Skip to main content

கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை


டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன் - “நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்கஎன கையை உதறும் டாக்டர்களைப் போல அன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார். பவித்ரா அமெரிக்காவில் பலவருடங்களாக கொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர். அவரிடம் சமூகவலைதளங்கள் வழி மக்களிடம் பரவி வரும் பல குழப்பங்கள் குறித்து கேள்விகள் பல கேட்டார்கள். அவற்றில் ஒன்று கொரோனா எந்தளவுக்கு ஆபத்தானது என்பது. அதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமாகப் பட்டது:
1) கொரோனா என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல. Covid-19 எனும் இந்த வைரஸானது ஏற்கனவே (70 வருடங்களாக) மனிதர்களிடம் இருந்து வரும் கொரோனாவின் ஒரு புதிய ஜென்மம் மட்டுமே. இது நுரையீரலை பாதிக்கும்; அதனால் சளி, ஜுரம் போன்ற நோய்க்குறிகள் ஏற்படும். இதே காரணத்தாலே இது பரவுவது எளிது. கொரோனாவின் ஒரே ஆபத்து அது சுலபத்தில் வேகமாய் பரவும் என்பது மட்டுமே. அதைத் தாண்டிப் பார்த்தால் அது மற்றொரு சளி / ஜுரம் ஏற்படுத்தும் வைரல் தொற்று மட்டுமே.

 அதாவது கொரோனா பீதி தோன்றுவதற்கு முன்பும் நமக்கு சளித்தொல்லை ஏற்பட்டிருக்கும் இல்லையா, அதுவும் மூன்றில் ஒன்று கொரோனாவால் ஏற்பட்டது தான், ஆனால் என்ன அது கோவிட்-19 வகை கொரோனா இல்லை என்பது தான் வித்தியாசம். இப்போது பரவி வருவது சற்று வீரியம் கொண்ட ஒரு தூரத்து உறவு வைரஸ் மட்டுமே அன்றி அது உலகை அழிக்கக் கிளம்பி வந்த ஒரு படுபயங்கர கிருமி அல்ல. ஏற்கனவே நமக்குப் பரிச்சயமான ஒரு கிருமி தற்போது ஒரு முகமூடி போட்டுக்கொண்டு புதிய ஆயுதங்களுடன் வந்திருக்கிறது. அந்த ஆயுதங்களும் ஒன்றும் அணு ஆயுதம் அல்ல. இது தான் அடுத்த முக்கிய கருத்து.
2) மக்களில் 96.5% பேர்களை இந்த கொரோனா வைரஸ் கொல்லாது. 3.5% மக்கள் தாம் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள். இந்த 3.5% கூட ஏற்கனவே ஆரோக்கியம் இல்லாதவர்கள் தாம். குறிப்பாக வயோதிகர்கள். வயோதிகர்களில் பல வியாதிகள் கொண்ட, சுலபத்தில் பல தொற்றுகள் பெறும் வாய்ப்புள்ள, தொற்று வியாதி வந்தால் அதை சமாளிக்கும் தற்காப்புத்திறன் அற்றவர்கள். அதாவது நூறு பேரில் மூன்று நான்கு பேர்கள் சாவார்கள் எனப் பொருளில்லை - இதைத் தான் நாம் கவனிக்க வேண்டும்; நூறு பேரில் ஏற்கனவே மோசமான உடல்நிலையுடன் இருக்கிற 3.5% பேர் தாம் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள். யோசித்தால், இத்தகைய பலவீன உடல்நிலை கொண்டவர்கள் எந்த ஒரு வைரல் தொற்று வந்தாலும் மரணிக்கக் கூடியவர்களே. நீங்களே கவனித்திருப்பீர்கள், மழைக்காலத்தில் வைரல் ஜுரம் பரவும். அப்போது வயதாகி பல பிரச்சனைகளுடன் போராடி படுக்கையில் ஓய்வெடுக்கும் ஆட்கள் திடீரென ஜுரம் வந்து இறந்து போவார்கள். மழை / பனிக்காலத்தில் வயசாளிகள் இறந்து போவது போலத் தான் கொரோனா காலத்தில் அவர்கள் இறக்கப் போகிறார்கள். இப்போது கொரோனா பீதியின் போது இத்தகைய மரணங்கள் காக்காய் அமர்ந்து பனம்பழம் விழுந்ததைப் போல ஆகி விடுகிறது.

கோவிட்-19 வழக்கமான ஒரு வைரஸ் தான் என்றால் ஏன் இப்படி பரபரப்படைகிறோம்? ஏன் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்?

இது ஒரு புதிய வைரஸ் என்பதால் இதற்கான மருந்தோ தடுப்பு மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆக, அரசாங்கங்கள் உலகம் முழுக்க பீதி அடைந்து மக்களைத் தனிமைப்படுத்தி வியாதி பரவுவதை தடுக்க முயல்கின்றன. ஊடகங்கள் இதை ஊதிப்பெருக்கி கொரோனா பயத்தை அதிகப்படுத்துகின்றன. வாட்ஸ்-ஆப் பார்வர்டுகள் இந்நிலையை இன்னும் மோசமாக்குறது. ஆக அரசின் நடவடிக்கைகளும் ஊடகங்களும் தாம் கொரோனா பீதிக்கு காரணமே ஒழிய பெருமளவு மக்கள் இதனால் பலியாகியுள்ளதால் அல்ல.

யார் கவலைப்பட வேண்டும்?
ஆஸ்துமா நோயாளிகள், புற்றுநோய் உள்ளவர்கள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பண்ணிக் கொண்டவர்கள், கட்டுப்படுத்தாத ரத்த சர்க்கரை கொண்டவர்கள், வேறுபல தீவிர நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் நிச்சயம் கவலைப்பட வேண்டும்.

யார் அதிகம் கவலைப்பட வேண்டாம்?
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா வந்தால் பெரிதும் பாதிக்காது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஏன் கொரோனா அவர்களிடம் மட்டும் கருணையுடன் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

யார் கவலைப்பட வேண்டாம்?

நம்மில் ஆரோக்கியமானவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு சில நாட்கள் தும்மல், ஜுரம் என ஏற்பட்டு கொரோனா நம்மிடம் பிரியாவிடை பெற்று அடுத்தவர்களிடம் சென்று விடும்.

அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?
வாட்ஸ்-ஆப்பை அடுத்து வரும் சில வாரங்களுக்கு படித்து மண்டை குழம்ப வேண்டாம்.


ஏப்ரல் மாதத்தில் இருந்து நாம் வேலைக்குத் திரும்புவது நல்லது. இல்லாவிட்டால்  ஏற்கனவே நிர்மலா சீத்தாராமன் அழித்து முடித்த இடத்தில் இருந்து கொரோனா பீதி நம் பொருளாதாரத்தை புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி விடும்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...