Skip to main content

Posts

Showing posts from December, 2021

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த ஆண்டு எனக்கு சற்று கூடுதல் தெளிவு மனிதர்களைப் பற்றி கிடைத்திருக்கிறது. அது என் வாசிப்பிலும் அனுபவத்திலும் இருந்து கிட்டியது.  நாமே தேடிச் செல்லாவிட்டாலும் துன்பம் வரும் போது கூடவே உதவிக்கு நண்பர்களும் வருவார்கள் எனும் இதமான நம்பிக்கையும் கிடைத்தது.  பெங்களூருக்கு வந்த பிறகு பலவிதமான நண்பர்களை, வாசகர்களை, மனிதர்களை சந்தித்து அளவளாவுவது வெகுவாக குறைந்து போனாலும் நிறைய வாசித்திருக்கிறேன். குறிப்பாக தத்துவத்திலும் இலக்கியத்திலும். அந்த விதத்தில் மகிழ்ச்சி. புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வது எப்போதும் தித்திப்பானது அல்லவா! கூடவே ஒரு பிரச்சனையை தர்க்கரீதியாக பகுப்பாய்வு செய்ய தத்துவ வாசிப்பு உதவியுள்ளது. இலக்கியத்தில் ஐரோப்பிய, அமெரிக்க, பின்நவீன இலக்கியம் நோக்கி கவனத்தை செலுத்தினேன். இதை அடுத்து, கதைத்தொழில் நுட்பம் சார்ந்து நிறைய வாசித்தேன், சிந்தித்தேன்; இயன்றால் அடுத்த வருடத்திற்குள் நாவல், திரைக்கதை ஆகிய வடிவங்களின் கதைத்தொழில் நுட்பத்தை விளக்குகிற புத்தகங்களை எழுதுவேன். அதே போல 2022-23 ஆண்டுகளில், அமெரிக்க பல்கலைகளில் உள்ள BFA in Creative Writing பாணியில் நாவல், சிறுகதை, த...

அம்பையின் பெண்ணுலகம்: சாதனைகளும் எல்லைகளும்

அம்பையை ஒரு பெண்ணியராக எப்படி வரையறுப்பது? பெண்ணியத்தை உலகளவில் மூன்று காலகட்டங்களாகப் பிரிப்பார்கள். முதல் காலகட்டம் பால்நிலை சமத்துவத்தை நடைமுறையில், சமூக அரசியல் தளத்தில் பெறுவதற்கான போராட்டத்தால் ஆனது. பெண்களுக்கு வாக்குரிமை, ஆண்களுக்கு இணையாக வேலை செய்து ஊதியம் பெறும் உரிமை என இந்த காலகட்டம் நகர்ந்தது. அடுத்த காலகட்டம், பண்பாட்டு ரீதியானது. பால்நிலைக் கட்டமைப்புகள் எவ்வாறு பெண்களுக்கு விரோதமாக மொழி, பண்பாடு, குடும்பம் போன்ற சமூகக்கட்டமைக்களுக்குள் உள்ளது என இந்த காலகட்டத்தில் விவாதித்தார்கள். இந்த காலகட்டத்தில் தான் பெண்கள் இலக்கியத்தில், கலைகளில், ஊடகத்தில் தடம் பதிக்க வேண்டும், நுண்-அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும், அதற்காக போராட வேண்டும் எனும் உத்வேகம் தோன்றியது. ஆணாதிக்கம் vs பெண் நிலை என ஒரு இருமை சமூகத்தில் உள்ளது என்று கூறப்பட்டது. ஆண்-மைய சிந்தனை எப்படி நமது மொழியில், சிந்தனையில், சமூக அமைப்புகளில், தொன்மங்களில், மதத்தில் ஊடுருவி உள்ளது என் பெண்ணியவாதிகள் பேசினார்கள். ஆங்கில மொழிக்குள் இலக்கிய மொழி என ஏற்கப்படும் ஒன்று எப்படி ஆண்மொழியாக இருக்கிறது என விவாதித்த பிரித்தானிய எழுத...

மதங்கள் அன்பை போதிக்கின்றனவா?

