Skip to main content

Posts

Showing posts from January, 2023

ஆணும் பெண்ணும் சமம், ஆனால் பெண்ணும் ஆணும் சமம் அல்ல

கல்லுமேலே நின்னுகினு கன்னிகுறை சொன்னாக்கா கல்லும் கிடுகிடென்னும் கல்லில் இருக்கும் கருநாகம் கண்ணீர்விடும் ! புத்துமேலே நின்னுகினு பொண்ணு குறை சொன்னாக்கா புத்தும் கிடுகிடென்னும் புத்தில் இருக்கும் புதர்நாகம் கண்ணீர்விடும் ! ( ஒப்பாரிப் பாடல் ) தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸில் பங்கேற்ற ஒருவரைக் குறித்து கடந்த ஆண்டு ஒரு பாலியல் குற்றச்சாட்டு வந்தது - அவர் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி ஒரு இளைஞரை வீட்டுக்கு அழைத்து வந்து அங்கு அவரை பலவந்தப்படுத்தியதுடன் , அவரை வெளியேற அனுமதிக்காமல் நிர்வாணப்படுத்தி வீட்டுக்குள்ளே பூட்டி வைத்ததாகவும் , மிகவும் கெஞ்சிய பிறகே நீண்ட நேரத்திற்குப் பின்னர் விட்டிருக்கிறார் என்று . இந்த குற்றத்தை வெளியே சொன்னால் தான் ஒரு ஹோமோ என அம்பலப்படுவோம் என்றெண்ணி அந்த பாதிக்கப்பட்டவர் போலிஸில் புகார் அளிக்கவில்லை , சமூகவலைதளம் ஒன்றில் மட்டும் வெளிப்படுத்தினார் . மேலும் தன்னை பலாத்காரம் பண்ணினவரின் போலீஸ் , அரசியல் தொடர்புகள் குறித்து அவருக்கு அச்சம் இருந்ததால் அவர் ...

நீயா நானா - அரசியல் சரிநிலையின் போலித்தனம்

"பெண்கள் என்று வரும்போது "நீயா நானா" அரசியல் சரிநிலையின் போலித்தனத்துக்குள் சிக்கிக் கொள்கிறது, வேலைக்குப் போகாமல் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் அந்த வாழ்க்கை சௌகர்யமாக இருப்பதாலே அதைச் செய்கிறார்கள், காலையில் எழுந்து பயணம் செய்து மாலை வரை அலுக்க அலுக்க வேலை செய்து வியர்த்து நசுங்கி வீட்டுக்கு வந்து அப்படா என டீவி பார்த்து படுப்பதற்கு வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வது தானே சௌகர்யம்? அதுவும் குறைவான நபர்கள் கொண்ட, வீட்டு வசதிப் பொருட்கள் கொண்ட ஒரு வீட்டில்? அதே நேரம் இவர்களுக்கு சொந்த செலவுக்கு பணமில்லையே, சுயசார்பு இல்லையே எனும் வருத்தமும் உண்டு. ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, தாம் எடுத்த முடிவின் சாதக பாதகங்களை அனுபவிப்பவர்கள். அது மட்டுமல்ல, இவர்கள் படித்துள்ள படிப்புக்கு 1-2 லட்சம் மாத வருமானம் வருமெனில் வீட்டில் உட்கார மாட்டார்கள். உ.தா இந்த வரிசையில் ஒரு மருத்துவர் கூட  வீட்டு மனைவியாக இருக்க மாட்டார். இருக்க வேண்டுமெனில் அது கோடீஸ்வர குடும்பமாக இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முடிவும் பொருளாதார அடிப்படையில், தத்தம் வசதிக்காக எடுக்கப்பட்டு என...

