Skip to main content

Posts

Showing posts from September, 2019

ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?

நேற்று Newsclick தளத்தில் வெளியான ஒரு முக்கியமான பேட்டியை பார்த்தேன் .    காஷ்மீரில் இன்று வாழும் மக்களில் 40% பேர் மனநோயால் (post-traumatic syndrome, மன அழுத்தம் ) பாதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி உளவியலாளர் மற்றும் பேராசிரியரான ஷோபனா சோன்பர் பேசுகிறார் . நான் இத்தனை நாள் கவனிக்காதிருந்த ஒரு விசயம் இது - காஷ்மீரின் தீவிரவாதம் , பொருளாதாரம் , தனிநாடு கோரிக்கை , சுதந்திரம் , கருத்துரிமை , ராணுவ அத்துமீறல் பற்றி பேசுமளவுக்கு அங்குள்ள மக்களின் மனநலம் பற்றி நாம் யோசிப்பதில்லை .   மனநோய் என்பது உடல் காயத்தை விட ஆபத்தானது , அதிக வலி ஏற்படுத்துவது , சமூகத்தையும் அடுத்த தலைமுறையையும் தீவிரமாக பாதிப்பது . அதுவும் ஒரு சமூகத்தின் சுமார் நேர்பாதி மக்கள் மன அழுத்தத்திலும் இன்னபிற மனப்பிரச்சனைகளிலும் இருக்கும் போது அவர்களின் நடவடிக்கை , சமூக எதிர்வினைகள் எப்படி இருக்கும் என பேட்டியாளர் ஷோபனாவிடம் கேட்கிறார் . மக்கள் அப்படியே உறைந்து போயிருக்கிறார்கள் என அவர் பதிலளிக்கிறார் . அவர்கள் தம்மைச் சுற்றி நிலவ...

தமிழ் நவீன கவிதைகள் 200 - மொழியாக்க தொகுப்பு

என் சக - விரிவுரையாளர் அருள் கேஸ்பர் , சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறையை சேர்ந்த டி . வெங்கட் ரமணன் ஆகியோருடன் சேர்ந்து 200 தமிழ் நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் ஒரு நூலாக மொழிபெயர்த்து வருகிறேன் . அடுத்த வருட இறுதிக்குள் தயாராகி விடும் . எந்த வரையறையும் இன்றி எங்கள் ரசனை மற்றும் விருப்பத்தின் படி தான் கவிதைகளின் தேர்வு . இப்போது வரை தேவதேவன் , மனுஷ்யபுத்திரன் , நகுலன் , குட்டி ரேவதி , முகுந்த் நாகராஜன் , இசை , விக்கிரமாதித்தன் , அழகிய பெரியவன் , பசுவய்யா , பாதசாரி ஆகியோரின் கவிதைகள் சேர்ந்திருக்கின்றன . முடிந்தளவுக்கு தமிழின் முக்கிய கவிஞர்கள் அனைவரையும் உள்ளே கொண்டு வந்து விட திட்டம் . ஆனால் அப்படி முழுமையான ஒரு தொகுப்பாக இது அமையும் என நம்பிக்கையில்லை - தமிழ் நவீன கவிதை அப்படி ஒரு முடிவற்ற கடல் .

What is the Fun in Dance? (Excerpt 1)

This chapter was inspired by the question of why it is so much fun to break into a dance and why it is so much fun to watch someone else dance. This may sound like an innocuous query – but perceiving dance, through Heidegger, as a way of our existing in the Being could be an eye-opener here. It makes this change from an innocuous to a complicated question, it opens up our mind to the unrecognized fluidity in our day-to-day life, and it lets us see how this fluidity lends itself to enormous fun. Finally, we may realize how we are often able to laugh, get excited and be elated in every little moment in life, all without much effort from our part. This chapter is about this “invisible fun” in our everyday life.  We could understand how, in comparison with, say, a written examination, dancing is so much more fun. Let us ask what is “fun”? This is not the same fun as watching an IPL match in TV or playing Candy Crush on a smartphone. 

What is the Fun in Dance? (Excerpt 2)

Let me come to what brought me to this chapter. I was in the first floor of a block with Ayush, at the fag end of the day, both of us tired amidst the loud noise of students practising. We had found a relatively quieter place and were chatting about Heidegger and life in general, and were casually watching the students practising dance on the ground floor. That was when I asked him, “Do all these stuff they do make any sense to you?”. He said “no”. I asked again, “Is that why this is enjoyable?” He nodded. I went on: “Will it be so good to watch if we could perfectly make sense of the whole thing?” Our conversation went off like that. We asked ourselves whether a dance movement could be ultimately enjoyable if it is completely nonsense. No it won’t be. 

