Skip to main content

Posts

Showing posts from September, 2018

பிக்பாஸுக்கு வெளியே உள்ள தனிமை

பிக்பாஸிடம் வாக்குமூல அறையில் பேசிய ரித்விகா, இறுதி நாளுக்குப் பின், பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேறின பின் தன் (கழுத்தில் மாட்டின) மைக்கை மிகவும் மிஸ் பண்ணப் போவதாய் சொன்னார். “இந்த மைக் என்னோட குழந்தை; இதை பெட்ஷீட் போர்த்தி தூங்கவெல்லாம் வச்சிருக்கேன்” என்றார். திரும்பத் திரும்ப மைக்கையும் பிக்பாஸ் வீட்டையும் பற்றி மிகுந்த ஏக்கத்துடன் பேசிக் கொண்டு போனார். அதன் பிறகு ஐஸ்வர்யா, ஜனனி என ஒவ்வொருவர் உரையாடும் போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேனால் தாம் எவ்வளவு தனிமையாய் உணர்வோம் என விசனப்பட்டார்கள். ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மஹத், ஷாரிக், நித்யா போன்றோரும் திரும்ப வந்து சில மணிநேரம் பிக்பாஸ் வீட்டில் கழிக்கையில் (ஒன்று), வெளியே எந்தளவு தனிமையாய் இருந்து பிக்பாஸை மிஸ் பண்ணினோம் என சொல்கிறார்; (இரண்டு) “நாங்க பிக்பாஸ் வீட்டிலேயே இருக்கிறோம்; பிக்பாஸ் எங்களை வெளியேற்றாதீங்க” என கெஞ்சுகிறார்கள். எனக்கு இந்த பார்வையே ரொம்ப விசித்திரமாய் பட்டது.

செக்கச்சிவந்த வானம்

வேறெந்த மணிரத்னம் படமும், “கடலுக்குப்” பிறகு, எனக்கு இந்தளவுக்கு ஏமாற்றமளித்த்தில்லை. ஏன் என்பதை சுருக்கமாய் சொல்கிறேன். ஏன் என்பதை சொல்கிறேன்.

ஆங்கிலத்தில் சரளமாய் பேசுவது எப்படி?

வணக்கம் அபிலாஷ் , எப்படி இருக்கீங்க ? நான் தமிழ் வழியில் எனது பள்ளிப் படிப்பை முழுதும் படித்தேன். அதனாலோ என்னவோ நான் சிந்திப்பது முழுதும் தமிழிலேயே நடக்கிறது என்று நினைக்கிறேன். அவ்வாறு சிந்தித்து ஆங்கிலத்திற்கு convert செய்து பேசும்போது வார்த்தைகள் கோர்வையாக வருவதில்லை. இது ப்ரெசென்டஷன் செய்யும் போதும் , சில விஷயங்களை explain செய்யும்போதும் வார்த்தைகளை தேர்வு செயவதிலும் , இலக்கணப் படி பேசுவதிலும் மிகுந்த சிக்கலை ஏற்படுத்துகிறது. தவறான வார்த்தைகளை நான் உதிர்த்தபிறகு எனக்கே தெரிகிறது அது தவறான வார்த்தை அல்லது இலக்கணப் பிழை உள்ள சொற்றுடர் என்று.

யானை டாக்டர்

ஜெயமோகனின் தொண்ணூறுகள் வரையிலான கதைகள் அளவுக்கு அவரது கடந்த பத்தாண்டுகளின் கதைகள் என்னை ஈர்ப்பதில்லை. (காரணத்தை பின்னொரு தருணத்தில் எழுதுகிறேன்.) ஆனாலும் அவரது நடைக்காக, வியப்பூட்டும் சொற் தேர்வுக்காக, மிகுந்த மனஎழுச்சி தரும் அனுபவத்துக்காக கிடைக்கும் வாய்ப்பில் அவரது சமீபத்தைய எழுத்துக்களை எல்லாம் படித்திருக்கிறேன். ஜெயமோகனின் குருதித் துளி ஒன்றை எடுத்து பரிசோதித்தால் ரத்த அணுக்களுக்கு பதில் சொற்களும் கருத்துக்களும் கற்பனை அலைகளில் மேலெழுந்து தெரியும் என நினைத்துக் கொள்வேன். அப்படியான ஒருவரால் தான் இவ்வளவு காலமாய் தீவிரம் நீங்காமல், அதே உன்மத்த ஆவேசத்துடன் எழுத முடியும். இதற்கே அவர் முன் மண்டியிட்டு வணங்கலாம்.

