5. “These give rise to those, So these are called conditions. As long as those do not come from these, why are these non-conditions?” “ இவை அவற்றை தோற்றுவிக்கின்றன , அதனால் இவை நிலைகளாய் அறியப்படுகின்றன [ என்கிறார்கள் ]. அவை இவற்றில் இருந்து அவை தோன்றாத வரையில் , இவை ஏன் அ - நிலைகள் அல்ல ?” இந்த ஸ்லோகம் நிச்சயம் குழப்பமானதாகத் தெரியும் படி எழுதப்பட்டிருக்கிறது . இருந்தாலும் இது ஒரு சுவாரஸ்யமான வாதம் , ஒருவித தலைகீழ் பின்னோக்கு வாதம் . முதல் இரு வரிகள் நாகார்ஜுனரின் எதிரணியினர் எழுப்புவன - “ ஒரு விசயத்தை அதன் நிலைகள் தோற்றுவிக்கின்றன , அதனாலே அவை நிலைகள் ” என அவர்கள் சொல்லுகிறார்கள் . ஆமாம் , அதுக்கென்ன என நீங்கள் நினைக்கலாம் . ஆனால் உற்று நோக்கினாலே இதிலுள்ள விஷமத்தனம் புரியும் - ஒன்று மற்றொன்றின் நிலையாக இருப்பதானாலே அது தன்னளவில் சாராம்சமான ‘ நிலை ’ ஆவதில்லை . ஹைடெக்கர் இருத்தல் (being) பற்றி சொல்லும் போது சுத்தியலை உதாரணமாகக் காட்டுகிறார் . சுத்தியலால் ஒருவன் ஆணியை சுவற்றில் அடிக்கிறான் . அந்த தருணத்தில்...