Skip to main content

Posts

Showing posts from January, 2022

டீல் செய்வது

எல்லா காலத்திலும் எல்லா வகையான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை அறிவேன். ஆனால் சில குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகை மனிதர்கள் அதிகமாகத் தோன்றுகிறார்கள். அந்தந்த நேரத்தின் அரசியல் சமூக பண்பாட்டு சூழலின் பிள்ளைகள் இவர்கள். ஒரு உதாரணத்துக்கு, இன்று மனிதர்களை “டீல்” செய்பவர்கள் அதிகமாகி உள்ளார்கள். இவர்கள் ஒருவித பலூன் மனிதர்கள். எனக்கு நன்கு பரிச்சயமான இலக்கிய உலகத்துக்கே வருகிறேன். தொண்ணூறுகள், ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை - அதாவது இணையதளங்கள், சமூவலைதளங்கள் பரவலாகும் வரை - எதிரும் புதிருமான இலக்கிய அரசியல் முகாம்கள் இங்கு அதிகமாக இருந்தன. இன்றும் தான் இருக்கின்றன. என்ன வித்தியாசம் என்றால் அன்று யாரை சந்தித்தாலும் விவாதம் நடக்கும், முரண்படுவார்கள், அது கைகலப்பில் கூட போய் முடியும். அல்லது மணிக்கணக்காய முரண்பட்டுவிட்டு நட்புடன் கைகுலுக்கி பிரிவார்கள். ஆனால் இந்த எதிர்ப்பும், ஆதரவும் கருத்தியல் ரீதியானதாக வெளிப்படையானதாக இருந்தது. இலக்கிய பண்பாட்டு வெளியானது ஒரு சதுரங்க பலகையில் அணிவகுக்கப்பட்ட காய்களைப் போன்றதாக இருந்தது. யார் எங்கும் நிற்கிறார்கள் என்பது எல்லாருக்கும் வெளிப்படையாக இ...

இந்திய அணி - அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலை

தென்னாப்பிரிக்க தொடர் சுபிட்சமாக முடிந்திருக்கிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்றும், ஒருநாள் தொடரை 3-0 என்றும் இழந்திருக்கிறோம். இதற்கு யார் பொறுப்பு? வீரர்களை பழிசொல்லவே நமக்கு முதலில் நாவெழும். ஆனால் நிஜமான காரணம் இந்திய கிரிக்கெட் அணி இத்தொடருக்கு முழுமையாக தயாராக இருக்கவில்லை, அரைமனதுடனே, நிறைய குழப்பங்கள், கவனச்சிதறல்களுடன் ஆடினார்கள் என்பது. ஆனால் இன்னொரு பக்கம் தென்னாப்பிரிக்காவோ ஒரே அணியாக ஆடினார்கள். இந்தியாவுக்கு இருந்த முக்கியமான பிரச்சனை வேறெப்போதும் இல்லாத அளவுக்கு அணித்தலைமை குறித்த நிச்சயமின்மைகள் இம்முறை இருந்தது என்பது. கடந்த டி20 உலகக்கோப்பையின் போதே இந்த நிச்சயமின்மை ஆரம்பித்திருந்தது.  உலகக்கோப்பைக்கு முன்பே கோலி ராஜினாமா செய்வதாக அறிவித்தது வீரர்களின் ஒற்றுமையை, ஈடுபாட்டை குலைத்தது. ஆளாளுக்கு ஒரு திசையில் ஆடினார்கள். அதன் பிறகு ரோஹித்தை டி20 தலைவராக அறிவித்து அணி ஓரளவுக்கு நிலைப்பெற்று அவருக்குக் கீழே நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் தீவிரமாக ஆடினார்கள். கோலி ஓய்வுக்கு போனதால் முதல் டெஸ்டை ரஹானேயின் கீழ் அடுத்து ஆடினோம். வெல்ல வேண்டிய போட்டியை டிரா செய்தோம். அதற்கு அடு...

