Skip to main content

Posts

Showing posts from June, 2014

கௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்?

மதுரையை சேர்ந்த பவானி என்ற ஒரு மத்திய சாதி பெண் ஒரு தலித்தை மண்ந்த காரணத்தினால் அவளது சகோதரனால் பிள்ளைகள் முன்னால் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறாள். கடந்த இரு வருடங்களில் மட்டும் 24 பெண்கள் இது போல் தமிழகத்தில் கௌரவக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடந்து வருகிற ஒரு மௌன அநீதி இது.

இலங்கையின் தொடர் வெற்றியும் இந்தியாவின் நிலையும்

இங்கிலாந்தில் இலங்கையின் தொடர்வெற்றி எதிர்பாராதது . அதற்கு ஒரு காரணம் சங்கக்காரார் , மஹிளா போன்ற சீனியர்கள் தன்னலமின்றி அணிக்காக தொடர்ந்து உழைப்பது இன்னொன்று இலங்கையின் ஒழுக்கம் மற்றும் உழைப்பு மற்றும் அணி உணர்வு இதை வைத்து இந்தியாவும் வென்று விடுமோ என சிலர் நினைக்கிறார்கள் . ஆனால் இலங்கை ஒரு புது அணியாக சென்றது . இந்தியா அப்படி அல்ல - வீரர்கள் ஐ . பி . எல்லால களைத்து போயிருக்கிறார்கள் - இஷாந்த் , ஷாமி போன்றோர் நல்ல ஆட்டநிலையில் இல்லை . வெளிநாடுகளில் அஷ்வினின் ரெக்கார்ட் ரொம்ப மோசம் . பந்தும் சுழலாது . புவனேஷ்வர் மட்டுமே நன்றாக வீசக் கூடும் .

இந்து முன்னணியினர் கலவரமும் அழிவு அரசியலும்

பூந்தமல்லி ஹைவேயில் நேற்று இந்து முன்னணியினர் நிகழ்த்திய வன்முறை உ.பி, குஜராத், அயோத்தியா வகை இந்துத்துவாவை இங்கும் முன்னெடுப்பதற்கான ஆரம்ப முயற்சி. சாலையில் போன பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தாக்கப்பட்டனர். போலீசும் அடிக்கு தப்பவில்லை. இன்னொரு பக்கம் தம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களுக்கு படையெடுத்தனர். போக்குவரத்து நீண்ட நேரம் ஸ்தம்பித்தது, கீழ்ப்பாக்கத்தில் ஒரு பேருந்து மீது கல் வீசி தாக்கியதால் பயணிகள் பயந்து ஓடினர். ஒரு தேவாலயம் மீது தாக்குதல் நடந்தது. மொத்தம் 9 பேருந்துகள் மற்றும் 10 கார்கள் தாக்கப்பட்டன. ஆனால் இந்து முன்னணியினரால் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை இவ்விசயத்தை வைத்து ஏற்படுத்த முடியவில்லை.

பெண் எழுத்தாளர்கள் போட்ட நோ பால்

பெண் எழுத்தாளர்கள்-ஜெ.மோ சர்ச்சையில் நியாயம் பெண்கள் பக்கமே என அறிவோம். ஆனாலும் இன்றைய ஊடக சூழலில் நியாயம் மட்டும் உங்கள் பக்கம் இருந்தால் போதாது – அதை சரியாய் சாதகமாய் பயன்படுத்த தெரிய வேண்டும். முன்பு போல் இருபது பேர் படிக்கிற சூழலில் அது எப்படியும் இருக்கலாம். ஆனால் முகநூலில் பல்லாயிரம் பேரும், நாளிதழ்கள் வழி லட்சக்கணக்கான பேரும் இந்த சர்ச்சையை கவனிக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியமோ மார்க்ஸியமோ ஆணாதிக்கவாதமோ தெரியாது. ஒருவேளை இந்த சர்ச்சையின் போது தான் இதையெல்லாம் அறிகிறார்களாக இருக்கலாம். அதனால் இப்பிரச்சனையில் “நியாயம் யார் பக்கம்” எனத் தான் பொதுமக்கள் கேட்பார்கள்.

