Skip to main content

Posts

Showing posts from February, 2025

பெரிய மலைச்சிகரங்கள்

  மனுஷ்ய புத்திரன் தன் கட்டுரையில் ‘திறன் வெளிப்பாடு’ என்றுதான் எழுதினார். அதை நான் திறன் மேம்பாடு எனத் தவறாகப் புரிந்துகொண்டு அதை விமர்சித்ததது தவறுதான். தவறான மனப்பதிவினால் நேர்ந்த பிழையை மன்னிக்கவும். அப்பகுதியை நீக்கியும் விட்டேன். அதேநேரம் அவரது கட்டுரை மிகவும் கண்டனத்துக்குரியது என்பதிலோ புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பில் உள்ள பல கோளாறுகள், பிரச்சினைகள், வெளிப்படைத்தன்மையின்மை குறித்த என் விமர்சனப் பார்வையை நான் துளியும் மாற்றிக்கொள்ளவில்லை. இங்கே நான் இருவேறு விளக்கங்களைத் தரவேண்டும்: முதலில், நான் மனுஷ்ய புத்திரனை - அவர் சொல்வதைப்போல - நான் பாஸிஸ்ட் என்று கண்டுபிடித்துக் கூறவெல்லாம் இல்லை - அவரது அக்கட்டுரையின் தொனியிலும் கருத்துக்களிலும் பாஸிஸத்தன்மை தெரிகிறது என்றேன். பாஸிஸ்டாவது எழுத்தின்வழியாக அல்ல என்று எனக்குத் தெரியும். பாஸிஸம் ஒரு சித்தாந்தம், அது ஒரு சமூகச் சூழலின் விளைவு, அதிகார அமைப்பை முழுக்க மாற்றியமைக்கும்போது தோன்றுவது, அது ஆளுமையோ மனநிலையோ அல்ல. மனுஷ்ய புத்திரன் தன் இளமையிலிருந்தே கொஞ்சம் அனார்க்கிஸமும் (அரசின்மைவாதம்), தாராளாவதமும், குடிமைச் சமூகத்தின் முக்க...

தப்பு நிகழக்கூடாது என்று தப்பை ஆதரிப்பவர்

  ராஜன் குறை அரசியல் மனம் கொண்டவரல்லர், அரசியல்வாதியின் மனம் கொண்டவர். ஒரு ஓநாய் ஊருக்கு வந்து ஆட்டுக்குட்டியை அடித்து இழுத்துச்சென்று விடுகிறது. அப்போது அந்த ஓநாயைப் பிடித்து அடித்து பிரியாணி போட வேண்டும், கல்லால் அடித்து துரத்த வேண்டும் என்பது தார்மீகக் கோபம். அதுவே பிரச்சினையைத் தீர்க்கும். எந்த குடியானவனும் அதையே செய்வான். ராஜன் குறையோ அங்கு வந்து ஓநாய் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு போவது மிகப்பெரிய சமூக வலைப்பின்னலில் நிகழும் சின்னஞ்சிறு நிகழ்வு. அதற்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற காரணிகள் உள்ளன. அந்த கண்ணிகளைச் சரிசெய்யாமல் ஓநாய் வருவதை தடுக்க முடியாது. அதனால் ஓநாயுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வப்போது சில ஆட்டுக்குட்டிகளை அதற்குக் கொடுப்பதே நடைமுறை சாத்தியமானது. இல்லாவிட்டால் இயற்கையின் அடிப்படையான வலைப்பின்னலே சிதைந்து போகும். ஓநாய் திருந்தி சைவத்துக்கு வர இன்னும் சில நூறாண்டுகள். அதுவரை அமைதியாக இருக்க வேண்டும், நிதானமாக பக்குவமாக இதைக்குறித்து உரையாட வேண்டும். கொந்தளிக்கவோ அறச்சீற்றம் கொள்ளவோ கூடாது என்று நீண்ட உரையாற்றுவார். இப்படி ஒரு லட்சிய சமூக அரசியல் ...