இரண்டு முகமூடிகள்

விக்ரம் இந்த பிக்பாஸ் பருவம் முழுக்க நிலைமாறாமல், சமநிலை தவறாமல், கொஞ்சம் கூட தன் இயல்புணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருந்தார். அது ஒரு போலித்தனம். அதாவது விக்ரம் இந்த ஷோவுக்காக இப்படிச் செய்தார் என்று நான் சொல்லவில்லை - அதுவே அவர் இயல்பு, அவர் வேலையிடங்களில், பொதுவிடங்களில் இப்படியே இருப்பார், அவர் மனதில் என்ன ஓடுகிறதென நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. ஒரு அரசியல்வாதிக்குத் தேவையான மிக முக்கியமான இயல்பு இந்த செயற்கைத்தனம். உள்ளுக்குள் எவ்வளவு எரிமலைகள் வெடித்தாலும் வெளியே எப்படி ரம்யா பாண்டியனும் அவரது குடும்பத்தினரும் எப்போது சிரித்த மேனிக்கு இருந்தார்களோ அப்படியே தான் விக்ரமும், இது இப்படியானவர்களின் அடிப்படை சுபாவம். இந்த கேமராக்கள் இல்லாவிடில் அந்தரங்கமான சூழல் கிடைத்தால் இவர்கள் வேறுவிதமாக இருப்பர். 24 மணிநேரமும் ஒருவரால் அப்படி இருக்க முடியுமா என்றால் முடியும் - ஆயுள் பூரா கூட இருக்க முடியும். அவ்விதத்தில் நாம் பார்த்தது விக்ரம் எனும் ஒரு மனிதனை அல்ல, ஒரு முகமூடியை. அஸீம் ஒரு சகிக்கத்தக்க ஆளுமை அல்ல. ஆனால் அவர் பொதுவெளியில் தன்னை வெளிப்படையாக மிகையாக  முன்வைப்பார். மே...

‘அதிர்ஷ்டக்காரன்’

நேற்று அனேகமாக இந்த நேரத்தில் எனக்கு ஒரு வினோதமான விபத்து நடந்தது .  நான் வீட்டுக்கு வந்து கழிப்பறைக்குப் போய்க் கொண்டிருந்தேன் . ஜீனோ என் பின்னாலே வந்தான் . என்னைத்   தாண்டி   கழிப்பறையை நோக்கி ஓடினான் . நான் அவனுடைய கழுத்துக்   கயிற்றைக் கழற்றியிருக்கவில்லை .   கழிப்பறைக்குள் எலி வந்து போன சந்தேகத்தில் குறுக்குமறுக்காகப் பாய்ந்து கொண்டிருந்த அவன் சட்டென வெளியே வந்தான் . என்ன நடக்கிறது என யோசித்துக்கொண்டு நான் அவனை நோக்கி வர அவனுடைய கயிற்றை நான் மிதித்துவிட்டேன் . நான் சுதாரிக்குமுன் அவன் கயிற்றை இழுத்துக்கொண்டு பின்னால்   ஓட நான் புரண்டு கீழே முன்னோக்கி   விழுந்தேன் . பொதுவாக இப்படி விழுகையில் நான் சரியாக லேண்ட் ஆகி விடுவேன் ( அடிக்கடி விழுந்து பழக்கம் ). ஆனால் இம்முறை நான் கழிப்பறையின் கதவருகே இருந்ததால் என் தலை நேராகப் போய் கதவில் மோதியது . நல்ல வலுவான கதவா அடியும் செமையான வலுவுடன் இருந்தது . எந்தளவுக்கு என்றால் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வீட்டு உரிமையாளருக்கே கே...

கொண்டாட்ட உலகில் ஒரு அந்நியன்

நான் சிறுவயதில் சில நாட்களில் வாரக்கணக்கில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும்போது மாடி ஜன்னல் வழி வெளியே பார்த்து யோசிப்பேன் . " வெளியே தெருக்களில் , வீடுகளில் , வாகனங்களில் ஒரு உலகம் , நான் இருப்பது இன்னொரு உலகில் . ஏன் இப்படி ?  இவர்கள் எவ்வளவு தாராளமாக சுதந்திரமாக கவலையின்றி இருக்கிறார்கள் ! நாம் மட்டும் ஏன் இங்கு கட்டுண்டு கிடக்கிறேன் ? விரும்பியதை சாப்பிடாமல் , விரும்பியதை செய்யாமல் , உலகில் இருந்து முழுக்க விலகி ஏன் இருக்கிறேன் ?" இப்போது சட்டத்தின் கொடூர பற்கள் இடையே சிக்கி நெறிபடும் போதும் எனக்கு அதே கேள்விகள் தாம் எழுகின்றன . நான் சந்திக்கும் பெரும்பாலானவர்களுக்கு ஒன்றைச் செய்யவோ ஒரு சிறிய தேர்வு , அதன் பாலான சுதந்திரம் இருக்கும் . கடன்பட்டவர்களுக்குக் கூட . ஆனால் சட்டத்தின் பாற்பட்டவர்களுக்கு , சிறைப்பட்டவர்களுக்கு அச்சுதந்திரம் முழுமையாக மறுக்கப்படுகிறது . அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் போல் ஆகிறார்கள் . எந்த பக்கம் போனாலும் சிக்கிக் கொள்வார்கள் . மதிலேறி ...