Skip to main content

“தான் அழிதல்” எனும் சூனியம்





இதன் முடிவில் வரும் ஹபீபின் பதிவு முக்கியமானது. அதற்கு முன் நான் சொல்வதை ஒருமுறை படித்து விடுங்கள்.


ராதகிருஷ்ணா ஹபீபிடம் எழுப்பும் கேள்வியை இப்படி புரிந்து கொள்ளலாம்: வைதீகம், குறிப்பாக அத்வைதம், சொல்லும் பிரம்மத்துக்கும் நாகார்ஜுனரின் சூனியத்துக்கும் என்ன வித்தியாசம்? அல்லது இரண்டுமே ஒன்றா


அத்வைதத்தை எதிர்கொள்ளும் பலருக்கும் இக்கேள்வி எழும். ஒரு உதாரணத்துக்கு, “பகவத் கீதைஎனும் அந்த அற்புதமான (அதே நேரம் பிற்போக்கான) தத்துவ பிரதியில் கிருஷ்ணர் தான் யாரென அர்ஜுனனுக்கு விளக்குகிறார். நான் இதுதான், இவர் தான் என்று அல்லாமல் அவர் பின்னோக்குவாத அல்லது மறுப்புவாத முறைமையை பயன்படுத்துகிறார். நான் வான் அல்ல, நான் உலகம் அல்ல, நான் மரம் அல்ல, நான் கொடி அல்ல என வரிசையாக இது செல்லும். எந்த இடத்திலும் தான் இதுதான் என கிருஷ்ணர் சொல்ல மாட்டார். இறுதியில் அனைத்தும் மறுக்கப்பட்ட ஒரு இடத்தில் எது தோன்றுகிறதோ அதுவே தான் என்கிறார். வைதீக சிந்தனையில் இந்த பாணியிலான அறிதலைநேதி நேதிஎன்கிறார்கள். வேள்வித்தீயில் ஒவ்வொன்றாக போடும் போது இவ்வாறு இதை காட்சிப்படுத்த முயல்கிறார்கள். இந்த மறுப்புவாதம் வாழ்தலுக்கு எதிராக, துறவாக போய் விடக் கூடாது எனும் அக்கறை அத்வைதிகளுக்கு உண்டு. அதனாலேகீதையில்தன்னை நேரடியாக மறுக்காமல் செயலில் தன்னை இழப்பதை கிருஷ்ணன் பரிந்துரைக்கிறார். போர் உன் வேலையென்றால் சரி-தவறு குறித்த பாகுபாடுகள், இருமைகள், மதிப்பீடுகள் இன்றி தன்னை அதில் கரைத்துக் கொண்டு செயல்படு என்கிறார். இது அறம், நீதி குறித்த கேள்விகளை எழுப்பும் என்பதால் கிருஷ்ணர் அதற்கும் ஒரு தீர்வளிக்கிறார். அறம் என்பது ஒரு சமூகத்துக்கு ஒரு கட்டத்தில் அவசியப்படும் நீதிக்கு ஏற்ப, ஒரு தனிமனிதன் தனக்கு சமூகத்தால் அளிக்கப்பட்டுள்ள கடமைக்கு ஏற்ப, ஒரு சந்தர்பத்தின் அவசியத்துக்கு ஏற்ப முடிவெடுப்பது, ஆனால் அதை விட முக்கியமாய், முடிவு செய்து செயலை ஆரம்பித்த பின் அங்கு செயலே அறம் என்கிறார்


இங்கிருந்து நாம் இவர்கள் சொல்லும் பிரம்மம் என்பதை புரிந்து கொள்ள முயல வேண்டும். அத்வைதம் பிரம்மத்தை ஒரு முதல்முழு இருப்பாக கருதினாலும் அதே வேளை மனிதனால் பிரம்மத்தை தன் செயல்கள் வழி அனுபவித்து வெளிப்படுத்த முடியும் என்கிறது. இதனாலே கிருஷ்ணர் மனிதராகவும் கடவுளாகவும் ஒரே சமயம் இருக்கிறார். இந்துக் கடவுளர் குறித்த பல கதைகளிலும் (“திருவிளையாடல்”) இந்த இரண்டறக் கலந்த கடவுள் நிலையைக் காண முடியும். அதில் ஒருவர் தன் மனித நிலையையும் கடவுள் நிலையையும் ஒரே சமயம் கடக்கும் போது அவர் கடவுளாகிறார். அப்படி கடக்கும் பொருட்டே இறைவனின் இருப்பானது ஒரு விளையாட்டாகிறது. சிவபெருமான், கிருஷ்ணர் இருவருக்கும் இந்த விளையாட்டு எனும் செயல்முறை அளிக்கப்பட்டு அவர்களை அத்வைதிகள் மறுவரை பண்ணினார்கள் என நினைக்கிறேன். இங்கிருந்து மீண்டும் இறைநிலை என்றால், முக்தி என்றால் என்னவென விசாரித்தால் பதில் கிடைக்கும் - தங்குதடையற்ற வாழ்தல் மூலம் இருமையைக் கடத்தல், இருமையற்ற நிலையே அனுபூதியாக, முக்தியாக அத்வைதத்தில் கருதப்படுகிறது