ஜெயமோகனும் பெண் கவிஞர்களும்

ஜெயமோகன் பெண் கவிஞர்களை பற்றி சொன்னது அவரது தனிப்பட்ட மதிப்பீடு. அது போல் அவர் பாரதியாரை பற்றிக் கூட மதிப்பீடு கொண்டிருந்தாரே எனவும், அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டென்றும் அவரது ஆதரவாளர்கள் இப்போது நியாயப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது உண்மையா? இல்லை ஜெயமோகன் கூறுவது மதிப்பீடோ அவதானிப்போ அல்ல - பெரும்பாலும் முன்னெண்ணங்கள். பெண் கவிஞர்கள் தங்கள் உடலை காட்டித் தான் பிரசுர வாய்ப்புகள் பெற்றார்கள் என்று அவர் வாக்கியத்தை எளிமைப்படுத்தினால் வரும். இது உண்மையா என பார்ப்போம்: குட்டிரேவதி , சுகிர்தராணி , சல்மா போன்றோர் புதுவகையான பாய்ச்சலை தமிழ் நவீன கவிதையில் நிகழ்த்தினார்கள். அது வாசகர்களுக்கு புதுசாக வியப்பாக இருந்தது.

நவீன ஐ.டி பெண்ணும் சுழல் பந்து வீச்சாளர்களும்

கொஞ்ச காலத்துக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட களத்தடுப்பு விதிமுறை மாற்றங்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சாபமாய் மாறி வருகின்றன. முன்பு ஒருநாள் ஆட்டங்களில் ஒரு சுழல் பந்து வீச்சாளர் 15வது ஓவரில் ஆரம்பித்து முப்பதாவது ஓவர் வரை தொடர்ந்து 8 ஓவர்கள் வரை வீசலாம். விருப்பப்படி களத்தை அமைத்துக் கொள்ளலாம். அதிகம் பந்து சுழலாத ஆடுதளங்களில் கூட நீங்கள் பந்தை காற்றில் மிதக்க விட்டு பிளைட் செய்து எல்லைக்கோட்டில் கேட்ச் பெற்று தான் விக்கெட் எடுக்க முடியும். தொண்ணூறுகளில் ஆட்டம் பார்த்தவர்களுக்கு இப்படி வார்னெயும், முரளியும், சக்ளைனும் எத்தனையோ விக்கெட்டுகளை உயரக் கேட்சுகள் மூலம் பெற்றதை நினைத்துப் பார்க்கலாம்.

வசனகர்த்தா

காட்சி 1 மீனவன்: “ஏய் மீனே என் தூண்டில்ல மாட்டிக்கிட்டியா. நான் சாத்தான்லே. என் கிட்டயிருந்து நீ தப்பிக்க முடியாது” மீன்: “ஐயோ என்ன விடுலே. நான் மீன். என்ன விடுலே” மீனவன் தூண்டிலை இழுத்து படகில் போடுகிறான். மீன்: “நான் சாகிறேன். ஐயோ நான் துடிக்கிறேன். துள்ளுறேன்.” மீனவன்: “ஹா ஹா நான் சாத்தான்லே. நீ சாவுறே. நான் அதை பார்க்குறேன்.”

