Skip to main content

குழப்பமான தேர்தல் முடிவுகள்



மோடி எதிர்ப்பு ஓட்டு?


நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு கூட அதிர்ச்சி தான் என சில அதிமுக நண்பர்களிடம் பேசுகையில் அறிந்தேன். திமுகவினரிடம் பேசும் போது இவ்வளவு பாரித்த தோல்வியை அவர்களும் எதிர்பார்க்கவில்லை என தெரிந்த்து. ஆனால் ஒருவிதத்தில் மத்தியில் மோடிக்கு தனி பெரும்பான்மை கிடைத்த நிலையில் தமிழக முடிவுகள் அதிமுகவுக்கு சர்க்கரை நோய் வந்தவர் கையில் பாயச கிண்ணம் கொடுத்தது போல் ஆகி விட்டது. 15 சீட்டுகளுக்கு மேல் வாங்கி இருந்து ஒரு கூட்டணி கட்சி அமைகிற நிலை திமுகவுக்கு உதவியிருக்கும். ஆனால் இப்போது எல்லா வியூகங்களும் கலைந்து விட்டன. இரு கழக கட்சிகளுக்கு இத்தேர்தல் முடிவுகள் குறைவாகவும் கூடுதலாகவும் ஏமாற்றம் அளித்திருக்கும். மத்தியில் மந்திரி பதவி வாங்க 38 சீட்கள் பெற்றால் கூட போதாது. அதிர்ஷ்டம் வேண்டும். அதிமுகவுக்கு இதுவரை அது இல்லை.


மோடிக்கு எதிரான இஸ்லாமிய ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்கும் என கூறினார்கள். இசுலாமிய கட்சிகளும் திமுக கூட்டணியில் தாம் இருந்தன. மோடி ஆதரவு அலை போகட்டும், மோடி எதிர்ப்பு அலை கூட கிடையாதா என வேடிக்கையாக தோன்றுகிறது.

0? இதைத் தான் திமுக தலைமை மீண்டும் மீண்டும் யோசிக்கும். அந்தளவுக்கு என்ன தவறு செய்து விட்டார்கள், ஏன் மக்களிடம் அப்படி ஒரு கெட்ட பெயர் ஆகி விட்டதா என அவர்கள் யோசிக்க வேண்டும். எப்போதும் மாநிலத்தில் ஆளும் கட்சி தான் மக்களவை தேர்தலில் அதிக இடங்கள் பெறும் என்றாலும் இது போல் செருப்பால் முகத்திலடித்தது போல் தோல்வி இருக்காது. மாநில தேர்தலில் கூட இப்படி ஒரு பாகுபாடான முடிவை ஒரு கட்சி புரிந்து கொள்ளும். ஆனால் இது அப்படி அல்ல.
ஒன்று இதற்கு காரணம் மோடி அலை அல்ல. ஏனென்றால் தமிழகத்தில் மோடி செல்வாக்கு விலை போகவில்லை. ஜெயலலிதா ஆட்சி மீதான மக்களின் அபிமானமும் அல்ல. ஏனென்றால் மின் தட்டுப்பாடு, விலைவாசி ஆகியவற்றால் சிறுதொழில்களும் மக்களும் நொந்து போயிருக்கிறார்கள். ஒன்றும் பெரிய கெட்ட பெயர் இல்லை என்றால் மக்களிடையே இந்த ஆட்சிக்கு பெரும் வரவேற்பும் இல்லை. ஆக இத்தேர்தல் படுதோல்விக்கு திமுக தன்னையே தான் குற்றம் காண வேண்டும்.
காங்கிரசுடனான கூட்டணி ஊழல் தந்த கெட்ட பெயரா காரணம்? அது தான் எனில் திமுக தலைமை தன் களங்கத்தை துடைக்க எதுவும் குறிப்பாய் செய்யவில்லை, தொடர்ந்து குற்றங்களை மறுத்தது அல்லாமல். குடும்ப அரசியல் பிரிவினைகள் மீதான மக்களின் கசப்பா? தெரியவில்லை. அதிமுக வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் சின்ன அளவில் வேலை செய்திருக்கும் என்றாலும் இப்படி திமுகவை 0க்கு தள்ளும் அளவுக்கு அது போதாது. அமைப்பு ரீதியாய் திமுக மிக மிக வலுவான கட்சி என்கிறார்கள். அல்லது அது தவறா? பலவீனங்கள் உள்ளனவா?
இந்த தேர்தல் முடிவு மிக மிக குழப்பமானது. மக்களின் மனநிலையை எளிதில் ஊகிக்க முடியவில்லை. இது ஊழலுக்கு எதிரான ஓட்டா அல்லது காங்கிரசுக்கு எதிரான ஓட்டா? காங்கிரசுக்கு எதிரன மனநிலையை அதிமுக எப்படி அறுவடை செய்தது?
அடுத்த மாநில தேர்தலில் முடிவுகள் வேறுவிதமாய்ப் இருக்கும் என்பது என் ஊகம். அதனால் இரு கழக கட்சிகளும் இம்முடிவுகளை கொண்டு சீட்டுக்கட்டுகளை கலைத்து விட மாட்டார்கள். தமிழகத்தை பொறுத்த வரையில் எப்படியும் இது லீக் போட்டி தானே!