Plop: Notes on Heidegger - Contents Page

Plop: Notes on Heidegger - Contents Page A Note from Dean of Humanities and Social Sciences - Dr John J Kennedy  Preface -               Neha Aggarwal          Introduction:   Let’s “Disclose” Heidegger  - Ayush  Why Should One Read Heidegger?  -         Neha Aggarwal  Art and Culture What is the Fun in Dance?  - R. Abilash Chandran Culture and Identity: The Inauthenticity of Being.      -   Ayush 

ரோஹித் ஷர்மா டெஸ்ட் துவக்க ஆட்டத்துக்கு ஏற்றவரா?

விரைவில் துவங்க இருக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா துவக்க மட்டையாளராக களமிறங்குவார் . இது ஒரு திடீர் திருப்பம் , குறிப்பாக தவன் ஆட்டநிலை காரணமாக நீக்கப்பட்டு அவரிடத்தில் வந்த ராகுலும் வறட்சியை சந்தித்து வந்த நிலையில் இளம் துவக்க மட்டையாளர்களை களமிறக்காமல் ஒரு யு - டர்ன் எடுத்து 32 வயதாகும் ரோஹித் ஷர்மாவிடம் சென்றிருக்கிறார்கள் தேர்வாளர்களும் தலைவர் கோலியும் .  இதுவும் கூட இவர்களாக யோசித்து எடுத்த முடிவாகத் தெரியவில்லை - சமீபமாக சவுரவ் கங்குலி இதை பரிந்துரைக்க ஊடகங்களில் இது ஒரு நல்ல முடிவாக இருக்குமா என சர்ச்சிக்கப்பட்டது . சேவாக்கின் உதாரணத்தைக் கொண்டு ரோஹித்தும் ஒரு அதிரடி துவக்க வீரராக இருப்பார் என ஒரு கனவுக்கோட்டையை ரசிகர்கள் கட்டி எழுப்பினார்கள் . இதுவரையிலும் ரோஹித் எண் 5 / 6 இல் மட்டுமே ஆட முடியும் என கூறி வந்த இந்திய அணித்தலைமை இப்போது முழுக்க தன் முடிவை மாற்றி உள்ளது . இப்படி இந்திய கிரிக்கெட் அணித்தேர்வில் “ லாட்டரிச் சீட்டு விற்பனை ” தொடர்கி...

வாசக சாலை மீதான ஜெயமோகனின் விமர்சனமும் அதன் பிழையும் (2)

இலக்கிய வாசிப்பை நாம் இன்று ஒரு எலைட்டிஸ்டான பொழுதுபோக்காகி விட்டோம் . அப்போது அதற்கான எளிய கையேடுகள் , சுவாரஸ்யமான வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள் . இவர்கள் ஒரு போதும் முழுமூச்சாய் இலக்கியத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் நுனிப்புல் மேய்கிறவர்கள் என்பதால் இவர்களுக்கு “ அறிமுகம் ” முக்கியமாக இருக்கிறது . ஒரு நல்ல வாசகன் என்றுமே அறிமுகத்துக்காக ஒரு கூட்டத்துக்கு செல்ல மாட்டான் . அவன் தொடர்ந்து சவால்களை மட்டுமே நாடுவான் . விஷ்ணுபுரம் அமைப்பில் நான் இத்தகைய பெரும் கூட்டத்தையே கடந்த முறை அங்கு சென்றிருந்த போது பார்த்தேன் . 

வாசக சாலை மீதான ஜெயமோகனின் விமர்சனமும் அதன் பிழையும் (1)

ஜெயமோகனுக்கு தேவி ஶ்ரீராம் என்பவர் ( நிஜமாகவே அப்படி ஒருவர் இருக்கிறாரா ?) சமீபத்தில் எழுதிய கடிதத்தில் வாசக சாலையின் கூட்டங்களில் அர்த்தபூர்வமாய் எந்த உரையாடலும் நடப்பதில்லை ; அங்கு பேசப்படுபவை வெறும் உளறல்கள் , வம்பு பேச்சுகள் என சொல்கிறார் . இதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஜெயமோகன் வாசக சாலை போன்ற அமைப்பினரின் இலக்கிய கூட்டங்கள் “ கேலிக்கூத்து ”, “ பயனற்றவை ”, ஆகவே இவற்றை தனியே எதிர்க்க வேண்டியதில்லை , அவை தானே “ அழிந்து விடும் ” என சாபம் வேறு விடுகிறார் ( பார்க்க “ வாசக சாலை கூட்டங்கள் குறித்து ” கட்டுரை ). இந்த கூற்றின் பிழை வெளிப்படையானது - ஜெயமோகனுக்கு வாசகசாலையில் கலந்து கொண்டுள்ள அனுபவம் உண்டென்றால் அவருக்கு அங்கு பயனற்றதாய் தெரியும் பேச்சுக்கள் யாருடையவை எனக் கூறி அதை மறுக்கலாம் , விமர்சிக்கலாம் . ஆனால் செவிவழிக் கூற்றின் அடிப்படையில் அவர் இவ்வாறு ஒரு அமைப்பை முத்திரை குத்துவது அறமல்ல . 