பிரதமரும் அமைச்சர்களும்

பிரதமர்: “நாளைக்கு மீடியாவுக்கு கொடுக்க வேண்டிய ரிப்போர்ட் ரெடியா?” ஆலோசகர்: ”இதோ பாருங்க ரெடி... அடுத்த பத்தே நாட்களுக்குள் இந்தியா முன்னேற்றம் பெற அதிரடி திட்டம். அடுத்த மூன்று மாதங்களுக்கான தேச முன்னேற்றத்திற்கான இலக்குகளை பிரதமர் அறிவித்தார். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிறங்களை அளித்துள்ளார். சிவப்பு வறுமைக்கு, வெள்ளை பொருளாதாரத்துக்கு, பச்சை விவசாயத்துக்கு. இப்பிரச்சனைகள் தீரும் வரை இனி மேல் அவர் இம்மூன்று நிறங்கில் தான் குர்தா அணிவார்” பிரதமர்: “ஏதோ ஒண்ணு குறையுதே!” ஆலோசகர்: “ம்ம்ம் சரி இதை பாருங்க. அமைச்சர்களின் அறைகளுக்கு சென்று பிரதமர் அதிரடி சோதனை இட்ட போது அன்றைக்கான டார்கெட்டை முடிக்காத ஜூனியர் அமைச்சர் மாட்டினார். பிரதமர் கண்டித்ததில் அவர் கண்ணீர் விட்டார்.” பிரதமர்: “இது சூப்பர். அப்படியே பிரதமர் அவரை அணைத்து ஆறுதல் கூறினார் என்றும் போடு” ஆலோசகர்: “சரி சார். லேட்டாச்சு நான் அப்போ கிளம்பிறேன்” பிரதமர்: “அது சரி, ஆனா நான் அடுத்த மூன்று மாதங்களில் ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியாவுக்கு நான் பயணிக்கும் போது அங்கு என்னெல்லாம் பேசினேன், என்னைப் பார்த்து அந்...

என்ன செய்யப் போறீங்க மிஸ்டர். மோடி?

மோடி பிரதமாரானதும் தன் அலுவலகத்தில் ஊழியர்களிடையே ஒரு திருவிழா சூழல் உண்டானதாக ஒரு நண்பர் சொன்னார். பலரிடமும் இந்த பரபரப்பை பார்க்க முடிகிறது. மோடி கேஜ்ரிவாலை போன்று ஊடகங்களை சரிவர பயன்படுத்த தெரிந்தவர்; மக்களிடம் நேரடியாக பேச முயல்பவர். மன்மோகனின் கூச்சமும் இறுக்கமும் அவருக்கு இல்லை. அவர் திட்டங்களை சுணங்காமல் நிறைவேற்றக் கூடியவர். அவருக்கு கீழ் மந்திரிகளோ அதிகாரிகளோ போக்கு காட்ட முடியாது. கடும் சட்டாம்பிள்ளை. முக்கியமாய், அவர் ஒரு முதலாளித்துவ சார்பு ஆட்சியாளர். நிறைய முதலீடுகள் வரப் போகின்றன என எதிர்பார்க்கிறார்கள். இவையெல்லாம் சரி தான். ஆனால் இதனால் மட்டும் போன காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இந்த ஆட்சி வெகுவாக வித்தியாசப்படும் என பொருள் இல்லை. “நல்ல மாற்றம் வரும்” என வாய் பிளப்பவர்கள் மாறாமல் இருக்கப் போகிறவை எவை என்றும் யோசிக்க வேண்டும். உண்மையில் மாறாதவை தான் ஒரு நீண்ட ஆட்சிக்காலத்தில் எந்த அரசாங்கத்துக்கும் தலைவலி அளிக்கக் கூடியவை

