ஹேரி மிர்ட்டிலை காதலிக்கிறான் –- அவனுக்கு வலுவான கைகள், சேமிப்புக்கிடங்கில் வேலை செய்கிறான், ஞாயிற்றுக்கிழமையானால் பஸ் பிடித்து எமெரல்டு மெடொவ்ஸ் பூங்காவுக்கு போகும் போது அவன் “கொஞ்ச நாளில் உன் தசைகள் தளர்ந்து போனால் உன் கன்னிமை என்னவாகும்?” எனக் கேட்க மாட்டான். இல்லை ஞாயிறன்று அவர்கள் எமரல்டு மெடொவ்ஸில் சுற்றுலா போகும் போது ஞாயிறு தினசரியை பார்ப்பார்கள்: “ஏமாற்ற பார்த்த வங்கி ஊழியர் காதலனை பெண் கொன்றாள்” அவர்கள் அதை புல்லில் விரிப்பார்கள் “ஜெர்ஸியில் குளியல் தொட்டி விவகாரம் பெரும் சர்ச்சையாய் வெடித்தது” அவர்கள் பிறகு அதில் வசதியாய் அமர்வார்கள் ஹேரி “தளர்ந்த தசைக்காக ஸிக்கின் களிம்பு, ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்களின் மரு, உண்ணி, சிவபேறிய நரம்புகள், தளர்ந்து தொங்கும் தொண்டை தசை, உச்சந்தலை, மயிர் வியாதிகளை குணப்படுத்தும் மலிவு விலை, முழு உத்தரவாதம்” எனக் கூற மாட்டான். இல்லை, ஹேரி ஒன்றுமே சொல்ல மாட்டான், புன்னகைப்பான், ஞாயிறு தினசரி மீது அவர்கள் எமரால்டு மெடோவ்ஸில் முத்தமிடுவார்கள்.