இன்று என் வேலையிடத்தில் நான் காண நேர்ந்த இரு குழந்தைகள் இடம் குறித்த என் பார்வையை முழுக்க மாற்றினார்கள் . முதல் குழந்தை அவனது அப்பாவுடன் கையைப் பற்றி வந்தான் . நான்கு வயதிருக்கும் . பள்ளி சீருடை அணிந்திருந்தான் . அவனுடைய அப்பா ( அவர் அங்கு ஒரு ஊழியர் ) சைன் இன் செய்ய மேலே மாடிக்கு செல்ல்லும் முன் சில நிமிடங்கள் குழந்தையை கீழே உணவருந்தும் இடத்தில் ஒரு மேஜை அருகே விட்டு செல்கிறார் . நான் பின்னால் ஒரு மேஜை அருகே என் சக்கர நாற்காலியை “ பார்க் ” செய்து ஒரு தேநீரை ருசித்தபடி எழுதிக் கொண்டிருக்கிறேன் . கடைக்கண்ணால் குழந்தை படிக்கட்டையும் தன்னைக் கடந்து செல்லும் அந்நியர்களையும் கவனித்துக் கொண்டு நிற்கிறான் . நிமிடத்துக்கு நிமிடம் பதற்றம் ஜுரம் போல ஏறுவதை அவன் முகத்தில் பார்க்கிறேன் . நான் எழுதுவதைத் தொடர்கிறேன் . அப்போது ஒருவர் வந்து “ யாருப்பா நீ ? ஏன் தனியா நிற்கிறே ? என்னாச்சு ?” என அக்கறையாய் விசாரிக்க அவன் பதிலளிக்காமல் முழிக்கிறான் . பயந்து அழுகிறான் . இப்போது அவர் தன் பையை கீழே ...