Skip to main content

Posts

Showing posts from October, 2023

கல்வி மீதான விமர்சனத்தை ஒரு சதிக்கோட்பாடாகப் பார்க்கும் அபத்தம்

கல்வி விமர்சனம் குறித்தான இவ்வார “நீயா நானா” நானாவைப் பார்த்தேன். அதில் கல்வி சார்பாகப் பேசிய தரப்பினரின் வாதம் மொத்தமாக பெரும் அபத்தமாக இருந்தது. முக்கியமாக, நிறைய பேர் தவற விட்ட ஒரு கோணம் - யாரும் இங்கு கல்வி வேண்டாம் எனக் கூறவில்லை. நவீன கல்வியில் நிறைய பிரச்சினைகள் உள்ளன, அவற்றைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே கோரிக்கை. உடனே இதை கல்வியை ஒழிக்க சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ளக் கூடாது. திருமணம் வேண்டாம் என்பவர்கள் திருமணத்துக்கோ குழந்தைப்பிறப்புக்கோ எதிராக சதி செய்பவர்கள் அல்ல. அவர்கள் நவீன திருமணத்தின் பிரச்சினைகளை கவனப்படுத்துவதற்காக அவ்வாறு சொல்கிறவர்கள். அதுவே கல்விக்கும் பொருந்தும். என்ன பிரச்சினை எனில் இவ்விமர்சனங்களை எதிர்கொள்ளவே கல்வி வீராச்சாமிகள் தயாராக இல்லை; ஏனென்றால் அவர்கள் கல்வி வீராச்சாமிகள் அல்ல, தனியார்மயமாக்கலை உள்ளுக்குள் நேசிக்கும், நவீன தாராளவாத சந்தையைப் பார்த்து விரைப்பாகும் வீராச்சாமிகள். இந்த விவாதம் கல்வி சந்தையை, தனியார் சந்தையை கேள்விக்குள்ளாக்கக் கூடும் என்பதை அவர்கள் உள்ளூர அறிவார்கள். இந்த சந்தை பல லட்சம் கோடிகள் மதிப்பிலானது. உடனே அவர்கள் இந்த மொத்த வ...

நியுசிலாந்த் எனும் சீரியல் கில்லர் அணி

நான் நியுசிலாந்தின் விசிறி அல்லன். ஆனால் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் 388 இலக்கை விரட்டிப் போய் 383ஐ எட்டிய அவர்கள் ஆடிய ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன். இந்த உலகக்கோப்பையின் சிறந்த போட்டி அதுதான். அதுவும் 32வது ஓவரில் டாம் லேதம் அவுட் ஆகாமல் ரச்சின்னுக்கு துணை கொடுத்து 40வது ஓவர் வரை நின்றிருந்தால் கடைசி 10 ஓவர்களில் 80 ரன்கள் தேவை எனும் நிலை வந்திருக்கும். தேவையில்லாமல் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு அவர் போனதில் ஆட்டத்தின் நிலை மாறியது. ஆனாலும் நீஷம் ஒரு மரண இன்னிங்ஸ் அடித்தாரே அதற்கு ஈடே இல்லை. அந்த காலத்து குளூசினரை நினைவுபடுத்தினார். நியுசிலாந்தின் மட்டையாட்ட வரிசையில் உள்ள ஒரெ திறமையாளர் ரச்சின் ரவீந்திரா. (அவர் நேற்று அபாரமான சதத்தை அடித்தார்.) மிச்ச வீரர்கள் மூன்று நான்கு ஷாட்களுக்கு மேல் ஆடத் தெரியாதவர்கள். ஆனால் அவர்களுடைய சிறப்பு தனிச்சிறப்பு எவ்வளவு பெரிய இலக்கையும் விரட்டி கூலாக மட்டையாடுவார்கள் ஆடுவார்கள் என்பது. நேற்றைய போட்டியிலும் பெர்குஸனுக்கு காயம் ஏற்படாமல், இரண்டு கேட்சுகளையும் ரச்சினும் மிச்சலும் விடாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவை 340க்குள் கட்டுப்படுத்தியிருப்பார...