எல்லா மதங்களும் வெறுப்பைத் தான் போதிக்கின்றன. மதம் ஒரு நிறுவனம். அதன் அடிப்படையே நாங்கள் vs மற்றமை. இதுவரையிலும் வரலாற்றில் மதத்தின் பெயரிலே மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்றும் மதப்போர்கள் நடந்தபடித்தான் இருக்கின்றன. அதை இனத்தின்,  மொழியின் அடிப்படையில் நடந்த, நடக்கிற படுகொலைகளாக என நாம் கற்பனை பண்ணிக் கொள்கிறோம். சொல்லப்போனால், இங்கிலாந்தின் காலனிய ஆதிக்கவாதத்தின் பின்னால் இருந்தது கூட மத துவேசத்தால் செலுத்தப்பட்ட முதலீட்டிய கனவே. இதற்கு எம்மதமும் விதிவிலக்கல்ல.  மதம் அன்பை போதிக்கிறது என்பது தேன் தடவப்பட்ட ஒரு பொய். மதசார்பின்மையை நாம் மதத்தின் மானுட நேயமாக குழப்பிக் கொள்கிறோம். முற்போக்காளர்கள் சிறுபான்மை மதத்தவரின் பண்டிகைகளில் கலந்து கொள்வது மறைமுகமாக இந்துத்துவாவை வளர்க்கவே உதவும். அது நம் நாட்டை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கும். அதனாலே நான் பண்டிகைகளின் போது வாழ்த்துவதில்லை. அது கொலைவாளை வணங்குவதற்கு சமானமானது. அதற்குப் பதிலாக இந்து மதம், கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்களே இல்லாத ஒரு பூமியை நாம் கனவு காண வேண்டும். அதற்காக மக்களைத் தயாரிக்க வ...

பாசம் ஏன் போலியானது? ஏன் தியாகத்தை கண்டு அஞ்ச வேண்டும்?

“ஆறு பெருகி வரின் அணை போடலாகும் அன்பின் பாதையில் அணை இடலாமோ?” “கண்ணும் கண்ணும் கலந்து” பாடல், “வஞ்சிக்கோட்டை வாலிபன்” “மதத்தின் குரூரத்திற்கென ஒரு நெடிய ஏணி உள்ளது; அதன் பல படிகளில் மூன்று முக்கியமானவை. மனிதர் தமது கடவுளர்க்கு என நரபலி கொடுத்ததுண்டு, தாம் மிகவும் நேசிப்பவரைக் கூட பலிகொடுத்ததுண்டு … அதன் பிறகு மானுட அறத்தின் காலகட்டம் தோன்றிய போது அவர்கள் தமது வலுவான உள்ளுணர்வுகளை, தமது ‘இயல்பை’, தமது கடவுளுக்கு தியாகம் செய்தனர் … இறுதியாக: தியாகம் செய்ய என்ன மிச்சமிருந்தது? … மனிதர் தமது கடவுளரையே தியாகம் செய்தனர், கற்களை, முட்டாள்தனத்தை, புவியீர்ப்பை, விதியை, தம் மீதான உச்சபட்ச குரூரத்தின் வெளிப்பாடாக இன்மையை எல்லாம் வழிபட நேரவில்லையா?” - நீட்சே, “Beyond Good and Evil”, அத்தியாயம் III, 1886 “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உள்ளது. இது உண்மையல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனுக்கும் தான் அதை முழுங்குவதை தவிர்க்க முடியாத தூண்டில் இரை ஒன்று உள்ளது. ஒவ்வொருவரையும் தம் வசப்படுத்த அந்த இரைக்கு மானுடத்தின், பெருந்தன்மையின், மென்மையின், தியாகத்தின் பளபளப்பை மட்டும் கொடுத்தால் போதும்; பிறகு அவர்கள் எதையும...

“குறுப்” - எதிர்நாயக பாத்திரத்தின் இலக்கணம்

சுகுமாரக் குறுப்பு கேரளாவில் மிக பிரசித்தமான ஒரு குற்றவாளி. 1984, ஜனவரி 21இல் அவர் தன் நண்பர்கள் மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து ஒரு கொலையை செய்தார். கொலை அல்ல பிரச்சனை, அதை எதற்காக செய்தார் என்பதே. அவர் வெளிநாட்டில் வேலை செய்யும் போது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை 30 லட்சத்துக்கு எடுத்திருந்தார். ஜெர்மனியில் ஒருவர் தன்னுடைய சாவை பொய்யாக சித்தரித்து காப்பீட்டு பணத்தை கையாடினார். அதில் இருந்து தூண்டுதலைப் பெற்ற சுகுமாரக் குறுப்பு இந்தியாவில் முதன்முறையாக அக்குற்றத்தை முயன்று பார்க்கும் முயற்சியில் தன்னை ஒத்த தோற்றமுள்ள சாக்கோ எனும் அந்த இளைஞரை இரவில் தன் காரில் அழைத்து சென்று விஷமூட்டி கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் தன் காரில் வைத்து எரித்தார். இந்தக் குற்றத்தை ஆச்சரியமாக கேரள போலீசார் கண்டுபிடித்ததுடன் சுகுமாரக் குறுப்பைத் தேடி இந்தியா முழுக்கவும் பின்னர் வெளிநாட்டுக்கும் பயணித்தனர். ஆனால் குறுப்புக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் என்பதால் அவர் போலீசின் வேட்டையில் இருந்து தப்பித்து சென்றதாக சொல்லப்படுகிறது. குறுப் இப்படி 37 வருடங்களாக தலைமறைவான குற்றவாளி எனும் அளவிலும், அவருடைய க...