அசோகமித்திரன் கருத்தரங்கு

அசோகமித்திரன் கருத்தரங்கு மைலாப்பூர் லஸ் சாலையில் நேற்று நடந்தது. நான் மதியம் மேல் உள்ள அரங்கில் கலந்து கொண்டு ராஜன் குறை மற்றும் பெருந்தேவி பேசியதை கேட்டேன். அடர்த்தியான விமர்சனபூர்வமான உரைகள். இன்னும் கராறாய் சொல்வதானால் கட்டுரை வாசிப்பு. ராஜன் குறை அசோகமித்திரனின் அன்றாடத்தன்மை வாழ்க்கையின் மீதான பிடிப்பை சுட்டுவதாய் கூறினார். அதற்கும் துயரத்துக்கும் உள்ள தொடர்பை விவரித்தார். “இன்று” நாவலை பற்றி குறிப்பாய் பேசினார். பெருந்தேவி நவீனத்துவ மனப்பான்மைக்கு ஒரு மாற்றுநிலையை “மானசரோவர்” முன்வைப்பதாகவும் அதனால் அந்நாவல் தனக்கு விருப்பமானது என்றார். நவீனத்துவ நிலையை அவர் விளக்கியது நன்றாக இருந்தது.

மார்க்வெஸ் ஏன் தமிழில் தோன்றி மறைந்தார்?

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் மறைவை கிட்டத்தட்ட ஒரு தமிழ் எழுத்தாளனின் அஸ்தமனமாகவே பார்க்க வேண்டும். அந்தளவுக்கு வேறேந்த இந்திய மொழியையும் விட அவர் தமிழை பாதித்தார். சொல்லப் போனால் வேறெந்த உலக மொழியிலும் மார்க்வெஸின் தாக்கம் இந்தளவுக்கு உண்டா என்பது ஐயமே. குறிப்பாய் தொண்ணூறுகளில் அமெரிக்க, பிரித்தானிய புனைவுலகை மாந்திரிக எதார்த்தம் இந்தளவுக்கு தாக்கம் செலுத்தவில்லை. அங்கே சிதைவுற்ற பின்நவினத்துவ புனைவு மொழி தான் தொண்ணூறு, ரெண்டாயிரங்களில் ஆட்சி செய்தது. பிரித்தானிய, இந்திய ஆங்கில புனைவுலகில் சல்மான் ரஷ்டி மட்டுமே ஒரு தனித்த பெரும் ஆளுமையாக மார்க்வெஸின் சாயலில் நம் முன் நிற்கிறார்.

ஜெயமோகன் கருத்தை பொருட்படுத்தலாமா?

இன்று டி.வி நிகழ்ச்சிகளிலும், பத்திரிகை பத்திகளிலும், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களிலும் சமூக அரசியல் விசயங்களை விவாதிக்க ஆட்களுக்கு ஒரு பஞ்சம் உள்ளது. மீடியா அந்தளவுக்கு பெருகி உள்ளது. டி.வி நிருபர்கள் இன்று யாரை பேச கூப்பிடுவது என தினம் தினம் மண்டையை பிய்க்கிறார்கள். தினசரிகளில் கருத்துக்கள் எழுத சிறுபத்திரிகையில் முன்பு கதை எழுதியவன் இன்று இழுக்கப்படுகிறான். இதன் ஒரு எதிர்விளைவு அறிவியக்க அல்லது கோட்பாட்டு பயிற்சி இல்லாதவர்கள் எக்குத்தப்பாய் கருத்து சொல்லி குழப்பங்களை ஏற்படுத்துவது. ஜெயமோகன், சாரு, ஜொ.டி குரூஸ் என பல உதாரணங்கள். இவர்கள் பேசினால் அது முன்பின் முரணாக, சமூக நலனுக்கு எதிராக தான் பல சமயம் இருக்கிறது. இது யார் தவறு?

என்னய்யா சவுண்டு அது?

உதவியாளர்: “ஐயா உங்க பொறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வந்த தொண்டர் ஒருவர் இந்த வாழ்த்தட்டையை கொடுத்திட்டு போயிருக்கிறாரு” தலைவர்: “என்னைப் பத்தி எதனாச்சும் புகழ்ந்து எழுதியிருக்குதா?” உதவியாளர்: “ஒரு கேள்வி கேட்டிருக்காருங்க. எப்படி நீங்க மட்டும் இத்தன நாள் உயிரோட ஆரோக்கியமா திடமா இருக்கீங்கன்னு?