டி காக்கின் ஓய்வு

  தென்னாப்ப்ரிக்காவின் குவிண்டன் டி காக் உலகின் தலைசிறந்த ஒருநாள், டி-20 மட்டையாளர்களில் ஒருவர். இந்த 2023 உலகக்கோப்பையில் அவர் தொடர்ச்சியாக மூன்று சதங்களை அளித்திருக்கிறார். மிகச்சிறந்த ஆட்டநிலையில் உள்ள அவர் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் நெருக்கடி, குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமையை காரணங்களாக அவர் குறிப்பிட்டாலும் உலக அளவில் நடக்கும் டி-20 தனியார் ஆட்டத்தொடர்களில் ஆடும் விருப்பமும், அதனால் கிடைக்கும் பெருஞ்செல்வமும் ஏற்படும் நேரமின்மையுமே இந்த துரித ஓய்வுக்கு நிஜக்காரணம் என்பது வெளிப்படையானது. ஏற்கனவே இந்த டி-20 கூட்டநெரிசலில் மே.இ அணியின் கணிசமான நட்சத்திர வீரர்கள் தம் நாட்டுக்காக ஆடுவதில்ல என முடிவெடுத்ததில் அந்த அணி இந்த உலகக்கோப்பையில் இடம்பெறாதபடி பலவீனமாகி விட்டது. இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய கிரிக்கெட் வாரியம் தன் வீரர்கள் அயல்நாட்டு டி20 தனியார் தொடர்களில் ஆடக்கூடாது என விதித்தது சரிதான் எனத் தோன்றுகிறது. இல்லையெனில் ரோஹித், கோலி, பும்ரா, பண்ட்களெல்லாம் எப்பவோ ஓய்வுபெற்றிருப்பார்கள்.

தமிழ் சமூகத்தின் இரண்டு அடிப்படையான தேவைகள்

"சாய் வித் சித்ராவில்" தேவிபாலாவின் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இளைஞனாக இருந்த போது அவரையும், பின்னர் அவரது பேட்டிகளையும் படித்திருக்கிறேன். தெளிவான மனிதர். ஆனால் 'உழைப்பாளி' என்று கூற முடியாது. கடுமையான இலக்கை வைத்து அதை நோக்கி அன்றாடம் முயல்வதையே நான் உழைப்பென்று சொல்வேன். பார்முலா படி தினமும் பக்கங்களாக எழுதித் தள்ளுவது அசல் உழைப்பல்ல. அது எந்திரத்தனமாக உடலையும் மேலோட்டமாக மூளையையும் பயன்படுத்தும் உழைப்பு மட்டுமே. உ.தா., ஒரு முறை ஆனந்த விகடன் நிறுவனர் அவரது பத்திரிகையில் தான் எழுதி வந்த தொடரில் சில ஆய்வுத் தகவல்களை சேர்க்கும்படி கோப்புகளை, பேப்பர் கட்டிங்குகளைத் தந்து சொன்னதாகக் குறிப்பிடுகிறார். ஒரு எழுத்தாளன் உண்மையில் இந்த ஆய்வுகளை சில மாதங்கள், ஆண்டுகளாவது செய்திருப்பான். நூறு பக்கங்களை எழுதும் முன்பு நீண்ட காலம் சிந்தித்துத் திட்டமிட்டு அத்திட்டத்தைத் திருத்தி, அதற்காக ஆய்வுகள் செய்து எழுதி முடித்து அதையும் பத்திருபது முறைகள் முழுமையாகத் திருத்தினாலே ஒரு நல்ல (வணிக / இலக்கிய) நாவல் உருவாகும். மேற்கில் சில வணிக எழுத்தாளர்கள் கூட இந்தளவுக்கு நேரத...

இந்தியா - இங்கிலாந்து உலகக்கோப்பை போட்டி - என் கணிப்பு

இந்தியா - இங்கிலாந்து போட்டி நடக்கும் ஏகனா மைதான ஆடுதளம் சற்று மெதுவானது, அதனாலே அதிகமாக சுழலக் கூடாது என எண்ணி ஆடுதள அமைப்பாளர்கள் அதில் சற்று புற்களை விட்டு வைத்து மேலே ஒரு நிலை மண்ணைப் போட்டு உருட்டியிருக்கிறார்கள். அதனாலே மிதவேக வீச்சாளர்களுக்கு தையலில் பட்டு அசையும் (seam movement). இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் இந்த ஆடுதளத்தில் வேகவீச்சாளர்கள் 7 போட்டிகளில் 52 விக்கெட்டுகளும், சுழலர்கள் 35 விக்கெட்டுகளும் எடுத்துள்ளது அதனால் தான். முதலில் மட்டையாடும் அணிகளின் சராசரி ஸ்கோர் 215. கடந்த முறை இங்கு ஆடிய போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மோசமாக பந்துவீசிய காரணத்தாலே முதலில் மட்டையாடிய தென்னாப்பிரிக்கா 311 அடித்தது; அடுத்து பந்துவீசிய தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 177க்கு சுருட்டியது. ஏனென்றால் அது 250 ஸ்கோருக்கான ஆடுதளம் தான். அதனாலே இன்றைய போட்டியில் இந்திய அணி மூன்று வேகவீச்சாளர்களை எடுத்திருக்கிறது. அது நல்ல முடிவுதான். என்னுடைய கணிப்பு இந்த ஆடுதளத்தில் இந்தியா 250-275 எடுத்தால் அது வெற்றி இலக்காக அமையும் என்பது. ஆனால் இந்திய மட்டையாளர்கள் இதுவரை 300ஐ இலக்காக வ...