நாகார்ஜுனரை வாசிப்போர் இதன் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். இது ஒருசமரசப் புள்ளிமட்டுமே என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது ஏன் சமரசம் ஆகிறது? இருமை - இருமையின்மை என்பதே ஒரு இருமை தானே. அதுவே ஒரு சாராம்சப்படுத்தல் தானே. அதுவே ஒரு லட்சியவாதம் தானே.


நேற்று நானும் நண்பர்களும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் Limits of Knowledge எனும் நூலைப் படித்துக் கொண்டிருந்தோம். இந்நூலானது கிருஷ்ணமூர்த்திக்கும் டேவிட் புரோம் எனும் விஞ்ஞானிக்கும் இடையிலான உரையாடலின் பதிவு. இதில் ஜெ.கெ இந்த உலகமானது, பிரபஞ்சமானது அதனளவில் ஒரு பூரணமான ஒழுங்கை, இருமையற்ற ஒரு ஒழுக்கை கொண்டது, மனித சுயத்தின் இடையூறு இதில் ஒரு ஒழுங்கின்மையை, குழப்பத்தை, சிக்கலை உண்டு பண்ணுகிறது. இது ஆத்திரத்துக்கு, ஏமாற்றங்கள், பதற்றத்துக்கு வழிவகுக்கிறது. நாம் மதம் அளிக்கிற பயிற்சிகளை, முறைமைகளை பின்பற்றி ஒரு ஒழுங்கைக் கொண்டு வரும் போது அங்கு மேலும் ஒழுங்கின்மை தோன்றி சுயத்தின் இருப்பு வலுப்படுகிறது என்கிறது. இதுவும் அத்வைத நோக்கே. இந்த நோக்கை ஒருவித கடப்புநிலைவாதம் (transcendentalism) எனலாம். ஆசிய தத்துவத்தின் தாக்கம் பெற்ற ஜெர்மானிய (continental) தத்துவ மரபிலும், ஆதி கிரேக்க மரபிலும் இதை நாம் அதிகமாகப் பார்க்கிறோம் (நீட்சே, சாக்ரடீஸ், காண்ட்). சமகால பின்நவீன சிந்தனையிலும் இது ஓரளவுக்கு தாக்கம் செலுத்துகிறது

இந்த கடப்புவாதத்தின் சிக்கல் என்னவென்றால் அது ஒரு லட்சியவாதத்துக்கு, கருத்துமுதல்வாதத்துக்கு இட்டு செல்கிறது. என்னதான்கீதையில்கிருஷ்ணர் தன்னை இழந்து, வாழ்தல் ஈடுபடக் கூறினாலும் அந்த அதி உன்னத நிலை ஒரு கருத்தாகவே நிலைப்பெறுகிறது. அந்த நிலை ஒரு கடவுளாகி ஒரு புதிய கட்டமைப்பை தோற்றுவிக்கிறது. நுட்பமாக நோக்கினால் இது ஆபத்தானது எனப் புரியும். ஏனென்றால் தன்னை இழக்கிற இடத்தில்தன்னை இழந்த ஒரு பிரக்ஞைதோன்றி விடுகிறது. இதை பிரம்மமாக்குகிறார்கள். இது ஒரு சாராம்சமானது என்பதால் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது


நாகார்ஜுனர் இங்கு தான் முக்கியமாகிறார் - “மூலமத்யமகாகாரிகையில்ஒரு முக்கியமான அத்தியாயம்ததாகதர் [புத்தர்] குறித்த விசாரணை”. இதில் ததாதகர் எனும் சூனிய நிலையே (அதாவது வைதீகத்தின் முக்தி நிலை, பிரம்மம்) சூனியமானது தான் என நாகார்ஜுனர் நிறுவுகிறார். அதாவது புத்தரையே மறுக்கிறார். எந்த இடத்திலும் நாம் ஒரு நிலையை உன்னதமாக்கி, சாராம்சமாக்கி, தெய்வமாக்கி விடக் கூடாது (reification) என்று நாகார்ஜுனர் மிகுந்த அக்கறை காட்டுகிறார். புத்தரையே சாராம்சமற்ற, சார்புநிலைகளால் தோன்றுகிற ஒரு இருப்பு என அவர் காட்டுகிறார்


அத்வைதத்தினால் இப்படியான முழுமையான சாராம்ச மறுப்புக்கு செல்ல முடியாது, [மகாயான] பௌத்ததால் முடியும். அதுவே நாகார்ஜுனரின் சிறப்பு.


