார்கள் . பலாத்காரம் செய்யப்பட்டதாய் கோருவது ஒரு ஆணின் ஆண்மையையே ரத்து செய்வது என்பதால் பல ஆண்கள் தமது ...