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (2)

குட்டிரேவதியின் கவிதைகளில் பெண் இச்சையுடன் ஒருவித ஆண் நோக்கும் (male gaze) சட்டென தென்படும் . அதாவது , அவர் பெண்ணியவாதி என்றாலும் , தனக்கான வலுவான கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர் என்றாலும் , அவரையும் மீறி கவிதையில் பல சங்கதிகள் வரும் – அவர் நம்புவதற்கு நேர்மாறான சேதிகள் வரும் . உ . தா ., அவரது காதல் கவிதைகளில் வரும் ஆண் நோக்கு . ஒரே சமயம் ஒரு பெண்ணியவாதியும் பெண்ணியத்தை பொருட்படுத்தாத இச்சையில் தவிக்கும் ஒரு எளிய பெண்ணும் அவர் கவிதைக்குள் குரலெழுப்புவார்கள் (“ முலைகள் ” தொகுப்பு ). இப்படியாக ( ஒரே சமயம் ஆண் ஆதிக்கத்தை மறுக்கும் அதற்கு இணங்கிப் போகும் முரண் போக்குகளை வெளிப்படுத்தும் ) உடைந்த சிதறுண்ட பெண் மனத்தை நாம் மாலதி மைத்ரியின் கவிதைகளிலும் காணலாம் . இந்த கட்டற்ற பாய்ச்சல் இவ்விரு கவிகளின் மொழியின் ஒரு தனிச்சிறப்பு . மாலதி மைத்ரி பின்நவீனத்துவத்தில் இருந்து இந்த சிதறுண்ட போக்கை பெற்றிருக்கலாம் . தேவதேவனில் இருந்து இதை குட்டிரேவதி பெற்றிருக்கலாம் ( அல்லது தன்னியல்பாகவும் தோன்றியிருக்கலாம் ).

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (4)

“ நமக்கிடையே மூடும் கதவுகள் நமக்கிடையே வளரும் சுவர்கள் ” என்பதில் உள்ள மீள்கூறல் மனுஷ்யபுத்திரனின் வாசகர்களுக்கு வெகுவாய் பரிச்சயமானது . பாப்லோ நெருடாவை நினைவுபடுத்துவது . ( தமிழில் பெரும்பாலான நவீன கவிஞர்கள் இந்த மீள்கூறல் உத்தியை தவிர்க்கிறார்கள் ; ஆனால் வைரமுத்து , அப்துல் ரகுமான் , தமிழன்பன் போன்ற வானம்பாடிகள் இதை தாராளமாய் எடுத்தாண்டிருக்கிறார்கள் .) ஒரு பெரும் மக்கள் திரளை நோக்கி ஒருவன் உரையாற்றும் தொனியை இது மனுஷ்யபுத்திரன் கவிதைகளுக்கு தருகிறது என்கிறார் ஜெயமோகன் (“ கடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு ”) . இங்கே வெகு அந்தரங்கமான ஒரு துயர கவிதையில் தனிமையை இன்னும் உக்கிரமாக்கவும் மனுஷ்யபுத்திரன் இந்த உத்தியை பிரயோகிக்கிறார் .   அடுத்து அவரது சொற்தேர்வை பார்ப்போம் .

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (3)

“ இந்த நகரத்தில் நம் வழிகள் ஒவ்வொரு நாளும் வேறுவேறு இடங்களில் பிரிகின்றன நமக்கிடையே மூடும் கதவுகள் நமக்கிடையே வளரும் சுவர்கள் நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில் நமக்கு நாம் இல்லாமலாகும் அந்தியின் இருள்