Skip to main content

இந்த கர்நாடக ‘பாசிச’ சிங்கங்களை ஏன் துரத்தாமல் விட்டு வைத்திருக்கிறோம்?




பேட்டியாளர்: சாத்தான்குளம் படுகொலைகளைப் பற்றி ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியாக என்ன நினைக்கிறீர்கள்?


சிங்கம்அண்ணாமலை: அது வருத்தத்துக்கு உரியது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் டாக்டர்களும் காவலர்களுமே மிக அதிகமாய் - 18 மணிநேரங்கள் - வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இப்படியான கொலைகளுக்கு வழிவகுக்கிறது.


நம் கேள்வி: சரி, ஏன் இந்த டாக்டர்கள் தம்மிடம் வரும் நோயாளிகளை செவியலருடன் சேர்ந்து தப்பான மருந்துகளை அளித்தோ அறுவைசிகிச்சை கத்தியால் கழுத்தை அறுத்தோ கொல்வதில்லை? அவர்களும் தானே கடும் நெருக்கடியில் 18 மணிநேரம் வேலை செய்கிறார்கள்

எத்தனையோ பி.பி. ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் கடுமையான அழுத்தத்தில் 18 மணிநேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் ஏன் கொல்லுவதில்லை?

எத்தனையே குடும்பப் பெண்கள் விடிகாலையில் எழுந்து சமைத்து வைத்து, டப்பா கட்டி, குளித்து, தயாராகி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி, அவசரமாய் ஓடி பேருந்தைப் பிடித்து அங்கு 8 மணிநேரம், பயணத்தில் 2 மணிநேரம், மாலையில் திரும்பவும் சமையல், வீட்டை ஒழித்து கட்டுவது, பாத்திரம் தேய்ப்பது என மேலும் நான்கு மணிநேரமாவது வேலை செய்கிறார்கள். கணக்குப் போட்டுப் பார்த்தால் எப்படியும் 18 மணிநேரம் வருகிறது. இப்பெண்கள் ஏன் தம் கணவர்களை சித்திரதை செய்து போட்டுத் தள்ளுவதில்லை?

மலம் அள்ளும் தொழிலாளர்கள் போலிசாரை விட மோசமான பணிச்சூழலில் மலக்கிடங்கில் இறங்கி நீண்ட நேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் ஏன் கொலை செய்வதில்லை?

நாங்கள் யாரும் செய்யாத கொலைகளை செய்வதற்கு போலிசாருக்கு மட்டும் எப்படி சிறப்புரிமை, அனுமதி கிடைக்கிறது? அதைத் தருவது யார்? கர்நாடகாவில் போராடும் மக்களை நோக்கிஅடேய், இப்போ இடத்தை காலி பண்ணலேன்னா பல்லை உடைப்பேன், ரேஷன் கார்டுகளை ரத்து செய்வேன்என மிரட்டிய, போலிசாரிடம் மக்கள் அடங்கிப் போகாவிட்டால் வேலைக்காகாது என வெளிப்படையாகவே ஊடகங்களிடம் சொல்லும் உங்களைப் போன்ற அதிகாரிகளா?


சிங்கம்அண்ணாமலை: மேலும், போலிசாரின் குடியிருப்புகள் மிகச்சின்னதாக உள்ளன. அவர்களுக்கு பெரிய வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என நானே பல அரசியல் தலைவர்களிடம் வேண்டியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அதை மதிக்கவில்லை


நம் கேள்வி: இந்தியாவில் கணிசமான மக்களுக்கு குடியிருக்க இடங்களோ குடிநீர் வசதியோ ஏன் கழிப்பறை கூட இல்லை. எத்தனையோ மக்கள் ஒண்டுக்குடித்தனங்களில், சேரிகளில், குடிசைகளில், நடைபாதைகளில் வசிக்கிறார்கள். அவர்கள் லத்தியுடன் சென்று எளிய வியாபாரிகளிடம் மாமூல் வசூலிக்கிறார்களா? சந்தேகத்தின் பெயரில் பிடித்துப் போய் எளிய மக்களை சித்திரவதை செய்கிறார்களா?

 இதை செய்வது ஒரு சில போலிசாரே என சொல்லாதீர்கள் - ஏனென்றால் மாமூலும் கஸ்டடி வதையும் ஒவ்வொரு காவல் நிலையத்தின் நடைமுறையிலும் உள்ளவை. இவை இல்லாத காவல் நிலையங்களே இல்லை

இந்த காவலர்களை விட கடும் துன்பங்களில் மூழ்கியுள்ள பல கோடி இந்தியர்கள் ஏன் பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் ஈகோவுக்காகவும் மக்களை மிரட்டுவதோ துன்புறுத்துவதோ மாமூல் வாங்குவதோ இல்லை. உடனே ரௌடிகள் இருக்கிறார்களே என வாதிடாதீர்கள் - எந்த ரௌடியும் தான் மனநெருக்கடியில், பதற்றத்தில் ரௌடியானதாய் இதுவரை சொன்னதில்லை


ஒரு கொடுங்குற்றத்தைப் பற்றி பேச்சு வரும் போது உடனே பாதிக்கப்பட்ட மக்களை விட்டுத் தாவி குற்றமிழைக்கும் தரப்பினரின் பிரச்சனைகளைப் பற்றிப் பேச எவ்வளவு திமிர்த்தனம் வேண்டும்! போலீஸ் வேலையை விட்டுவிட்டாலும் மனதளவில் நீங்கள் இப்போதும் பொதுமக்களை விரோதியாக பாவிக்கும் ஒரு போலீஸ்காரர் தான் போல. நீங்கள் ரஜினி என்கிற பாசிஸ்டுடன் கைகோர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. நாங்கள் ஏன் உங்களை எல்லாம் கர்நாடகாவுக்கு துரத்தாமல் விட்டிருக்கிறோம் என்பதில் மட்டுமே எங்களுக்கு ஆச்சரியம்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...