Skip to main content

இந்திய ஒருநாள் அணியின் சவால்கள் - கீப்பிங் மற்றும் ஆல்ரவுண்டர்கள்

ஸ்டம்புக்கு முன்னால் பந்தைப் பிடித்த அபத்தம்

சமீபமாக பண்டின் விக்கெட் கீப்பிங் மிக மட்டமாக இருக்கிறது - அதுவும் இன்று நடந்த மே. தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் அவர் விட்ட மூன்று விக்கெட்டுகள் தாம் இந்த 315 ஸ்கோருக்கு காரணமாகியது. அதுவும் சில பந்துகளின் போது அவர் பந்து செல்லும் திசைக்கு நேர் எதிர் திசை நோக்கி நகர்வது காண வேடிக்கையாக இருந்தது; ஒரு ஆட்டத்தில் பந்தை அவர் ஸ்டம்புக்கு முன்னால் வந்து பிடிக்க நடுவர் அதை நோ பாலாக அறிவித்தார். அதைக் கண்டு உலகமே சிரித்தது. பண்ட் ஒரு இயல்பான கீப்பரும் அல்ல; பந்தை கவனித்து அதன் திசையை கணித்து கால்களை நகர்த்தி முன்னேறுவது அவருக்கு வராது. நின்ற நிலையிலே கைகளைக் கொண்டு பிடிப்பதே அவரது பாணி. தட்டையான ஆடுதளங்களில் சாதாரண பந்து வீச்சுக்கு எதிராக இது எடுபடும் என்றால் சிக்கலான ஆடுதளங்களில் பந்து திரும்பிட ஸ்விங் ஆக அவர் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் ஆட்கள் பங்களாவில் பொருட்களைப் போட்டு உடைப்பதைப் போல கன்னாபின்னாவென கீப்பிங் பண்ணுகிறார் - கை வடக்கே போனால் கால் தெற்கே பறக்கிறது. எப்போது முகத்தில் ஒரு அசட்டு சிரிப்பு வேறு. இப்போதைக்கு உலகின் மிக மட்டமான கீப்பர் பண்ட் தான். அவரை பேட்ஸ்மேனாக மட்டுமே ஆட வைப்பதே நம் அணியின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

 பண்டின் குறைகள் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் அவர் தனது கீப்பிங் பழுதுகளை சரி செய்ய பல மாதங்களோ சில வருடங்களோ கூட ஆகலாம். பண்டுக்குப் பதிலாக தோனியை கீப்பராக்கலாம்; ஆனால் அது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டும் தான். சாம்சனை முயலலாம், ஆனால் அவரும் கூட நல்ல கீப்பரல்ல. கெ.எல் ராகுலும் அப்படியே. இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் விக்கெட்டுகளே ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் என்பதால் கீப்பிங் மிகவும் முக்கியமாகிறது. ஆகையால் அடுத்து ஒரு தோனி தோன்றும் வரை ஒரு நல்ல கீப்பர் சுமாரான பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரை ஆட வைப்பதே தோதானது (கெ.எஸ் பரத்தை முயலலாம்). அடுத்து, கேதார் ஜாதவ் உடனடியாய் ஓய்வுபெறுவதே அவருக்கும் இந்த உலகுக்கும் நல்லது.

அடுத்து பவுலிங். பும்ராவும் பாண்டேவும் திரும்ப வந்த பின் இந்தியாவின் பவுலிங் நேர்த்தி கூடும் என்றாலும் மைய ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்தும் திறனை நாம் இழந்து விட்டோம். அதை மீட்க சாஹல் மற்றும் குல்தீப்பை இணைந்து ஆட வைக்க வேண்டும். இரண்டு ஆல்ரவுண்டர்கள் (பாண்டே, ஜடேஜா), இரண்டு கால்சுழலர்கள், இரண்டு வேகவீச்சாளர்கள் என்பதே சரியான பந்து வீச்சுக் கூச்சணியாக இருக்கும். கீப்பரையும் சேர்த்து ஐந்து பேட்ஸ்மேன்களையே ஆட முடியும். அந்த பட்சத்தில் பண்டின் இடத்தில் சாம்சனை ஆட வைக்கலாம். அல்லது ஒரு கால்சுழலரின் இடத்தில் ஒரு கீப்பரை கொண்டு வர வேண்டும். வேகவீச்சாளர்களுக்கான ஆடுதளம் என்றால் மூன்று வேகவீச்சாளர்கள் + பாண்டியா + ஜடேஜா என எண் எட்டு வரை பேட்டிங் வரிசையுடன் இறங்கலாம். தட்டையான ஆடுதளம் என்றால் ஒரு பேட்ஸ்மேன் + வேகவீச்சாளரைக் குறைத்து இரு கால்சுழலர்களை கொண்டு வரலாம்; ஆறு பவுலர்களுடன் ஆடலாம். என் 5-8 வரை கீழ்மத்திய வரிசையினர் அதிகமாய் ரன்கள் அடிப்பது அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாக இருக்கும். அப்போது கீப்பர் எனும் புதிரை அவிழ்ப்பதே கோலிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...