Skip to main content

Posts

Showing posts from March, 2020

முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது? (2)

                                                   விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் (1) சரி , நாம் எடுத்துக் கொண்ட நாவலுக்கு வருகிறேன் - மேலே சொன்ன அத்தனை சங்கதிகளும் ( இழப்புணர்வு , மிகுபுனைவு , கவித்துவம் , மனசஞ்சாரம் , இல்லாத மனிதர்கள் இருப்பது , நடக்காத சம்பவங்கள் நடப்பது ) இந்நாவலிலும் உண்டு - ஸ்குரு தஸாகி ஒரு ரயில்நிலைய பொறியாளன் . முராகாமியின் பிற நாயகர்களைப் போல இவனும் எந்த தனித்திறனும் அற்ற , யாரும் பெரிதாய் பொருட்படுத்தாத , அதைக்குறித்த எந்த கவலையும் அற்ற சாதாரணன் ; அன்றாட வாழ்வை எந்திரத்தனமாக வாழ்பவன் . நாவல் துவங்கும் போது அவன் தன்னுடைய தற்கொலை விழைவைப் பற்றி , மரணத்தைக் குறித்து தியானிப்பதைப் பற்றி சொல்கிறான் . அதற்குக் காரணம் அவனது நான்கு நண்பர்கள் - இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் . அவர்கள் அவனை ஒருநாள் அழைத்து நட்பைத் துண்டிக்கிறார்கள் . அவர்கள் இன்றி அவன் தன் வாழ்க்கை...

முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது? (1)

விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் (1) ஒருநாள் திடீரென “ இன்னிக்கு முராகாமி படிக்கணும் ” எனத் தோன்றியது . காரணமேதும் இல்லை . சும்மா அப்படி ஒரு மனநிலை . அவரது புத்தகங்களை சென்னையிலே விட்டு வந்திருக்கிறேன் என்பதை இப்போது அலமாரியில் தேடிய போது தான் தெரிந்தது . பல்கலைக்கழக நூலகத்தில் தேடினால் கிடைத்தது Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage நாவல் மட்டுமே . 2012 இல் ஜப்பானிய மொழியில் வெளியான இந்நாவல் ஒரே மாதத்தில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்றது . 2014 இல் ஆங்கிலத்தில் வெளியானது . படித்த மூன்று நாட்களில் இந்நாவல் என்னை மற்றொரு உலகுக்கு மந்திரக்கம்பாளம் போல தூக்கிச் சென்றது . இந்த விடுமுறை வாசிப்புக் குறிப்புகளில் முதலில் இந்த புத்தகம் பற்றி பேசுகிறேன் . முதலில் இது என்ன ஒரு சாதாரணத் தலைப்பு என நினைத்தேன் . ஆனால் வசித்து முடித்ததும் எவ்வளவு பொருத்தமான அழகான தலைப்பு எனத் தோன்றியது : Colorless Tsukuru Tazaki எனும் தலைப்பிலேயே நாவலின் plotline வந்து விடுகிறது . அது என்ன என அடுத்து சொல்கி...

கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை

டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன் - “ நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்க ” என கையை உதறும் டாக்டர்களைப் போல அன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார் . பவித்ரா அமெரிக்காவில் பலவருடங்களாக கொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர் . அவரிடம் சமூகவலைதளங்கள் வழி மக்களிடம் பரவி வரும் பல குழப்பங்கள் குறித்து கேள்விகள் பல கேட்டார்கள் . அவற்றில் ஒன்று கொரோனா எந்தளவுக்கு ஆபத்தானது என்பது . அதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமாகப் பட்டது : 1) கொரோனா என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல . Covid-19 எனும் இந்த வைரஸானது ஏற்கனவே (70 வருடங்களாக ) மனிதர்களிடம் இருந்து வரும் கொரோனாவின் ஒரு புதிய ஜென்மம் மட்டுமே . இது நுரையீரலை பாதிக்கும் ; அதனால் சளி , ஜுரம் போன்ற நோய்க்குறிகள் ஏற்படும் . இதே காரணத்தாலே இது பரவுவது எளிது . கொரோனாவின் ஒரே ஆபத்து அது சுலபத்தில் வேகமாய் பரவும் என்பது மட்டுமே . அதைத் தாண்டிப் பார்த்தால் அது மற்றொரு சளி / ஜுரம் ஏற்படுத்தும்...