ஆண்-பெண் உறவில் சமத்துவத்தின் பிரச்சனை

தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவை ஒட்டி இருவரைப் பற்றியும் வெளிவந்த தகவல்கள் நமது சமூக சூழலில் திருமண உறவுக்குள் அதிகார சமநிலையை தக்க வைத்து, குடும்பம் நிலைபெற செய்ய இரண்டு விசயங்கள் அவசியம் என்பதைக் காட்டின: 1. சாதிய அதிகாரம்: நீங்கள் பணம், சமூக அந்தஸ்தைப் பொறுத்து ஒரே தட்டில் இருந்தாலும் இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் எனில் பிரச்சனை கதவைத் கட்டிக்கொண்டு வரும். தனுஷுக்குப் பதில் ஐஸ்வர்யா தன் சமூகத்தை சேர்ந்த ஒருவரை மணமுடித்திருந்தால் மாமனார், மாமியாரை பொருட்படுத்தாமல், கணவனின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருப்பாரா? மாட்டார். இயல்பாகவே “அத்தை, மாமா” என்று ஒட்டிக் கொண்டிருப்பார். அவரே அதை செய்ய விரும்பாவிடினும் அவரது குடும்பமும் உறவுகளும் அப்படி மரியாதை கொடுக்கும்படி அழுத்தம் செலுத்தி இருப்பார்கள். 2. இந்த கருத்து சற்று பிற்போக்கானதாகத் தெரியும். ஆனால் இதுவே எதார்த்தம் - ஒவ்வொரு நிலப்பகுதியை அல்லது சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கும் எதிர்பாலினத்தை எதிர்கொள்வதில் ஒரு குறிப்பிட்ட இயல்பு உண்டு. உ.தா., குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு - அவர்கள் எச்சமூகத்த...

உருட்டின் உளவியல்

நாம் இன்று அதிகம் பயன்படுத்தும் சொல் “உருட்டு” என்றும், அநேகமாக எல்லாவித சந்தர்பங்களுக்கும் மரமண்டைத்தனமாக அச்சொல்லை நாம் பயன்படுத்துகிறோம் என அண்மையில் மனுஷ் ஒரு கவிதையில் கூறியிருந்தார். கடந்த சில ஆண்டுகளில் நிச்சயமாக இச்சொல்லின் பயன்பாடு அதிகரித்துள்ளது உண்மையே. ஆனால் அதற்கான தேவையும் ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களின் வருகை இன்று எல்லா விசயங்களை நோக்கியும் கருத்து கூறும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கி இருக்கிறது. பிரபலங்கள், அதிகாரவர்க்கத்தினர் மனம் திறந்து பேசினால் அது உடனே சர்ச்சையாகிறது. ஏனென்றால் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் அதை கிழித்து தொங்க போட்டு விடுகிறார்கள். இது ஒரு செயற்கையான சூழலை உருவாக்கி இருக்கிறது. எல்லாரையும் மனதுக்குப் பட்டதை விட யாரும் புண்படாத வகையான கருத்துக்களையே சொல்லுகிறார்கள். அப்படி ஒரு கருத்து எங்கும் இல்லை என்பதால் நேரடியான பதில்களை தவிர்த்து “உருட்டுகிறார்கள்”. உருட்டுதல் என்பது ஒரு பொருள் “சம்மந்தமில்லாமல் பொத்தாம்பொதுவாக பேசுவது.” நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், ஊடக நெறியாளர்கள் என எல்லாருமே உருட்டிக் கொண்டே போகிறார்கள். உருட்டுவதன் மற்றொரு ...

டி. தருமராஜும் “மூன்றாம் பிறை” ஶ்ரீதேவிகளும்

வரலாற்றை எழுதுவது குறித்த பார்வையில் கடந்த 50-60 ஆண்டுகளுக்கு மேலாக உலக அரங்கில் முக்கியமான ஒரு மாற்றம் வந்துள்ளது. வெறும் தரவுகளை தமக்கேற்றவாறு தேர்ந்தெடுத்து எழுதப்பட்டதே நமது வரலாறு, அது மட்டும் நிஜவரலாறு அல்ல. வரலாறானது தினம் தினம் மக்கள் மத்தியில் நிகழ்ந்து மலர்ந்துமாறு இருக்கிறது. வரலாற்றை எழுதுவதில் நாட்டார் வழக்குகள், தொல்கதைகள், மக்களின் நினைவுக் குறிப்புகளுக்கு, நமது கற்பனைக்கு ஒரு முக்கியமான இடமிருக்கலாம் என்று இன்று கருதப்படுகிறது. இந்த கோணத்தில் இருந்து நுண்கதையாடல்களின் கண்டடைதலாக வரலாறு மாறி வருகிறது. ஒரு புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையில் வரலாறு தோன்ற முடியும், ஏனென்றால் புனைவுக்கும் அபுனைவுக்குமான இடைவெளி போலியானது, ஏனென்றால் தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான தூரம் வெறும் தோற்றப்பிழை என்கிற இடத்துக்கு பின்நவீன சிந்தனை நம்மை கொண்டு வந்துள்ளது.  Conjecture எனப்படும் அனுமானத்துக்கு நமது வரலாற்றை கட்டமைப்பதில் ஒரு முக்கியம் இடமுண்டு. இதை தமிழில் அன்றே மிகச்சிறப்பாக பயன்படுத்தி முக்கியமான பனுவல்களை உருவாக்கியவர் அயோத்திதாசர்.  ஏகப்பட்ட தரவுகளை போகிற போக்கில் மேற்...