சைட் டிஷ் பையன்

வாடிக்கையாளர் 1: “டேய் தம்பி இங்க வாடா. எவ்வளவு நேரமா கூப்பிடறது? பையன்: என்னண்ணே? சொல்லுங்க” வாடிக்கையாளர் 1: “நீ இல்ல நீங்க அவர் இல்ல. உங்களைத் தானே அவரு பத்திரிகை பேட்டியில தமிழின் சிறந்த எழுத்தாளர்னு சொன்னாரு. நீங்க என்ன இங்க?” பையன் (தலையை சொறிந்தவாறு): “அதுவா அண்ணே... தலைவரு அடிக்கடி குவாட்டரோட இங்க வந்து சைட் டிஷ் இல்லாம உட்கார்ந்திருப்பாரு. நான் எல்லா டேபிள்ள இருந்தும் கொஞ்சம் கொஞ்சமா சைட் டிஷ்ஷை ஆட்டைய போட்டு தலைவருக்கு கொண்டு கொடுப்பேன். பதிலுக்கு தலைவர் எங்கிட்ட உலக இலக்கியம், உலக இசை, உலக செக்ஸ் எல்லாத்த பத்தியும் பேசுவாரு.” வாடிக்கையாளர் 1: “தலைவருக்கு புடிச்ச சைட் டிஷ் என்னய்யா?” பையன்: “மிக்சர்ணே” வாடிக்கையாளர் 1: “அவரு கூட சேர்ந்து உரையாடி நீ பெரிய எழுத்தாளர் ஆயிட்டேப்பா. ஆனா நீ எழுதினது ஒண்ணத்தையும் நான் படிச்சதில்ல. நான்னு இல்ல எவனுமே படிச்சதா தெரியல. ஆனா ஊரெல்லாம் இதைப் பத்தியே பேசிக்கிட்டு கெடக்கானுவ. நீ எழுதினது எங்க வந்திருக்கு? இப்ப எதாவது எழுதி வச்சிருக்கியா?” பையன் ஒரு கிழிந்த சிகரெட் அட்டையை காட்டுகிறான். அதன் பின்புறத்தில் “ரெண்ட...

இன்மை இதழ் ஆறு

இன்மை ஆறாவது இதழ் வாசிக்க இன்மை ஆறாவது இதழ் வெளியாகிறது. அதில் முகப்பு சித்திரமாக ராஜனின் ஓவியம் மனுஷ்யபுத்திரன் பேட்டி நான்காம் பாகம், ஆத்மார்த்தி, இரா.சீனிவாசன் ஆகியோரின் கட்டுரைத் தொடர்கள், லஷ்மி சரவணகுமாரின் “மோக்லியை தொலைத்த சிறுத்தை” தொகுப்புக்கான விமர்சனம், மாயா ஏஞ்சலூ, அன்புசிவன் ஆகியோருக்கு அஞ்சலி குறிப்புகள், மனுஷ்யபுத்திரன், கலாப்பிரியா, சுதீர் செந்தில், போகன் சங்கர், பொன்.வாசுதேவன், சக்தி ஜோதி, கோசின்ரா, சர்வோத்தமன், நாகப்பிரகாஷ், பா.வேல்முருகன், ஷான், பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி, மணிபாரதி, ஆர்.செந்தில்குமார், ஈழக்கவி ஆகியோரின் கவிதைகள், மாயா ஏஞ்சலூ, லாரன்ஸ் பெர்லிங்கட்டி, ஆர்.பார்த்தசாரதி, ரூ போர்சன், சார்லஸ் ஹென்ரி போர்டு ஆகியோரின்   மொழியாக்கங்கள் மற்றும் டி.ஆர்.நாகராஜ் கருத்தரங்கு பற்றின அறிவிப்பு ஆகியன இடம் பெறுகின்றன. வாசகர்களின் கருத்துக்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.