தமிழில் கிரிக்கெட் எழுத்து - தினேஷ் அகிராவின் வருகை

எனக்கு நீண்ட காலமாக ஒரு வருத்தம் இருந்தது. நமது சிறுபத்திரிகை மரபில் அப்போது படைப்பாளிகள் இலக்கியம், கலை, அழகியல் தாண்டி எதைப் பற்றியும் கட்டுரை எழுதக் கூடாது என ஒரு எழுதப்படாத விதி இருந்தது. அதையும் கடந்து போகிறவர்கள் ஓவியம், செவ்வியல் இசை பற்றி எங்கோ ஒரு ஓரமாக இருந்து எழுதினார்கள். இன்னொரு பக்கம், அரசியல் கோட்பாட்டு எழுத்தாளர்கள் இருந்தார்கள். அன்றாட வாழ்வில் சாப்பாடு, விளையாட்டு, சினிமா இசை, ராக் இசை, மெட்டாலிக்கா, தொலைக்காட்சி, சினிமாவின் அழகியல் என எவ்வளவோ ரசிக்கத்தக்க விசயங்கள் உண்டு. இவற்றை ஏன் எழுத்தாளர்கள் பரிசீலிக்காமல் பனிமலையின் சிகரத்தில் ஒற்றைக்கால் தவம்புரியும் ஜடாமுனிகளைப் போலிருக்கிறார்கள் என விசனித்திருக்கிறேன். தமிழில் டென்னிஸ், உதைப்பந்து விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட படைப்பாளிகள் இருந்தார்கள், ஆனால் அவர்கள் அவை பொதுமக்களின் துய்ப்புக்கான சங்கதி என நினைத்து தம் எழுத்தில் அவற்றைப் பற்றி எழுதாமல் ‘வெள்ளிக்கிழமை விரதம்’ அனுசரித்தார்கள். இது உடைந்தது இணைய எழுத்து, சமூகவலைதளங்கள் தோன்றிய பின்னரே. சினிமா இசை, சாப்பாடு, கிரிக்கெட், வெகுஜன படங்கள் என பலவற்றைப் பற்றி சீரியஸான...

சாரு எனும் சகாப்தம்

முன்னோடிகளின் பாதையில் நடைபோடுவது சற்று சுலபம். தமிழில் ஏற்கனவே உள்ள செண்டிமெண்டுகள், இங்கு வெற்றி பெற்றுள்ள வடிவங்கள், உருவகங்களை பயன்படுத்தி வாசகரை சுரண்டுவதும் ஓரளவுக்கு எழுத்து கைவந்தவர்களுக்கு சுலபமே. ஆனால் இங்குள்ள கதைகூறல் மரபை முழுக்க உடைத்து விட முயல்வது, உரைநடை-புனைவு எனும் இருமையை அழிப்பது, அதன் வழி சுய அனுபவத்தை சொல்லுகிறவனும் ஒரு கற்பனைப் பாத்திரமே என நிறுவுவது, எதிர்க்கதை எனும் புதிய பள்ளியை இங்கு உருவாக்குவது, ஒரு புது அழகியலுக்கு. களம் அமைப்பது, அதற்கான முன்னோடிகளை பிரஞ்சில் இருந்தும், அரபு இலக்கியத்தில் இருந்தும் தேடி தமிழுக்கு அறிமுகப்படுத்துவது என சாரு நிவேதிதா தமிழில் ஐம்பது பேர் செய்ய வேண்டிய வேலையை தனி ஒருவராக கடந்த நாற்பதாண்டுகளாக பண்ணி வருகிறார். அதிலும் மேற்கில் இருந்து யாரையும் போலச்செய்யாமல் தன் இயல்பு படியே செயல்படுகிறார் என்பது மகத்தானது. பின்னமைப்பியல் தத்துவத்தில் எப்படியெல்லாம் நாம் வாழ வேண்டும் எனக் கூறுகிறார்களோ அதை அப்படியே எழுத்திலும் நிஜத்திலும் வாழ்ந்து காட்டுபவர். சாருவின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள், உணர்வுகளை நான் இவ்விதத்தில...