கோலியின் அதிர்ச்சி முடிவும் அடுத்தது யாரெனும் கேள்வியும்

விராத் கோலி ஒரு மகத்தான டெஸ்ட் தலைவர். டெஸ்ட் அணித்தலைமையில் இருந்து விலகுவதாக அவர் எடுத்திருக்கிற இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது! ஒரு விதத்தில் இதற்கு ஜெய் ஷா உள்ளிட்ட மோசமான நிர்வாகிகள் தாம் பொறுப்பேற்க வேண்டும். கோலி தன் முடிவை மாற்றிக் கொள்வார் என நான் நம்பவில்லை ஆகையால் அடுத்த தலைவர் யாரென தேர்வாளர்கள் சிந்திக்க வேண்டும். ரோஹித் அடிக்கடி காயம்பெற்று காணாமல் போய் விடுவதால் அவரை அனைத்து வடிவங்களுக்கும் தலைவராக்குவது சமயோஜிதமான முடிவு அல்ல.  அதே நேரம் கெ.எல் ராகுலின் அணித்தலைமையும் என்க்குப் பிடிக்கவில்லை. ராகுல் இன்ஸமாம் உல் ஹக்கைப் போன்றவர். சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் இயல்பான தலைமைப் பண்போ, நடைமுறை புத்திசாலித்தனமோ அனைவரிடமும் நன்றாகப் பேசி உற்சாகப்படுத்தும் இயல்பு கொண்டவரோ அல்ல. அவர் திட்டமிடுதலில் மக்கு என்பதை ஐ.பி.எல்லில் கண்டிருக்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவர் தலைமை ஏற்ற போது அவருக்கு அணியை தன் சொல்லுக்கு ஏற்ப வழிநடத்தும் ஆளுமையோ சந்தர்பத்துக்கு ஏற்ப யுக்தி வகுக்கும் தந்திரமோ இல்லை எனக் கண்டோம். அவருடைய தலைமை ஸ்டைல் இங்கிலாந்தின் ரூட்...

காலம் இல்லாமல் ஒரு கதையை எழுத முடியுமா?

இதென்ன கேள்வி என உங்களுக்குத் தோன்றலாம் . ஆனால் கதையின் ஆன்மா காலத்தினுள் புதைந்திருக்கிறது என்று அரிஸ்டாட்டில் துவங்கி இன்றைய விமர்சகர்கள் பலர் கருதுகிறார்கள் . தமிழ் நாவல்கள் , சிறுகதைகளின் வடிவத்தை புரிந்து கொள்ளவும் இந்த கேள்வி மிகவும் உதவும் . நாம் காலத்தைப் பற்றி பேசும் முன்பு காரண - விளைவு தர்க்கம் நம் வாழ்வில் எப்படி செயல்படுகிறது எனப் பார்ப்போம் .   பேருந்தில் நின்று கொண்டு வரும் போது பக்கத்தில் நிற்பவர் என் காலை மிதித்து விடுகிறார் . நான் கோபமாக திரும்பிப் பார்க்கும் முன்பே அவர் “ சாரி சார் , தெரியாம மிதிச்சிட்டேன் ” என்கிறார் . “ பரவயில்லை ”, நான் அமைதியாகிறேன் . ஆனால் இதுவே அவர் கண்டும் காணாதது போல நின்றால் என் கோபம் அதிகமாகிக் கொண்டே செல்லும் . ஏன் ? அந்த மன்னிப்பில் என்ன இருக்கிறது ? அந்த மன்னிப்பில் காரண - விளைவை ஏற்கும் கோரல் இருக்கிறது . அது நமக்கு தேவையாக இருக்கிறது . அது இல்லாவிடில் எனக்கு ஏன் இந்த வேதனை ஏற்பட வேண்டும் எனும் கேள்வி வருகிறது . அவர் பொறுப்பேற்காவிடில் நான் அ...