யானையென்றால் பானை

எழுத்தாளர்களுக்கு நிதியுதவி அளிப்பது மொழிக்கும், பண்பாட்டுக்கும் மிகப்பெரிய நல்விளைவுகளை ஏற்படுத்தும். சர்வதேச புத்தகக் கண்காட்சிக்காக விமான, ஐந்து நட்சத்திர அறைச் செலவுகளுக்காக நிதியில் கால்வாசி இருந்தாலே அரசு இதைச் செய்ய முடியும். ஒரு பட்டிமன்ற / வெகுஜனப் பேச்சாளர் ஒரு மணிநேரம் புத்தகத் திருவிழாவில் பேச ஒரு லட்சம் கொடுக்கிறார்கள். அதனால் சமூகத்துக்கு, பண்பாட்டுக்கு, மொழிக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை. பொதுச்சமூகமும் இதை வெற்றுக்கேளிக்கைக்கு மேல் முக்கியமாகப் பொருட்படுத்துவதில்லை. கேட்டதும் மறந்துவிடுகிறார்கள். நீங்கள் பாரதியின், பாரதிதாசனின் வரிகளை எடுத்துக்கொள்ளுங்கள், அவை இன்றுவரையிலும் மேற்கோள்காட்டப்பட்டுக் கொண்டும், பாடப்பட்டும் வருகின்றன. தமிழுக்கு வெளியே மாணவர்களுக்கு அறியப்பட்ட பெருமாள் முருகனாலும், இமையத்தாலும், அம்பையாலும் தமிழுக்கு எவ்வளவு பெருமையென்பதை மாற்றுமொழிக்காரர்கள் அவர்களை உயர்வாகப் பேசும்போது நாம் உணர்கிறோம். அண்மையில் பெருமாள் முருகன் வந்திருந்தபோது என் கல்லூரியில் ஆயிரத்துக்குமேல் மாணவர்கள் திரளத் தயாராக இருந்தார்கள். ஆனால் அரங்கில் இடமில்லாததால் 100 பேர்களுக்குள்...

மனுஷ்ய புத்திரனிடம் சில கேள்விகள்

  மனுஷ்ய புத்திரன் எனது பிரியத்துக்குரிய கவிஞர், பதிப்பாளர், அடிப்படையில் எனக்கு பல விசயங்களில் ஆதர்சமாக உள்ள ஆளுமை. ஆனால் முதன்முதலாக அவரது அவரது "மாவட்டப் புத்தகத் திருவிழா: உள்ளூர் எழுத்தாளருக்கான பரிவட்டம் அல்ல" எனும் கட்டுரை எனக்கு மிகுந்த கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதிலுள்ள தொனி அதிகாரத்துவத்தின், முற்றதிகாரத்தின் தொனி மிக மோசமானது. இது கண்டிக்கத்தக்கது. உள்ளூர் எழுத்தாளர்கள் தமக்கு தகுதிக்கு மீறிய அங்கீகாரத்தைக் கோருகிறார்கள் எனப் பொருட்பட அவர்களுக்கு பரிவட்டம் கட்ட புத்தகத் திருவிழா நடத்தப்படுவதில்லை என்கிறார். யார் இங்கே பரிவட்டத்தைக் கோருகிறார்கள்? உள்ளூர் படைப்பாளிகளில் நன்கு அறியப்பட்டவர்களே தம்மை மேடையில் பேச வைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு அத்தகுதி இல்லையா? நிச்சயமாக உள்ளது. இப்படிப் பேசுபவர்களை மனுஷ்ய புத்திரன் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி நடவடிக்கைகளை, தமிழ் மொழியை, பண்பாட்டை எதிர்ப்பவர்கள் என்றும், இலக்கிய விழாக்களை மொத்தமாக நிறுத்தி வைப்பதே உள்நோக்கம் என்கிறார். பட்டிமன்ற பேச்சாளர்களைப் பகடி செய்யும் எழுத்தாளர்களை...