இந்தியா - நியுசிலாந்து - யார் வெல்வார்கள்?

இந்தியாவுக்கே வாய்ப்பதிகம். நியுசிலாந்து பொதுவாக தம் பந்து வீச்சு, களத்தடுப்பின் ஆற்றலால் வெல்வார்கள். இந்த உலகக்கோப்பையில் முதன்முறையாக அதிரடி மட்டையாட்டத்தினால் பெரிய ஸ்கோர்களைக் குவித்து வென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய மட்டையாட்டத்தை மென்னியைப் பிடித்து நிறுத்தி ஓடினது போதும், வாக்கிங் போ என சொல்லத்தக்க பந்துவீச்சு இந்தியாவுக்கு உண்டு. எதிரணி 350 அடிக்க வேண்டிய ஆடுதளங்களில் கூட 300க்கு நிறுத்தியிருக்கிறார்கள் இந்திய வீச்சாளர்கள். குறிப்பாக மத்திய ஓவர்களில் (30-45). முதல் பத்து ஓவர்களில் கொஞ்சமே ஸ்விங் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி சில விக்கெட்டுகளை எடுக்க முடியும் அவர்களால். கேள்வியெல்லாம் 30-40 ரன்கள் குறைவாக உள்ள ஒரு இலக்கை வைத்து இந்தியாவின் மட்டையாட்டத்தைக் கட்டுப்படுத்தி வெல்ல நியுசிலாந்து வீச்சாளர்களால் இயலுமா என்பதே. இந்தியாவுக்கு இது நல்ல போட்டியாக இருக்கும். இருதரப்பு போட்டித்தொடர் போல தன்னம்பிக்கையுடன் கூலாக ஆடி வருகிறார்கள். எப்படியோ ஒரே நேரத்தில் மட்டையாளர்கள், பந்துவீச்சாளர்கள் நல்ல ஆட்டநிலைக்கு வந்துவிட்டார்கள். மகிழ்ச்சியாக ஆடுகிறார்கள் என்பது அவர்கள் காத்திருப...

கல்ட் சாமியார்களை நியாயப்படுத்தும் போக்கு சொல்வதென்ன?

கல்ட் சாமியார்களை நியாயப்படுத்தும் போக்கு சொல்வதென்ன ? கல்ட் மத அமைப்புகளின் வரலாற்று தேவையை சில தமிழ் அறிவுஜீவிகள் இவ்விதமாக நியாயப்படுத்தி வரையறுப்பார்கள் : ( முற்போக்கு ) அடித்தட்டு மக்களை நோக்கி இந்து மதத்தை எடுத்துச் செல்வது ; வெகுமக்கள் திரளில் பெண்களுக்கு இடமளித்து அதிகாரமளிப்பது ( வலதுசாரி ) முதலீட்டிய நகரமயமாக்கல் சமூகத்தில் கிறித்துவமும் , இஸ்லாமும் அந்நிய முதலீடுகளைப் பெற்று பெருமளவில் வளர்ந்துள்ளதுடன் மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன . இந்த இரு வாய்ப்புகளும் - நிறுவனமயமாகி நவீன இளைஞர் திரளை உள்ளிழுப்பது , நமது மரபான ஆன்மீக வடிவங்களான , உளவியல் கருவிகளால் யோகா , தியானம் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்து அவர்களுடைய உளவியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதும் இந்துமதத்தையும் பரப்பியல் மதங்களிடம் இருந்து பாதுகாத்து நிலைப்படுத்துவதும் - இந்துமதத்துக்கு கிடைக்காமல் போனது . அந்த வெற்றிடத்தில் தோன்றியவையே கல்ட் இந்து மத அமைப்புகளும் அவற்றின் குருமார்களும் . இந்த இரண்டு தரப்புகளும் கோடானு கோடிகளில் மலைமலையாக ...