தொகுப்பாளர்கள்

டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை கவனித்திருப்பீர்கள் - அவர்களுக்கு எதைப் பற்றியும் ஒரு கருத்திருப்பதாய் காட்டிக் கொள்ள மாட்டார்கள் ; எப்போதுமே ஒரு மிகையாக உற்சாகம் , மிகையான நம்பிக்கை , மிகையான அறிமுகம் , விவரிப்பு ... அதில் உள்ள செயற்கைத்தனம் அது ஒரு ‘ நிகழ்ச்சி ’ எனும் தோரணையை கொடுக்க உதவுகிறது . சூப்பர் சிங்ஙர் நிகழ்ச்சி தொகுப்பாளினி கீழ்ஸ்தாயில் பேசினால் “ பாடகர்கள் யாராவது இறந்து விட்டார்களா ?” என நாம் பதறிப் போவோம் . அவர்கள் கொண்டு வரும் தொனி , பிம்பம் , மிகை எல்லாம் ஒருவித மனநிலையை வெளிப்படுத்துகிறது ; அவர்களின் பேச்சு என்பது சாரமற்றது ; அது அமேசான குரியர் பேக்கிங்கைப் போன்றது . அல்லது ஆப்பிள் கணினியுடன் வரும் பேக்கிங்கைப் போன்றது . தொகுப்புரையில் சொல்லப்படும் எதற்கும் நேரடியான அர்த்தமோ மதிப்போ இல்லை ; ஆனால் ஒரு பேக்கிங்கைத் திறக்கையில் நமக்குக் கிடைக்கும் மனநிலையை இவர்கள் தருகிறார்கள் . அதற்கு மேல் எதையும் உணர்த்த முயலக் கூடாது என்பதே அவர்களுக்குக் கிடைக்கும் பயிற்சி . அவர்கள் சாதாரணமா...

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனும் விடாது கறுப்பு

நான் இங்கு அபத்தம் எனக் கூறுவது தனிநபர் சுகாதார நடவடிக்கைகளை அல்ல ; கொரோனா வந்தாலும் வராவிட்டாலும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது , ஒரே துண்டை பலர் பயன்படுத்தாமல் இருப்பது , வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பொதுவாக நல்லதே . ஆனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மாதக்கணக்கில் இருந்தாக வேண்டும் என நமது மருத்துவர்கள் சிலர் பரிந்துரைப்பது சுத்த பேத்தல் என்பேன் .   ஒன்று இது நடைமுறையில் ஏற்புடையது அல்ல . மக்கள் பரஸ்பரம் சந்திக்காமல் பேசாமல் நீண்ட நாட்கள் இருந்தால் அது கடுமையான உளச்சிக்கல்களை ஏற்படுத்தும் . சமூக இணக்கத்தை ஒழிக்கும் . அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் . அடுத்து , எந்த ரத்த பரிசோதனையும் செய்யாமல் ஒருவேளை யாருக்கு வேண்டுமெனிலும் கொரோனா தொற்று இருக்கலாம் எனும் கற்பனையின் அடிப்படையில் இந்த முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கோருவது ராத்திரியானால் ரத்தக்காட்டேரி உலவுகிறது , அதனால் பன்னிரெண்டு மணிக்கு மேல் வெளியே வராதீர்கள் என சில கிராமங்களில் நிலவு...

செக்‌ஷன் 375

“ செக்‌ஷன் 375” கடந்த வருடம் வெளியான மிகச்சிறந்த இந்திப் படங்களில் ஒன்று . இதை வழக்காடு மன்ற கருத்துமோதல் படம் (courtroom drama) என வகைப்படுத்தலாம் . தொண்ணூறுகள் வரை இத்தகைய படங்களுக்கு தனி மார்க்கெட் இருந்தது . இப்படங்களுக்கு என ஒரு டெம்பிளேட் உண்டு - ஒரு பரபரப்பான குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதாவார் . அவர் தான் அந்த குற்றத்தை செய்ததாய் பலத்த ஆதாரம் இருக்கும் . முதல் அரைமணிநேரம் நமக்கே இவர் தான் குற்றவாளி எனத் தோன்றும் . அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் எனும் நிலை . நமக்கு சற்றே அவர் மீது பரிதாபம் ஏற்படும் . அப்போது ஒரு வழக்கறிஞர் தோன்றுவார் ; அவர் இந்த வழக்கில் ஆபத்பாந்தனாக ஆஜராகி யார் எதிர்பாராத கோணத்தில் குற்ற விசாரணையை அலசுவார் ; விசாரணையிலும் அரசுத்தரப்பின் வாதங்களிலும் பிழைகளைக் கண்டறிவார் . வழக்கை முற்றிலும் ஒரு மாறுப்பட கோணத்தில் காட்டி நிஜக்குற்றவாளியை அம்பலப்படுத்துவார் .