மானியக் குழுவும் உயர்கல்வியும்: ஓரவஞ்சனையும் ஊழலும்

பல்கலைக்கழக மானியக் குழு ugc care list எனும் பட்டியல் ஒன்றை வெளியிட்டு அதில் வரும் இதழ்களின் பட்டியலுக்குள் ஆய்வாளர்களும் விரிவுரையாளர்களும் கட்டுரைகளைப் பிரசுரித்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று முன்பு கூறியது. இப்போது அப்பட்டியல் தேவையில்லை, தகுதியான இதழ்களை சம்மந்தபட்ட கல்வி நிறுவனங்களே தேர்வு பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறது. இதை கல்வியாளர்களின் சுதந்திரத்துக்கான முக்கியமான படி என்கிறது. ஆனால் நிஜத்தில் இது இருமுனை கத்தி - அரசுதவி பெறும் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் தம் விருப்படி இதழ்களில் பிரசுரிக்க, பதவி உயர்வு பெற, அங்கு ஆய்வு பெற்ற முனைவர் பட்ட ஆய்வாளர்களும் சுலபத்தில் பட்டம் பெற இது உதவும். ஆனால் தனியார் பல்கலைக்கழங்களில் வேலை செய்யும் விரிவுரையாளர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் இது தலையில் விழும் பெரிய இடி - ஏற்கனவே அங்கு நிர்வாகங்கள் எந்த இந்திய இதழ்களில் ஆய்வுக்கட்டுரை பிரசுரிப்பதையும் ஏற்பதில்லை. Scopus, web of science ஆகிய எல்சிவியர் போன்ற அயல்நாட்டு நிறுவனங்கள் வெளியிடும் தரப்பட்டியலில் உள்ள இதழ்களில் பிரசுரித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன. இது மான...

தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளை

நமது சேனல்கள், பத்திரிகைகள் கல்வியின் மகத்துவத்தைப் பேசும் அளவுக்கு, அரசுப் பள்ளிகளின் போதாமைகளைப் பிரதானபடுத்தும் அளவுக்கு தனியார் பள்ளிகளின் கொள்ளையை விமர்சிப்பதில்லை. why are school fees so high?

நாதஸ் திருந்துவதில்லை

விகடனின் டிராக் ரிக்கார்ட் சற்று குழப்பமானது. இதை கண்ணை மூடிக்கொண்டு கண்டிக்கவும் முடியவில்லை. திரைமறைவில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. கருத்துச் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்குமொது நம் குரலை யார் எப்படி வியாபாரம் செய்கிறார்கள், அதை வைத்து என்னென்ன பேரம் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இதையே நான் திமுகவை தொடர்ச்சியாக ஆதரிக்கும் சில ஊடகங்களுக்கும் சொல்வேன் - அவர்கள் ஒருபக்கம் வலதுசாரிகளை எதிர்த்து களமாடிக்கொண்டே ஜக்கி, மணல் கொள்ளை, மலை உடைப்பு, கல்வி மாபியாக்களிடம் இருந்து பணம் வாங்கி ஜேப்பில் போட்டுக்கொள்கின்றன. அண்ணாமலையின் புரோஜெக்டிலும் மறைமுகமாக பங்கைப் பெற்று சிரிக்கிறார்கள். யாரையும் நம்ப முடியாத காலம் இது. ஒரு ராஜாவுக்கு ரெண்டு மனைவிகள். ரெண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வரும்போது அல்லது அவர்கள் ராஜாவின் அதிகாரத்துக்குள் நிற்காதபோது அவர் ஆளுக்கு ஒன்று கன்னத்தில் வைத்து அடக்கி வைப்பார். கொஞ்சம் ஓலமிட்டுவிட்டு அவர்களும் இடம் வலம் என்று நின்றுகொள்வார்கள். நமது அதிகாரவர்க்கமும் முதலீட்டியமும் முற்போக்கு, சமூக நீதி மையவாத, தேசியவாத, வலதுசாரி, நட...