ஐபேடுடன் புளூடூத் கீபோர்டுகளை பயன்படுத்துவது

இணைய சந்தையில் பத்துக்கும் மேற்பட்ட பலவிதமான புளூடூத் கீபோர்டுகள் கிடைக்கின்றன .  Folio வகை : இது ஒரு புத்தகத்தை போல திறந்து மூடுவது - ஒரு பகுதி ஐபேடுக்கான உறை என்றால் மற்றொன்று கீபோர்ட் . Logitech Slim Folio இதற்கு நல்ல உதாரணம் . லாஜிடெக்கின் கீபோர்ட் பிரசித்தமானது . ஆனால் இதை மடியில் வைத்து ஓரு லேப்டாப்பை போல தட்டச்ச முடியாது . ஆக , மாற்று மடிக்கணினியை பரிசீலித்து வந்த நான் folio கீபோர்ட் வாங்குவதைப் பற்றி எதையும் தீர்மானிக்க முடியாதிருந்தேன் . வேறென்னென்ன கீபோர்டுகள் உண்டு எனப் பார்த்தேன் .

ஐபேடை ஒரு மாற்று மணிக்கணினியாக பயன்படுத்துவது

விண்டோஸ் கணினிகள் மீது கசப்பு ஏற்பட்ட பின்னர் நான் ஆப்பிளுக்கு நகரலாம் என முடிவெடுத்தேன் . ( அடிக்கடி எழுதிக் கொண்டிருக்கும் போது கணினி மயக்கம் போட்டு விழுவது , எழுதிக் கொண்டிருந்த கோப்பை அப்படியே புதைத்து விடுவது என ஏகப்பட்ட பிரச்சனைகள் ; ஒரு கட்டத்தில் நான் கூகிள் docs இல் எழுதுவது மட்டுமே பாதுகாப்பு என நம்பும் இடத்துக்கு நகர்ந்திருந்தேன் .) என் நண்பர்களும் இதை பரிந்துரைத்தனர் -  நான் தினமும் 6-8 மணிநேரங்கள் அல்லது அதற்கு அதிகமாகக் கூட கணினியில் எழுத செலவிடுகிறேன் . ஒரு தரமான , நம்பகத்தன்மை கொண்ட கணினி இருப்பது என்னைப் போன்றோருக்கு அவசியம் . ஆனால் ஒரு சிக்கல் - ஆப்பிள் கணினிகளின் விலை எட்டா கிளை . நான் எகிறிக் குதித்து ஒரு ஆப்பிளைப் பறித்தால் என் சேமிப்பில் பாதி காலியாகிடும் .  நான் ஏதாவது குறுக்குவழி இருக்குமா என யோசித்த போது புளூடூத் கீபோர்டுகள் கண்ணில் பட்டன . 

Plop: Notes on Heidegger நூல் வெளியீடு - சில குறிப்புகள் (2)

முதல் நாள் வாசிப்பின் போது நான் நேஹாவிடம் ஒரு பொய் சொன்னேன் , “ இந்த குழுவில் இருப்போர் ஒரு விதியை பின்பற்ற வேண்டும் . ஒவ்வொரு வாசிப்பு முடிந்ததும் அன்றைக்கு வாசித்ததைப் பற்றி அடுத்த நாள் ஒரு சிறிய குறிப்பு எழுதிக் காட்ட வேண்டும் .” நேஹா அதை நிஜமாக எடுத்துக் கொண்டு அடுத்த நாள் எழுதிக் கொண்டு வந்தார் . அதை சற்று விரிவுபடுத்தி தரக் கேட்டேன் . அப்படித் தான் நேஹா இந்த நூலுக்காக எழுதிய முன்னுரை தோற்றம் கொண்டது . அவர் அதன் பிறகு மிகுந்த ஆர்வத்துடன் அந்த சொற்ப காலத்தில் மூன்று அத்தியாயங்கள் எழுதினார் .