காங்கிரஸ் - சில கேள்விகள்

எனக்கு ரொம்ப நாட்களாகவே காங்கிரஸ் பாகஜவின் பி டீமோ எனும் சந்தேகம் உள்ளது. ஏனென்றால் பாஜகவை அகற்ற வேண்டும், பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது எனும் அவேசம் இந்துத்துவாவை விரும்பாத மக்களுக்கும், ஏனைய எதிர்க்கட்சியினருக்கும் உள்ளதைப் போல காங்கிரஸுக்கு இல்லை. இன்று நேற்றல்ல கடந்த பத்தாண்டுகளாகவே தான். நாம் ராகுல் காந்தியின் மோடி எதிர்ப்பை வைத்து மட்டும் காங்கிரஸை மதிப்பிடக் கூடாது என நினைக்கிறேன். காங்கரஸுக்குள் அவர் ஒரு தனிக்குரல் எனும் உணர்வு நமக்கு தொடர்ந்து கிடைக்கிறது.  மூன்று கேள்விகளைம் கேட்கிறேன் - 1) தமிழகத்தில் அதிமுகவை எதிர்ப்பதில் ஒரு எதிர்க்கட்சியாக திமுக காட்டிய முனைப்பில் நூறில் ஒரு சதவீதமாவது காங்கிரசிடம் பாஜகவை எதிர்ப்பதில் இருந்ததுண்டா? ஒரு பக்கம் ராகுல் காந்தி அறிக்கைகளாக விடுவார், மறுபக்கம் மற்ற காங்கரஸ் தலைவர்கள் இருட்டில் பாஜகவுடன் கைகோர்த்தபடி மோடியைப் புகழ்ந்தபடி இருப்பார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இணையாக மற்ற மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவை விமர்சித்து இப்போது வரை நான் பார்த்ததில்லை. அடுத்து, (2) கொள்கையளவில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான வித்தியாசங...

பால்வண்ணம் பிள்ளை ஏன் கந்தசாமிப் பிள்ளையாக இல்லை?

  அரிஸ்டாட்டில் (கி.மு 384-324) பண்டைய கிரேக்க தத்துவ ஞானிகளில் முக்கியமானவர் . தத்துவம், தர்க்கம் மட்டுமன்றி உயிரியல் உள்ளிட்ட அறிவியல் துறைகளிலும் ஆய்வு செய்து எழுதியவர் . அவருடைய ஆசான் பிளேட்டோ ஒரு கருத்துமுதல்வாதி ( எல்லா இருப்புகளுக்கும் ஆதியந்தம் ஒரு தூய கருத்தே என நம்புபவர் ); ஆனால் இவரோ ஒரு “ லோகாயவாதி ” அல்லது நடைமுறைக்கு அதிக மதிப்பளிக்கும் தத்துவவாதி , பொருட்களுக்கும் சாரம் என ஒன்று இருக்கக் கூடும் என நம்பாதவர் . அரிஸ்டாட்டில் ஒரு உருவவியல்வாதியும் (formalist) கூட - அதாவது வடிவமே ஒன்றின் தற்காலிகமான இயல்பை , நிலையற்ற சாரத்தை தீர்மானிக்கிறது என நம்புகிறவர் .   உ . தா ., ஒரு ஆப்பிளை எடுத்துக் கொள்வோம் . அதைக் கையில் எடுத்துக் கொண்டதும் அது ஒரு ஆப்பிள் தான் என உங்களுக்கு எப்படித் தெரியும் ? அதன் உருளையான தோற்றம் , வழவழப்பான ஸ்பரிசம் , அடர்சிவப்பு நிறம் , இனிப்பான வாசனை . இறுதியாக அதன் சுவை . நீங்கள் கண்ணற்றவர் என்றாலும் ஆப்பிளை எடுத்ததும் ஆப்பிள் என்று சொல்லி விடுவீர்கள் . யாராவது இந்த தோற...