மும்மொழியோ எம்மொழியோ

மும்மொழியோ நால்மொழியோ எதிர்காலத்தில் மொழி அறிவுக்கான தேவை வெகுவாகக் குறைந்துவிடும், இப்போதே பன்மொழி அறிவு படைத்தவர்களுக்கு AIயால் வேலை இல்லாமல் போகிறது என்று அயல்மொழி கற்பிக்கும் நிபுணரான நண்பரொருவர் என்னிடம் சொன்னார். பள்ளிகளிலும் ஒரு சில ஆண்டுகளுக்கு மேல் எந்த மொழியையும் கற்பிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். இன்று நீங்கள் இணையம், ஊடகம் வழியாக பல மொழிகளை விரைவில் கற்றுக்கொள்ளலாம். அதாவது அடிப்படையான பேச்சு மொழியை. எழுதுவதற்கு, மொழிபெயர்க்க சாட்ஜிபிடி இருக்கிறது.  இந்தி வேண்டுமா, தமிழ், ஆங்கிலமா எனும் விவாதமே அர்த்தமற்றது.

மொழி தேவையில்லாத சமூகம்

பள்ளிக்கல்வி இனிமேல் அதாவது அடுத்த கால் நூற்றாண்டுக்குள் நேரடி வகுப்புகள் குறைவாகவும், பதிவு செய்யபட்ட காணொளிகளும் பயிற்சிகளும் கொண்ட இணையவழி வகுப்புகள் அதிகமாகவும் இருக்கும். கட்டாயப் பாடங்கள் சொற்பமாகவும் தேர்வுப்பாடங்கள் அதிகமாகவும் இருக்கும். புதிய கல்விக்கொள்கையைப் பார்த்தால் ஏற்கனவே இதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் எனத் தெரியும். தமிழ்நாடு அரசு இப்போதைக்கு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கலாம், ஆனால் எதிர்காலத்தில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தால் உள்ளே கொண்டு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு பிரச்சினை - தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் வருடத்திற்கு வசூலிப்பதை நியாயப்படுத்த நிறைய உள்கட்டமைப்பில் முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்களால் புதிய பாணி கல்வியை உடனடியாக ஏற்க முடியாது. கட்டணத்தை குறைக்கவும் இயலாது. ஆரம்பத்தில் நிறைய குழப்பங்கள் தோன்றும். இப்போதே சீனாவில் குழந்தைப்பேறு குறைந்ததில் பள்ளிகள் பல மூடப்படுகின்றன. இந்தியாவில் இது 2055க்கு மேல் நிகழும் என்கிறார்கள். அப்போது வேறுவழியின்றி தொலைதூரக் கல்வியை ஏற்பார்கள், பல ஆசிரியர்கள் வேலை இழப்பார்கள். மாணவர்களுக்கு எதைக் கட்டாயமாக அளிக்க வேண்ட...

நாம் ஏன் மனிதர்களாக காட்டிக் கொள்ளத் துடிக்கிறோம்?

நான் என் இலக்கிய நண்பர் ஒருவருடன் மனிதனுக்கும் விலங்குகளுக்குமான பொருத்தப்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அவர் தனக்கு பரிணாமவியல் கோட்பாட்டுடன் உடன்பாடு உண்டெனினும் தன்னை ஒரு விலங்காக அடையாளப்படுத்துவது தன்னைப் பொறுத்தமட்டில் உவப்பற்றது என்றார் . அதைக் கேட்ட போது எனக்கு மிகவும் வியப்பேற்பட்டது . ஏனென்றால் எனக்கு அப்படி கோபம் வருவதே இல்லை . மாறாக நான் அவ்வாறு அழைக்கப்பட்டால் ஒவ்வொரு முறையும் மிகவும் மகிழ்ச்சியடைவேன் . என் குழந்தைப் பருவம் முதலே நான் என்னை ஒரு விலங்காகவே கருதி வந்திருக்கிறேன் . என்னை யாராவது “ நாயே , பன்னி , எரும ” எனத் திட்டினால் எனக்கு ரொம்ப சந்தோஷமாகும் . இன்னும் சொல்லப் போனால் நான் என் நாயுடன் எடுத்த தற்படத்தைப் பார்க்கையில் “ இரண்டு   நாய்கள் ” என்றே நினைப்பேன் .   விலங்குகள் மீதான உயர்வான அபிப்ராயத்தாலும் அபிமானத்தாலோ நான் இப்படி உணரவில்லை . விலங்கு நிலை அப்படி எந்த பெருமைக்குரிய இயல்போ சங்கதியோ இல்லை . விலங்கு நிலை எனில் அது எல்லா நிலைகளையும் போல மற்றொரு ந...