இனி ராதாகிருஷ்ணா மற்றும் ஹபீபின் வாதங்களைப் பாருங்கள்!



“THE KNOWLEDGE OF "I" IS SOUL


The ultimate knowledge of all Vedas and scriptures is, "I am the Soul". When the ego is destroyed, what remains? It is the Soul. It is Vacuum. Who will know the Vacuum? The understanding of the Vacuum is Soul. "I”, Soul and the Universe are all one and the same. This is what all scriptures say as a final statement.


வணக்கம், ஹபீப். மேலுள்ள மேற்கோளில், ரமண மஹரிஷி, Vacuum என்று சொல்கிறார். இது நாகார்ஜுனர் சொல்லியுள்ள சூன்யம் எனக் கொள்ளலாமா? நன்றி.”


Radhakrishna


நாகார்ஜுனர் எதிர்க்கும் சூன்யம் என்று சொல்லலாம். ஏனென்றால், நான் வாசித்தவரை நாகர்ஜுனர் வைதீகத்தின் த்வைத, அத்வைத தத்துவத்தை எதிர்த்த பார்வை தான் இருந்திருக்கிறது. அதைத்தான் இந்திய தத்துவம் பிரம்மம் என்று சொல்கிறது. அந்நிலையை யோகத்தின் மூலம் அடையமுடியும் என்பது கருத்து. ரமண மகரிஷி ஓர் ஞானயோகி. நான் ரமண மகரிஷி அவர்கள் சொன்ன கருத்துக்கள் அதிகம் படித்ததில்லை. அவர் ஞானயோகத்தின் அக்ரம முக்தி(an unexpected happening) நிலையடைந்ததாக படித்திருக்கிறேன். மரண நிலை அனுபவம் பெற்றிருக்கிறார். அப்போது அவருக்குள் ஆவேசமான மின்சாரம் போன்றதொரு ஆற்றலை உணர்ந்ததாகவும் தானே அதுவாக இருப்பதாக உணர்ந்திருக்கிறார். அவருடைய உபதேசங்கள் அத்வைத்தை மையமாக கொண்டது. WHO AM I? என்ற கேள்வி தான் அவரின் சாரமான உபதேசம். மேலும் நீங்கள் அனுப்பிய ஆங்கில மேற்கோளை அத்வைத கருத்தின் பொருளோடு தான் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த vacuum concept நவீன அறிவியலிலும் உள்ளது. Vacuum energy, Zero point energy என்று சொல்வார்கள். இதனை சாராம்சப்படுத்துவதால் ஒன்றிமில்லாதலிருந்து உருவானது என்ற கருத்து உருவாகிறது. இதைத்தான் நாகர்ஜுனர் எதிர்க்கிறார். அவர் முக்கியமாக எதிர்ப்பது essentialityயே. பொருளோடு தொடர்புடைய Substantiality யும் நாகர்ஜுனரின் "சூன்யதா" மறுக்கிறது. அடிப்படை துகள் (fundamental Particle) தான் காரணம் என்ற கருத்து கூட அர்த்தமற்று போகிறது. எதுவானாலும் அது இயல்பாகவே இருக்கிறது. மேலும் அவை சொல்லப்பட்ட நான்கு நிலைகளில் செயல்படுகிறது என்பது கருத்து. "ஸ்வபவ" என்று சொல்கிறார். அதேபோல், விவாதம், கருத்துப்பரிமாற்றம் என்று வரும்போது சூன்யம் என்ற கருத்தாக்கத்தை ஆன்மீக ரீதியாக அணுகும்போது ஏற்படும் புரிதலும், மெய்யியல் ரீதியாக ஏற்படும் புரிதலும் வெவ்வேறானவை.


நகர்ஜுனரின் வரிகளைப் பகிர்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்


All is possible when emptiness is possible.

Nothing is possible when emptiness is impossible.


எனக்கும் புரியவில்லை.”


- ஹபீப் ஹாதி

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...