ஜெயமோகனின் கடந்த ஒரு தசாப்த கதைகளில் எனக்குள்ள ஒரு சிறு உவப்பின்மை, உடன்பாடின்மை அல்லது ஒவ்வாமை அதில் வரும் நம்பகத்தன்மையற்ற மானுட அறவாதம். “அறம்” தொகுப்பிலுள்ள கதைகளைப் படிக்கையில் பரபரப்பாக உயிரோட்டமாக இருக்கும், ஆனால் ஒரு கட்டத்தில் அவை ஏதோ வெற்றுகிரகத்தில் நடப்பவை போலிருக்கும். “ஏழாம் உலகம்” இந்த வேற்றுகிரகத்தில் இருந்து கோபத்துடன் பூலோகத்துவாசிகளைப் பார்த்து புழுதி வாரித்தூற்றுவதைப் போலொரு நாவல். அதிலுள்ள அநீதிச் சித்தரிப்புகளில் ஒரு தேவையில்லாத மிகை உண்டு. ஆனால் நம் கண்முன்னால் அத்தகைய மனிதர்கள் மிக இயல்பாக வாழ்ந்து போவார்கள், அன்றாட வாழ்வில் உள்ளோரும் அவர்களை எந்த கூச்சமும் இன்றி கடந்துபோவார்கள். ஹேனா ஆரிண்ட் தன் கட்டுரை நூல் ஒன்றில் இதை “தீமையின் சகஜத்தன்மை” என்பார். அந்த சகஜத்தன்மையை அப்படியே எதிர்கொண்டு விவாதிப்பதே நம் புரையேறிய மனதை அறுத்து சீழை வெளியேற்றும், அதை மிகையாக்கி மற்றமையாக்கினால் அதில் இருந்து தப்பித்துவிடுவோம் என்பதே என் வருத்தம். நீதி, நியாயம், அறம் போன்ற சொல்லாடல்கள் நாம் கண்ணை இறுக மூடித் தப்பிப்பதற்கான ஒரு சுயமைதுனம் மட்டும் தான். மானுட செயல்பாடுகளில் த...