எல்லா மதங்களும் வெறுப்பைத் தான் போதிக்கின்றன. மதம் ஒரு நிறுவனம். அதன் அடிப்படையே நாங்கள் vs மற்றமை. இதுவரையிலும் வரலாற்றில் மதத்தின் பெயரிலே மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்றும் மதப்போர்கள் நடந்தபடித்தான் இருக்கின்றன. அதை இனத்தின், மொழியின் அடிப்படையில் நடந்த, நடக்கிற படுகொலைகளாக என நாம் கற்பனை பண்ணிக் கொள்கிறோம். சொல்லப்போனால், இங்கிலாந்தின் காலனிய ஆதிக்கவாதத்தின் பின்னால் இருந்தது கூட மத துவேசத்தால் செலுத்தப்பட்ட முதலீட்டிய கனவே. இதற்கு எம்மதமும் விதிவிலக்கல்ல.
மதம் அன்பை போதிக்கிறது என்பது தேன் தடவப்பட்ட ஒரு பொய். மதசார்பின்மையை நாம் மதத்தின் மானுட நேயமாக குழப்பிக் கொள்கிறோம்.
முற்போக்காளர்கள் சிறுபான்மை மதத்தவரின் பண்டிகைகளில் கலந்து கொள்வது மறைமுகமாக இந்துத்துவாவை வளர்க்கவே உதவும். அது நம் நாட்டை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கும்.
அதனாலே நான் பண்டிகைகளின் போது வாழ்த்துவதில்லை. அது கொலைவாளை வணங்குவதற்கு சமானமானது.
அதற்குப் பதிலாக இந்து மதம், கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்களே இல்லாத ஒரு பூமியை நாம் கனவு காண வேண்டும். அதற்காக மக்களைத் தயாரிக்க வேண்டும்.