Skip to main content

Posts

Showing posts from December, 2019

நிதியமைச்சரின் புதிய அறிவிப்பு - அரசு தன் நிலைப்பாட்டை மாற்றுகிறதா?

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் இன்றைய அறிக்கை அரசு வரும் ஐந்தாண்டுகளில் 102 லட்சம் கோடி ரூபாயை உள்கட்டமைப்பு பணிகளுக்காக செலவழிக்கப் போவதாய் சொல்கிறது .  நம்ப முடியவில்லையே ! வழக்கமாக பெரும்பகுதி பணத்தை ராணுவம் , தடுப்பு முகாம் எனத் தானே செலவழிப்பார்கள் . இது ஒரு நல்ல திருப்பமே . இந்த முதலீடு எளிய மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உண்டு பண்ணித் தர வேண்டும் .   ஆனால் விபரமாய் பார்க்கும் போது சொற்பமான தொகை மட்டுமே விவசாயத்துக்குப் போவது இந்த அரசு இன்னமும் நமது பொருளாதார சீரழிவின் ஆதாரக் காரணத்தை புரிந்து கொள்ள வில்லை என்பதைக் காட்டுகிறது . விவசாயத்திற்கும் ஆரம்பநிலை தொழில்முனைவோருக்கும் இலவசமாய் மின்சாரமும் கட்டமைப்பு வசதிகளையும் பண்ணித் தர வேண்டும் . கல்விக்கும் கூடுதலாய் பணம் செலவழிக்க வேண்டும் .

கோலமாவு அரசியல்

CAA, NRC க்கு எதிராக கோலமிட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்கள் ஒரு புது மாதிரியான போராளிகள் - ஹமீம் முஸ்தபா சொல்வதைப் போல அவர்கள் பண்பாட்டு மொழியை கையில் எடுத்திருக்கிறார்கள் , தர்க்கரீதியான அரசியல் மொழியை அல்ல . அரசு பண்பாட்டு எதிர்ப்பரசியலையே அதிகம் கவனத்தில் கொள்ளும் , அஞ்சும் , அச்சுறுத்தும் . ஜெயலலிதாவும் தன் ஆட்சியில் கலைஞர்கள் தன்னை எதிர்க்கும் போது கைது , தாக்குதல் என கடுமையாய் எதிர்வினையாற்றிருக்கிறார் , ஆனால் அரசியல் எழுத்தாளர்களை அவர் பொருட்படுத்தியதில்லை .  

பாதி வழியில் இறங்கி விடும் எழுத்தாளர்கள்

சில எழுத்தாளர்கள் எழுதுவதை பாதியில் நிறுத்தி விடுவதைப் பற்றி மூத்த கவிஞரான ஒரு நண்பரிடம் உரையாடும் போது அவர் ஒரு சுவாரஸ்யமான அவதானத்தை வைத்தார் - “ நாம் அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதால் எழுதுவதை நிறுத்துவதில்லை , எழுதுவதை நிறுத்துவதற்காக இந்த பிரச்சனைகளை ஒரு சாக்காக பயன்படுத்துகிறோம் .” எனக்கு ஊரில் ஒரு நண்பர் இருந்தார் . நாகர்கோயிலில் இருந்து தக்கலைக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அவருடன் அடிக்கடி பேருந்தில் பயணிப்பேன் . இலக்கியம் , கலை , அரசியல் என பேசிக் கொண்டு செல்வோம் . ஒரே பிரச்சனை டிக்கெட் எடுத்த நிறுத்தத்தில் ஒருநாளும் இறங்க மாட்டார் - ஏதாவது ஒரு இடத்தில் திடீரென இறங்கி விட்டு அங்கு யாரையாவது பார்க்கலாம் என்பார் . பிறகு அங்கிருந்து ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டிருந்த இடத்துக்கு செல்வோம் . “ ஏண்ணெ இப்படி பண்றிங்க ?” என ஒவ்வொரு முறையும் கேட்பேன் . அவரது பதில் “ நினைச்ச எடத்துக்கு போறதில என்ன ஒரு இது இருக்கிடே . எதிர்பார்க்காத மாரி ஏதாவது நடக்கணும் . தினமும் டக்க...

2019இல் கிரிக்கெட்: மட்டையாளர்கள் வந்தார்கள் வென்றார்கள்

நாட்டுப்புறக் கதைகளில் ஒரு நாட்டில் பேரழகியான இளவரசி ஒருத்தி இருப்பாள் . அவள் ஒரு யாரும் குணப்படுத்த முடியாத வியாதியால் மரணப்படுக்கையில் கிடப்பாள் . அரசர் பரிதவித்துப் போவார் . அவளை குணப்படுத்துவோருக்கு தேசத்தையே பரிசாய் அளிக்கிறேன் என்பார் . பேராசைக்கார மருத்துவர்கள் யாராலும் குணப்படுத்த முடியாது . இளவரசியின் மரணத்தை யாரும் தடுக்க முடியாது எனும் நிலை ஏற்படும் போது ஒருவன் வருவான் . அவன் சுலபத்தில் அவளைக் காப்பாற்றி நாட்டின் மன்னன் ஆவான் . உலக கிரிக்கெட்டின் நிலையும் அவ்வப்போது இப்படித் தான் - டெஸ்ட் ஆட்டம் செத்து விட்டது , ஒருநாள் ஆட்டம் அலுத்து விட்டது , டி -20 தேவைக்கதிகமாய் ஆடப்படுகிறது , கிரிக்கெட் வெறும் சிக்ஸர் அடிக்கும் கூத்தாகி விட்டது , நிதானமான கச்சிதமான ஆட்டத்துக்கு மதிப்பில்லை எனும் குற்றச்சாட்டுகளும் ஒப்பாரிகளும் விண்ணைப் பிளக்கும் , ஆனால் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட்டில் அபாரமான சாதனைகளும் அற்புதங்களும் நடக்கும் ; கிரிக்கெட் இப்போதும் , சமீபமாய் நடந்து முடிந்த இந்தியா - மே . இ தீவுகள...