தேசிய களத்தில் ஆம் ஆத்மியினரின் சொதப்பலான முடிவுகளும் பலரின் கணிப்புகளை கேலிக்குரியதாக்கின. கேஜ்ரிவல் மோடிக்கு நிகரான ஒரு எதிர்தலைவராக முன்வைக்கப்பட்டு அவரை பெரிதும் ஊதி வளர்த்தனர். ஆனால் அதிருப்தியை மட்டுமே வைத்து ஒரு தேர்தலை வெல்வது போகட்டும் கணிசமான தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியாது. அவர் மக்கள் தமக்களித்த வாய்ப்பை பயன்படுத்த தில்லியை ஒழுங்காய் ஆண்டிருக்க வேண்டும். எந்த விதத்திலும் கட்சியை பலப்படுத்தாமல் தேசிய அளவில் அவர் தேர்தலை சந்தித்து தவறு. மக்களின் பல பிரச்சனைகளுக்கு பொறுப்பாய் தீர்வு தேடி பொறுமையாய் போராடாமல் அவர் காங்கிரஸ் அதிருப்தி அலையை அறுவடை செய்யும் அவசரத்தில் இருந்தார். திமுக தமிழகத்தில் முதன்முதலில் ஆட்சியை பிடித்ததற்கு பின்னால் ஐம்பது வருடங்களுக்கு மேலான ஜஸ்டிஸ் கட்சி, திராவிட கட்சியின் வேலையும் கொள்கை பரவலும் இருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாய் என்னென்ன நிகழ்கிறது, பல்வேறு மாநில மக்களின் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வுகள் உண்டு என யோசிக்க ஆம் ஆத்மியினர் முனையவில்லை. தமிழக மீனவர் பிரச்சனை போல் சிக்கலான கேள்விகள் எழும் போது கேஜ்ரிவால் தடுமாறினார். தேசியவாதத்தை ஒவ்வொன்றுக்கும் தீர்வாக வைத்தார். மாநிலங்கள் தோறும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் இதே சிக்கல் தான். சில வாக்காளர்களுக்கு எதிராய் வைர கடத்தல் போன்ற வழக்குகள் கூட இருந்தன. தமிழகத்தில் அவர்களின் தேசியவாத கொள்கைக்கு முரணான அரசியல் கொண்ட உதயகுமாரை வேட்பாளராக்கவும் அவர்கள் தயங்கவில்லை. கிடைத்தவரை பிடித்து சாக்கில் போடு என்பதாய் இருந்தது அவர்களின் நிலைப்பாடு. 

உண்மையில் இரு அலைகள் இருந்தன. ஒன்று மோடி அலை, இன்னொன்று கேஜ்ரிவால் அலை. அதில் ஒன்று பொய்த்து விட்டது. கேஜ்ரிவால் இந்த சந்தர்ப்பவாத அவசர அரசியலை நிறுத்தி விட்டு கட்சியை கட்டியெழுப்ப முனைய வேண்டும். அடுத்து மாநிலங்களின் பிரச்சனைகளுக்கு ஏற்ப போராட்டங்களை திட்டமிட்டு நடத்த வேண்டும். அதற்கான மாநில தலைவர்களை உருவாக்க வேண்டும். சும்மா வீதிநாடகம் போடுகிறவர்கள், மீடியாவில் விவாதம் புரிகிறதோடு அரசியலை நிறுத்திக் கொள்கிற மேற்தட்டினரை தலைமையில் இருத்தினால் தமிழத்தில் அக்கட்சி வளராது. இவர்கள் தம் வீட்டு அருகில் சாக்கடை ஓடினால் கூட வேட்டியை தூக்கி கொண்டு ஒதுங்கி போகிறவர்கள். அடுத்து மக்கள் இனி வாய்ப்பளித்தால் தர்ணா செய்து, பெண்களின் குடியிருப்புக்கு குண்டர்களோடு போய் தகராறு செய்து, பதவியை ராஜினாமா செய்யாமல் அவர் ஒழுங்காய் ஆட்சி செய்ய வேண்டும். தன் திறனை நிரூபிக்க வேண்டும். முதலிரவில் குழந்தை பிறக்காது என்பது அரசியலில் அவருக்கு முதல் பாடம்.

தமிழகத்தில் அதே போல் வேடிக்கை கதையாகி விட்டவர் விஜயகாந்த். மக்கள் அவர் செய்கிற கோணங்கிகளை பார்த்து கைதட்டி விட்டு ஓட்டை மட்டும் மாற்றி போட்டு விடுவார்கள் என தெரிகிறது. தமிழக மக்களுக்கு சினிமா மயக்கம் உண்டு தான். அதற்காக ஏமாளிகள் அல்ல!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...