இன்று மாலை சிங்கப்பூர் தங்க மீன்கள் பதிப்பகம் சார்பாக நடந்த வாசக சந்திப்பில் மனுஷ்யபுத்திரன் அருமையாகப் பேசினார் - கவிதையின் மொழி , வடிவம் , கவிதையை எடிட் செய்வது , தேய்வழக்குகளை கவிதையில் புதுமையாக , படைப்பூக்கத்துடன் பயன்படுத்துவது என தீவிரமான ஒரு இலக்கிய கலந்துரையாடலாக அது அமைந்தது . முன்பு சென்னையில் இருக்கும் போது மாலைவேளைகளில் நான் அடிக்கடி மனுஷின் வீட்டுக்கு சென்று கவிதையின் வடிவம் , அவர் அப்போது படித்துக்கொண்டிருக்கிற புத்தகங்கள் குறித்தெல்லாம் உக்கிரமாக விவாதிப்பேன் . என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காகவும் , பின்னர் “ இன்மை ” இணைய இதழை நடத்திய போதும் அவரை பேட்டி எடுத்தேன் . அதெல்லாம் நினைவுக்கு வந்தது இன்று . ஆச்சரியமாக , பெரும்பாலான கேள்விகள் முதிர்ச்சியாக , கூர்மையாக இருந்தது , மரபுக்கவிதைக்கு இன்றுள்ள இடமென்ன போன்றவற்றைத் தவிர . மனுஷ் இன்று பேசியதில் ஒரு வாக்கியம் என் நெஞ்சில் தங்கி விட்டது - ஏன் கவிதை தீவிரமான கருத்துநிலையுடன் , தத்துவப் பார்வையுடன் இருக்கத் தான் வேண்டுமா எனும் கேள்விக்கு ...