ஆழ்துயிலும் தூங்கும் நேரமும்

நாம் தூங்க செல்லும் போது முதலில் உடம்பு தளரத் தொடங்கும் ; கண்கள் சொருகும் ; மெல்ல மெல்ல எண்ணங்கள் கலக்கமடையும் ; குட்டை குழம்ப குழம்ப நிறங்கள் அங்க மங்க நாம் ஏதோ ஒரு தருணத்தில் தூக்கத்துக்கு செல்வோம் . இதை ஆரம்பநிலை லகு உறக்கம் என்கிறார்கள் . இதன் அடுத்த கட்டத்தில் நம் மூளையின் அலைகள் மெதுவாக எழுந்து விழுகின்றன ; இதயத்துடிப்பு குறைகிறது . இதுவும் லகு உறக்கம் தான் . நாம் எட்டு மணிநேரம் உறங்கினால் நான்கு மணி நேரம் இந்த இரண்டாவது நிலையாக இருக்கும் என்கிறார்கள் . இதற்கு அடுத்த இரு நிலைகள் தாம் ஆழ்துயில் நிலைகள் .  இப்போது ரத்த அழுத்தம் குறையும் , கண்களில் அசைவிருக்காது , மூச்சு ஆழமாய் , மெதுவாய் நுழைந்து வெளியேறும் , உடம்பு சிலை போலக் கிடக்கும் . இந்த இரு நிலைகளும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம் - வளர்ச்சிக்கும் செரிமானத்துமான ஹார்மோன்கள் சுரக்கும் . தசைகளுக்கு அதிகமாய் ரத்தம் பாய்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும் . அடுத்த நாள் பசி அதிகம் தோன்றாமல் இருக்க உதவும் . 

இந்திய ஒருநாள் அணியின் சவால்கள் - கீப்பிங் மற்றும் ஆல்ரவுண்டர்கள்

ஸ்டம்புக்கு முன்னால் பந்தைப் பிடித்த அபத்தம் சமீபமாக பண்டின் விக்கெட் கீப்பிங் மிக மட்டமாக இருக்கிறது - அதுவும் இன்று நடந்த மே . இ தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் அவர் விட்ட மூன்று விக்கெட்டுகள் தாம் இந்த 315 ஸ்கோருக்கு காரணமாகியது . அதுவும் சில பந்துகளின் போது அவர் பந்து செல்லும் திசைக்கு நேர் எதிர் திசை நோக்கி நகர்வது காண வேடிக்கையாக இருந்தது ; ஒரு ஆட்டத்தில் பந்தை அவர் ஸ்டம்புக்கு முன்னால் வந்து பிடிக்க நடுவர் அதை நோ பாலாக அறிவித்தார் . அதைக் கண்டு உலகமே சிரித்தது . பண்ட் ஒரு இயல்பான கீப்பரும் அல்ல ; பந்தை கவனித்து அதன் திசையை கணித்து கால்களை நகர்த்தி முன்னேறுவது அவருக்கு வராது . நின்ற நிலையிலே கைகளைக் கொண்டு பிடிப்பதே அவரது பாணி . தட்டையான ஆடுதளங்களில் சாதாரண பந்து வீச்சுக்கு எதிராக இது எடுபடும் என்றால் சிக்கலான ஆடுதளங்களில் பந்து திரும்பிட ஸ்விங் ஆக அவர் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் ஆட்கள் பங்களாவில் பொருட்களைப் போட்டு உடைப்பதைப் போல கன்னாபின்னாவென கீப்பிங் ...

ஒரு அட்டகாசமான இறுதி ஆட்டம்

கட்டக்கில் நடந்த இந்தியா - மே . இ தீவுகள் ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டம் நான் கண்ட மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டங்களில் ஒன்று - என் கணிப்புப்படி ரிஷப் பண்டின் விக்கெட்டுடன் ஆட்டம் முடிந்து விட்டது . ஏனென்றால் கோலி இலக்கை விரட்டும் போது ஆபாரமான சாதனையாளர் என்றாலும் அவருக்கு துணையாக மத்திய வரிசையில் யாராவது அதிரடியாக ஆட வேண்டும் . அல்லாவிடில் அவர் சோர்ந்து தவறான நேரத்தில் ஆட்டமிழந்து விடுவார் . ஆனால் இன்று ஒரு பக்கம் விக்கெட்டுகள் உதிர அவர் உறுதியாக நிதானமாக புத்திசாலித்தனமாக ஆடினார் . அதுவும் பந்தை தூக்கி அடிக்காமல் , ஸ்டம்புக்கு குறுக்கே ஆக்ரோசமாய் பந்தை விளாசாமல் 30-45 ஓவர்கள் வரை அவர் ஆடி தொய்வின்றி ரன்கள் சேகரித்த விதம் அவரது கட்டுப்பாட்டுக்கு , தன்னம்பிக்கைக்கு சான்றாக அமைந்தது . இன்னொரு பக்கம் 25 வது ஓவருக்கு சற்று முன்பிருந்தே மே . இ தீவுகளின் வேக வீச்சாளர்கள் அபாரமாய் வீசிக் கொண்டிருக்க அவர்கள் களத்தடுப்பின் தீவிரம் , மும்முரம் ஆட்டத்தை பரபரப்பாக்கியது . ஆடுதளத்தில் அவர்களுக்கு உதவ ஒன்றும...